நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வலை வீசப்போகிறேன் [என்னது அப்புடியா!!!]



      இந்த போட்டோவை அழுத்தினால்  வலைக்குள் விழுந்துடுவீங்க


அன்பு நெஞ்சங்களே!
நீரோடையின் நீரோட்டம் நாளையிலிருந்து 1 வாரத்திற்க்கு வலைச்சரத்திற்க்குள் ஓடப்போகிறது ஆகையால் இந்நீரோடையின் நீரோட்டதில் சல சலப்பு சற்று அடங்கியே இருக்கும்
இங்கு வந்து ஆதரவு தரும் அனைவரும் அங்கேயும் வந்து என் பணியை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பாவம் இந்த பச்சபுள்ள ஆரம்பப்பாடம் படித்துக்கொண்டிருப்பதபோய் ஆசிரியர் பணிக்கு அழைத்துள்ளார்கள். நம்மையும் நம்பி அழைத்தவர்களுக்கு நல்லபடியாக பணியை முடித்துக்கொடுக்கனுமுல்ல எல்லாம் உங்ககையில்தான் இருக்கு. ஆத்தி உங்களையெல்லாம் நம்பித்தான் கையில் பிரம்பில்லாமல் அன்பைக்கொண்டு போகிறேன் வந்துடுவீகல்ல வந்துடுவீக
வந்துடுங்க மக்கா..

என்னை அன்போடு ஆசிரியர் பணிக்கு அழைத்த வலைச்சரத்தின்
சீனா சார் அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வேண்டாம் இனி வரவுகள்..



 ம்மா என்றால்
அகிலமும் போற்றுகிறது
அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்
எங்களால் மட்டும் முடியவில்லையே
உங்களை நேசிக்க!
உங்களோடு சுவாசிக்க!

ந்து நிமிடம்
யோசிக்கமறந்த உங்களால்
அசிங்கமாகிப் போனேமே
அனாதையாக ஆனோமே

ள்ளத்தனம் செய்துவிட்டு
கருவில் கலைக்க வழியின்றி
பத்துமாதம் எப்போது கழியுமென
பயந்துப் பதுங்கிச் சுமந்து
பாசமே இல்லாமல்
பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே!
பச்சோந்தியாக ஆனவர்களே!

தாறித்தனம் செய்துவிட்டு
உயிருள்ள எங்களை
உயிரற்ற ஜடமாக்கி
உதறிவிட்டுபோவது நீங்கள்
உம்போன்றோர்களின் செயல்களால்
ஊரடிபடுவதும் உருக்குலைவதும்
ஒன்றுமறியாத எம்போன்ற
உள்ளம் ஊமையான பிஞ்சுகள்

கூடிக் கூடி குலாவி
கும்மாளமிட்ட நீங்கள்
கொஞ்சமும் இரக்கமில்லாமல்
கூளமாக்கி எங்களை
குப்பைத் தொட்டியை நிரப்பிய
கொடும்பாவிகள்

ரக்கமற்ற அரக்கர்களாய்
இதயமில்லாது போனது ஏனோ?
இச்சையின்மேல் இன்பம்கொண்டு
எங்களை எச்சிலையாக்கிடத்தானோ

சூழ்நிலைகள் காரணமென
சூத்திரம் செய்யாதீர்
சூடுபட்ட ரணங்களோடு-நீங்கள்
சுமந்த சிசுக்களை
சித்ரவதை செய்து
சிதைத்துக் கொல்லாதீர்

ங்களோடு முடியட்டுமே!
அனாதைகளென்ற வரவுகள்
எத்தனைபேர்கள் ஆதரவளித்தபோதும்
அவர்களெல்லாம் ஆகமாட்டார்களே
எங்களை ஆரத்தழுவும் அம்மாக்கள்...

தமிழ்குறிஞ்சியில் வெளியான கவிதை
நன்றி தமிழ்குறிஞ்சி இணைய இதழ்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கண்ணீரால்...


ருவமில்லாச் சோகம்
உள்ளத்தின் வழியே உதிரத்தில்
ஊடுருவிச் சென்று -நிம்மதியை
உதிர்க்கப் பார்த்து

வாடி உதிரும் வருத்தம்
வகை வகையாய்
வரிசைப் படுத்தி
வஞ்சையில்லாமல் வதைத்து

ரறியா மனஉளைச்சல்
உள்ளுக்குள் உருகியோடி
உடலை வாட்டி
உயிரை உலரவிட்டு உதிர்த்து

ன்னம்பிக்கையை தளரச்செய்ய
தாரை தாரையாய் –தாடையைத்
தடவி தவிக்க வைத்து

சொட்டு சொட்டாய்
பட்டுக் கன்னம் வழியே
உதட்டை உரசிசென்று
உப்புக் கரிப்பால்
உள்ளத்தை சிதைக்கப் பார்த்து

சியும் மவுனமாய்
கரையும் கண்ணீர்-மன
கஷ்டத்தை கடைந்தெடுத்து- பின்
மெல்ல மெல்ல மனதை தேற்ற
கரைந்த கண்ணீரே ஆறுதலும் தருகிறது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஓ[டோ]டி வா.



தமிழ்குறிஞ்சி
 

 இந்த கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புரட்டிப் பார்க்கிறேன்..

தொடர்.. . பச்சபுள்ள  தொடர்ந்து பேசுமா மூச்சுவாங்குமுள்ள அதேன். சரி சரி என்னை முறைக்காம படிச்சிட்டு போங்க..

அந்த அசம்பாவிதம் நடக்கயிருந்ததை இறைவன் தடுத்துவிட்டான் நீர்வீழ்ச்சியின் தாகம் தீர்த்துவிட்டு அனைவரும் மேலே ஏறுவதற்கு திரும்பிகொண்டிருந்த வேளையில் செங்குத்தாக இருக்கும் மலையின்

அடியிலிருந்து பலசாலியான ஆணகள்மட்டும் ஏறிகொண்டிருந்தார்கள் நாங்கள் எவ்வழிவந்தமோ அதே 2 கிலோமீட்டருக்கு திரும்பிபோய்தான் ஏறவேண்டுமென்று போய்கொண்டிருந்தோம்

எங்களோடு வந்த ஆண்களின் சிலர்மட்டும் அந்த செங்குத்தான பாதையின்பக்கம் ஏறிகொண்டிருக்க திடீரென்று மரூஃப் ஏறிவிட்டான் கண்மூடி திறப்பதற்க்குள் சர சரவென மலையின் பாதியளவு போனதும் போய்சேரும் வழியைவிட்டு வேறுபாதையில் அவன்மட்டும் நின்றபடி மம்மின்னு சத்தம். கீழே நின்ற எங்களுக்கு சப்தநாடியும் அடங்கியதுபோல் நீ ஏம்மாபோனாய் என்று சொல்லிகொண்டிருக்கும்போதே மேல்மலைகளிலிருந்து கடகடவென கற்கள் உருண்டுவர ஆரம்பித்து மரூஃப்பின் நெற்றியைநோக்கிவர கீழிருந்து நாங்கள் சத்தமிடுகிறோம் தலையை அப்புறமாக சாய்த்துகொள் ஜாக்கிரை ஜாக்கிரதையாக பிடித்துக்கொள்என்று அலறுகிறோம் நாங்கள் அதிகம் அலறினால் எங்கேபயந்துவிடுவானோ என்று. பார்த்து ஏறு பார்த்து இந்த பக்கமாகவா என்று அவன் மேலேயேறி வந்தடைவதற்குள் எங்கள் உயிர் எங்களிடமில்லை அதன்பின்னே சென்ற எங்கள் ஆண்களும் மேலேறியபின்புதான் எங்களுக்கு மீண்டும் உயிர்வந்ததுபோல் ஆனது.

இச்சூழலிலும் காப்பவன் இறைவன் என்பதை கண்முன்னே உணரவைத்தான் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..

ஜூலை.

கொழுந்துவிட்டு எரிந்த பாலையில். சார்ஜா பகுதியில் கரண்டு கட்டாகி எங்களை கானலில் குளிக்கவைத்து அல்லல்படுத்தி காரிலேயே ஒருநாள் இரவு கிடந்த அவதிப்பட்டது.

ஜூலை 10 ந்தேதி என்கவிதை அமெரிக்காவில் தோழி விஜியால் வாசிக்கப்பட்டு கவிஞர் தாமரை கைகளால் சர்பிக்கெட் வாங்கியது

.ஜெய்லானி அண்ணாத்தேயின் பொற்கரங்களால் விருதுவாங்கியது

அன்றே எனது 200வது பதிவுகுழந்தையை ஈன்றது [நீரோடையில் மட்டும்]
ஜூலை 30 ந் தேதி நான் மட்டும் போவதாக இருந்த பயணம் 3.30 பிளைட் 2 மணிக்கு சொல்கிறேன் குழந்தைகளையும் அழைத்து செல்கிறேன் என்று

எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியிலும் என் மச்சான் என் குழந்தைகளுக்காக டிக்கெட்எடுத்து தந்து அவசர அவசரமாக ஏர் இந்தியா பிளைட்டைபிடிக்க ஓடியது

4.மணிநேரம் பயணதிற்குபின் இந்தியா வந்திறங்கினால். பழைய ஃபாமை கொடுத்துவிட்டோம் இந்த புது ஃபாமை நிரப்பிதந்துவிட்டுபோங்களென்று

வந்த அனைவரையும் அங்கே 2 மணிநேரம் நிற்கவைத்து .அதனால் அங்கு வந்தவர்கள் கோபமாகி கத்த.என்னதான் ஆனாலும் அவர்கள் செய்த தவறை ஏற்றுக்கொள்ளமறுத்து ஃபாமை ஃபுல் செய்துகொடுத்த பின்புதான் வெளியில்விட்ட கொடுமை. அப்பாடா என்று என் தாய்நாட்டின் மண்ணைமிதித்ததும் தனிதெம்பு வந்ததென அம்மாதம் கடந்தது.

ஆகஸ்ட்.

என் ஊரிலுள்ள சொந்தங்களனைத்தையும் கண்டு களித்தது எங்கள் வீட்டுற்கு சகோ காஞ்சிமுரளியும். அண்ணியும். மருமகளும் வந்தது
முதன்முதலாக அவர்களை கண்டபோது சகோதரதுவத்தின் பாசத்தை உணர்ந்தது.பல நல்ல உள்ளங்களை சந்திக்க வாய்ப்புகிடைத்தது.

பலவருடங்களுக்குபின் நோன்பின் முதல் 10.என் தாய் தங்கை .மற்றும் என் உறவுகளோடு கூட இருந்தது. மரணத்தருவாய் ஒன்றை நேரில் கண்டது. மீண்டும் பாலைவனம் வந்து சேர திருச்சி ஏற்போட்டுக்கு வந்தால் [ஏர் இந்தியா விமானத்தில் முதல் தடவையாக]அங்கு அவர்கள் செய்த செயல்கள் சே என்றானது இனி அந்த பிளைட் பக்கமே தலைவைத்துபடுக்கூடாதென்ற அளவுக்கு அலைச்சலை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்தது. வந்த மறுநாள் பக்கத்து பில்டிங்கிலிருக்கும் பெண்மணி எப்போதும் பார்த்துக்கொண்டால் பேசிகொள்ளும் பழக்கம்.எனக்கு முதல் வாரம் அதே பிளைட்டில் வந்தாங்கலாம் அவங்களும் அவங்க குடும்பத்தையும். எங்களை திருச்சி விமானநிலையத்தில் படுத்திய அதே சம்பவத்தை சொல்லி அவர்களை படுத்திய பாட்டில் பிளைக்குட்டுள் வந்தமர்ந்து பார்க்கும்போது கையிலிந்த 2 பவுன் கைச்செயின் மிஸ்சிங்காம் என்னத்தச்சொல்ல,நாங்கள் சொன்னதைபோலவே இனிமே............அப்படின்னு சொல்லிச் சென்றார்கள். அப்புறம் சுதந்திரதின அன்றுதான் எங்களின் சுதந்திரதிற்கு நாள்குறிக்கப்பட்டது அதாவது நிச்சயதார்தம்.அந்தநாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே அப்படியாக என அம்மாதம் கழிந்தது.

செப்டம்பர்

ஆகா அருமையான தருணம் நோன்புப்பெருநாள். சார்ஜாவின் பெருநாள் திடல் மக்காவின் ஒருபகுதி மக்களைகொண்டதாக காட்சிதந்தது கண்களையும் மனதையும் குளுர்வித்து சாந்தியடைச்செய்தது,

அடுத்த நாள் அல் அயின் சென்று ஆட்டம் போட்டுக்கொண்டே ஆசியாக்காவிற்கு போன்செய்து வரச்சொல்ல்லாமுனு போட்டா அக்கா வேறு இடத்தில் இருப்பதாக சொன்னார்கள்.[கூப்பிட்டதும் பயந்துட்டாங்கபோல இன்னக்கி நம்மள தாளிக்கபோறா மலிக்கான்னு ஹா ஹா யாரும் இதபோய் ஆசியாக்காவிடம் சொல்லிறாதீங்கப்பு] அன்றிரவு 3.30 அங்கே குப்பைகளுக்குள் குச்சியை வைத்து தேடி பிளாஸ்டிக் டின் பேப்பரென தனித்தனியே எடுத்துகொண்டிருந்ததையும் அங்கிருக்கும் அர்ஜெண்ட் பாத்ரூம்களை கிளீன் செய்துகொண்டிருப்பதையும் கண்டபோது நாடுவிட்டு நாடுவந்து தன் நாட்டில் செய்யவெக்கப்படும் சிலபல செயல்களைக்கூட வெளிநாட்டில் செய்யகூடிய சூழல் உருவாகிவிடுகிறதேயென எழுந்த எண்ணம் மனவருத்ததை தந்தது.

முதன் முதலில் நானாக மூவிமேக்கரில் கவிதை வடித்ததுயென அம்மாதம் கடந்தது.

.அக்டோபர்

பேஷ்புக்கில் நான் எழுதிய கவிதை ”வாய்பும் வியப்பும்” முதலிடத்தை பெற்றது. நிறைய முறை சென்றிருந்தாலும் சிலயிடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டும் அதுபோல் அபுதாபி பெரிய பள்ளிக்கு சென்று அந்தபள்ளியின் அழகை கண்டு மகிழ்ந்து. அங்கிருந்து ஹுசைனம்மாவிற்கு போன்செய்துபேசியது.அப்படியே அங்கிருக்கும் பீச்சிற்கு சென்று மீன் சுட்டு சாப்பிட்டது. என அம்மாதம் கடந்தது.

நவம்பர்

எல்லாம் வழக்கம்போல் நடந்துகொண்டிருந்தது. ஹஜ் பெருநாள் ஒரு புதிய வரவின் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம். எதிர்பாராமல் எங்க ஊர்பசங்களும்[அதிரை] எல்லாம் ஒன்றாக வர ரொம்ப சந்தோஷமாக இருந்தது.என் அன்புமகன் முதல் முதலில் கவிதையொன்று எழுதியமாதம் இது.

சார்ஜா வந்து பழக்கமானவங்க அபி. அவங்க்கூட பேசிக்கிட்டு இருந்தபோது அவங்க சொல்லிய ஒருவிசயம் அதர்ச்சியை தந்தது அவங்க மார்கெட் போய்வரும்போது பின்னாலேயே ஒரு ஆள் வந்தானாம். நீங்க தமிழா என்று கேட்க .இவங்க சும்மாவே வர பிந்தொடர்ந்து வந்து அக்கா நீங்க தமிழா என்று மீண்டும் கேட்க எதுக்குன்னு தெரியலையேன்னு ஆமான்னு இவங்க சொல்ல கூடவே வந்திருக்கான் என் பெயர் கார்த்திக் அப்படியிப்படின்னு சொல்லிகிட்டே வந்தவன் லிப்ட்கிட்டே வந்ததும் ஒருவருமில்லையென அறிந்துகொண்டு பின்புறமாக ஒரு தட்டு தட்டியிருகான். இவங்களுக்கு கோவம் வந்தது.டேயின்னு முறைத்துவிட்டு [ ஒரே அறை கன்னம் தெறிப்பதுபோல் விட்டிருக்கலாமுல்ல ]பயந்துகொண்டு படியேறி முதல் மாடிக்குபோய். அங்கிருந்து லிப்ட் பிடித்து 9 ப்ளோருக்கு போயிருக்காங்க. இதை சொல்லிவிட்டு சொல்றாங்க மல்லி உங்களுக்கெல்லாம் பிரச்சனையில்லபா அப்படின்னு சொல்லிட்டு கலங்கிட்டாங்க எந்த அர்த்ததில் சொன்னாங்கன்னு தெரியலை நான் சொன்னேன் இனி இதுபோல் யாரும் வந்தா. நின்னு என்னான்னு கேட்டுபேச்சி சரியில்லையா ஓங்கி ஒன்னுவிடுங்க இல்லையின்னா அக்கம் பக்கம் சொல்லுங்க.தனியாபோவதை முடிந்தவரை தவிர்த்துடுங்கன்னு ஏதோ நமக்கு தெரிந்ததை சொன்னேன் ஆனாலும் நம்ம தமிழ் சிலர் பசங்க இப்படி இங்கேயும் திரியிறாங்கபோல. என்ன கொடும்மடாயிது நாடுவிட்டு நாடுபோனாலும் பேய்குணம் மாறாதுன்னுல இருக்கு அப்படின்னு இந்தமதம் கடந்தது..

டிசம்பர்


நேசனல்டே அன்று முஸ்ரிக் பார்க் இமானின் 25 வது ஆண்டுவிழா அங்கே கொண்டாடினாங்க நாங்களும் கலந்துகொண்டு. பெண்கள் குழந்தைகளுக்குன்னு தனிதனியே போடிகல் வச்சாங்க அதில் ஒருபோட்டியில் நான் பொருபேற்க என்னோடு 4 பேர் கலந்துகொண்டு முதலாவதாக வந்தோம். வைத்தபோட்டியில் கலக்‌ஷன் செய்யவேண்டிய பொருளில் மூக்குதியும் ஒன்னு ஆத்தி என் மூக்கு போயே போச்சி அதை கலட்டி மாட்டுவதற்குள் வலிதாங்கல. அங்கே நடந்த மற்றொரு போட்டியில் மரூஃப் மூன்றாவதாக வந்தார். நல்ல கலகலப்பு. நல்ல சாப்பாடு. நீண்ட சந்திக்காத சில தோழிகள் அங்கே சந்தித்துயென நன்றாக அன்றைய பொழுதுபோனது.

இந்த வருடத்தை மறக்கமுடியாத மறக்கூடாத பேரதர்ச்சியாக ஒரு சம்பவமும் நடந்து அதனால் வருத்தங்கள் வேதனைகள். என எங்கள் குடும்பத்தின் மனங்களை வாட்டியது . மனிதவாழ்வே சோதனைகுட்படுத்தப்பட்ட்து அதை வென்றெடுக்க வேண்டியே இம்மண்ணில் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை இதுபோன்ற தருணங்களின் உணர்வதோடு மனதைரியதையும் வலுபெறச்செய்துகொள்ளவேண்டும் என்று மனதை தேற்றிகொண்டு. புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இறைவனின் கிருபையால்.இனி அனைத்தும் நன்மையாகவே நடக்கும். நடக்குமென்ற நம்பிக்கையோடு உங்களனைவரின் பிராத்தனைகளையும். துஆக்களையும் வேண்டிவளாக.என் மனகுறிப்பேட்டை முடித்துகொள்கிறேன்.

தொடருக்கே தொடரும்போட்டு ரொம்ப படுத்திவிட்டேன். சரி சரி எல்லாத்திலும் ஒரு மாற்றம் வேண்டாமா அதான் இதிலும்..

இதை யாருப்பு அடுத்ததா தொடர்வது. இதுவரை எழுதாதவங்க இதை எழுதுங்கன்னு ஆவலோடு அழைக்கிறேன். என்னது ஆவலா பின்னே அடுத்தவங்க டைரின்னா சும்மாவா..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

இனியபொழுது..



தை திங்கள் வந்தது
தமிழருக்கு மகிழ்வைத் தந்தது

ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பின்
ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்தி
ஊக்கமும் உறுதியும் தந்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

கலப்பையின் உழைப்பே
அகப்பையில் சோறு
காட்டையும் பொன்னாய்
ஆக்கிடும் பாரென்று சொல்ல
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

விஞ்ஞானங்கள் பல வந்தாலும் -இந்த
விவசாயின் வேர்வைக்குத் தனி
விலைமதிப்புள்ளதென்பதைச் சொல்ல
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

ஆடு மாடுகளுக்கும் அலங்காரம்
அது விலாங்கா போதிலும்
அதற்கும் மதிப்பளிக்க
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

கரும்பும் மஞ்சளும் மங்களமாய் இனித்திட
கன்னிகள் சத்தம் களைக்கட்டிட
கூட்டமாக கூட்டமாய் கூட்டாஞ்சோறு
கூடிப் பொங்கி உண்டிட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

தமிழரின் பெருமை தளைத்து ஓங்கிட
தன்னிறைவுபெற்று செழித்து வாழ்ந்திட
ஏழைகளற்று ஏற்றம் பெருகிட
ஏழ்மையை அடித்து தூரத்தி விரட்டிட
எல்லாம் வல்ல இறைவனை தொழுது
என்றும் கேட்போமே இனியபொழுது....

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும். தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
உளமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மறக்க நினைக்காதவைகள்-நினைத்தாலும் முடியாதவைகள்.

கடந்தவைகளை அதாவது 2010 த்தில் நடந்தவைகளை திரும்பிபார்க்கச்சொல்லி அதை ஒரு தொடராக எழுதச்சொல்லி சொன்ன ஆமினாக்காவே நீங்க வாழ்க வாழ்க ஆத்தாடியோ நீங்க எப்படி எழுதுனீக அம்பூட்டையும். நமக்கு டைரியெல்லாம் எழுதிபழக்கமில்லீங்கோ நீங்க சொல்லிட்டீகளேன்னு இங்கே சொதப்பி வச்சிருக்கேன் ஏதோ என்னாலா முடிஞ்சது  ”சரி சரி டைரிய படிக்கவிடு” அடுத்தவங்க விசயமுன்னா என்னா ஒரு வேகம்.சரி படிச்சிட்டு போகும்போது எப்படிபோவீங்கன்னு சொல்லிட்டுபோங்க..

ஜனவரி
புதுவருடம் புதியயிடத்தில் 8-9 வருடங்கள் துபையில் கூட்டுக் குடும்பமாக வில்லாவில்இருந்துவிட்டு இந்தவருடம் சார்ஜாவில் தனிகுடித்தனம் பிளாட்டுக்கு வந்தது மனசுக்கு பிடிக்கவேயில்லை ஆனபோதும் என்ன செய்ய வேறுவழியில்லை வந்தாச்சி,ஏனோ தெரியவில்லை அங்கிருந்த மன அமைதி இங்கு கிடக்கவில்லை.அதையும் மீறிய சந்தோஷங்களும் கிடைத்தது.
தமிழ்குடும்பத்தில் என் படைப்புகளை ஊக்கவிக்கும் பொருட்டாக தந்த பரிசுகிடைத்தது
தமிழ்குடும்பம் தந்த பொக்கிஷம்.மற்றும் 15-1-2010 .அன்று சுடர்வம்சம் தொண்டு நிறுவனத்தின் 5.ஆம் ஆண்டுவிழா

அதில் நானும் கலந்துகொண்டு அவர்களின் நற்பணிக்காக நானும் கவிதை எழுதிச்சென்று வாசித்தது என இம்மாதம் கடந்தது
உதவும் உள்ளங்கள்
பிப்ரவரி
இன்று அன்புமகனின் 11 வது பிறந்தநாள்.முதல் நாளே சொல்லிட்டார் மம்மி கேக்கெல்லாம் வேண்டாம் மம்மி நான் பெரியவனாகிட்டேன்ல
ஸ்கூலுக்கு மட்டும் சாக்லெட் வாங்கிதாங்க இல்லாட்டி பசங்க கிண்டல்பண்ணுவாங்கன்னு சொன்னதும் நீ பெரியவாகிட்டியான்னு அன்போடு கட்டிக்கொண்டோம்
சிறியவனென்றாலும் பெரியவன்போல் அவன் பேசும்பேசு அதிலும் சூழ்நிலையறிந்து நடப்பதுதான் அவனின் பண்பானகுணம்
நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வமுமாக வாழவேண்டும் என்பிள்ளை பல்லாண்டுகாலம்.அவனுக்காக கவிதையெழுதியது

.அதோடு அவனுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துப்போய் அவனை மகிழ்வித்தது என் படைப்புகளுக்காக நிறைய நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களை பெற்றது என இம்மாதம் கடந்தது
மார்ச்
அகமும் புறமும் மகிழ்ந்து அன்போடு நெஞ்சங்கள் இணைந்து இன்றோடு 18 வது ஆண்டில் அடியெடுதுவைத்த எங்கள் காதல்
என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்

அதை அசைபோட்டபடி கொர்பக்கான் பீச் படகு சவாரி மரூஃப் புட்பால் ஆடிய சந்தோஷம் அப்படியே கராச்சி தர்பாரில் செம சாப்பாடு என
ஒரு டூர்..
மகிழ்ச்சியில் மனம் ஆனந்தமழையில் நனைகிறது எதற்கு நர்கீஸ் நடத்திய கவிதைபோட்டியில் கடைசி நேரத்தில் பங்குபெற வய்ப்புகிடைத்தபோதும் என்கவிதைகள் ஆறுதல்பரிசை வென்றுதந்ததுதான்
அடுத்து என் கவிதை வயோதிகத்தின் விளிம்பில்!
lயூத்புல் விகடனில் வெளியாகி மகிழவைதந்தது. மனிதகடவுள்களின் மர்மங்கள் அம்பலமாகி பல பல மனங்களை அதர்ச்சிக்குள்ளாகியது  மாக இம்மாதம் கடந்தது.

ஏப்ரல்:
ஏப்ரல் பூல் எல்லாருக்கும் ஆனால் எங்களுக்கு ஏப்ரல் பூ ஆமாம் இன்றுதான் முதல் முதலாக பிரபல பதிவர்களில் ஒருவரான எனதருமை அக்கா ஜலீலாக்கா சமையல் அட்டகாசம்   அவர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்சியைதந்தது .

இம்மாததிலிருந்துதான் பேஷ்புக்கிலும்  என் கவிதைகளின் அறங்கேற்றம்.சார்ஜா சீமான் ஆண்டுவிழாவில் அன்பு நபிகள்[ஸல்லல்லாஹ்]அலைகிவஸ்ஸலம் அவர்களுக்காக கவிதை வாசித்தது.அந்த ஆண்டுமலரில் என் முதல் சிறுகதையான தடுமாற்றம்  வெளியானது

ஹத்தா சென்றிருந்தோம் அங்கிருந்து 10 கிலோமிட்டர் கடகட கடகடா ரோட்டில்சென்று மலைகளுக்கு நடுவில் ஓடும் சிறிய ஓடைக்கு போனோம் பலபலமுறை சென்றிருந்தாலும் மீண்டும் செல்லும்போது புதுசாக போவதுபோலிருக்கும் வெரும் மலைகள்தான் என்றபோதும் பிரம்மிப்பை ஏற்படுதக்கூடிய வகையில் இருக்கும். அப்படியான பல சுவாரஸ்யங்களோடு கடந்த அந்த மாதம் கடந்தது.

மே:
மகனுக்கான பரிட்சை சமயம்.வெளியில் ஊர் சுற்றுவதை தவிர்ந்திருந்தோம்.அப்போது மகிழ்ச்சியான விசயமாக ஸாதிக்காக்கா வந்திருந்தால் பெண்பதிவர்கள் பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!என்று அக்காமார்களை சந்திததில் அளவற்றமகிழ்ச்சி.அதோடு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிமுகவிழா நடந்தது அதில் என்னை மகளிர் அணி செயளாலராக நியமித்தது. அவ்விழாவில் நான் கவிதை வாசித்தது. ஃபஸீலா ஆசாத் [நிலவு ததும்பும் நீரோடை]கவிதையாசிரியர் அவர்கள் நட்பு கிடைத்தது என்று மகிழ்ச்சிகள்யொருபுறமிருந்தபோதும்
ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியதில் பல உயிர்கள் பலியானது மனதை வெகுவாக பாதித்து பல இரவுகளின் உறக்கதை பறித்தது என நகர்ந்தது அந்த மாதம்.

ஜூன்

  அதிரைக்கு கிடைத்தது அங்கீகாரம். என் தந்த ஊரான அதிரையைச்சேர்ந்த யுனிக்கோட் ”தேனி உமர்தம்பி” அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டது. அதற்கான என்னுடைய முயற்சிகளும் இருந்ததினை நினைத்து மிகுந்த பெருமையடைந்தேன்.

பசங்களுக்கு லீவ் விட்ட சமயம் கேட்கவா வேண்டும் U A E யிலிருக்கும் 7 நாடுகளையும் சுற்றிச்சுற்றி பார்த யிடங்களையே பார்த்து பார்த்து வந்தோம். 5 பேம்லி சேர்ந்து ஃபுஜேரா போய் அங்கிருந்து மஷாஃபி மலைக்குள் போனோம் மஷாபி தண்ணீர் வரும் இடத்திற்கு கிட்ட தட்ட 300 350 அடி பல்லத்தாக்கில் இறங்கவேண்டும் அங்கிருந்து 2 கிலோமீட்டார் நடந்து சென்றால் அங்கே ஒரு ஃபால்ஸ் அதிலிருந்து கொட்டும் நீரை பார்க்கும்போதே பரவசமாகும் அது கொட்டிய இடத்தில் நீரோடைபோல் கிடக்கும் அதில் குளிப்பவர்கள் ஏராளாம் நாங்கள் அதையும்தாண்டி மேலே ஏறி சிறு ஓடையாக இருந்ததை பெண்களுகென்று மாற்றிக்கொண்டோம் அங்கு குளித்த நீர்தான் கீழேவிழும்.ரசனைமிகுந்தவர்கள் சிரமம் பார்க்காமல் போகிறார்கள். நாங்க இங்க வந்த நாள்முதலாய் 30 -40 முறைக்குமேல் போயிருப்போம் .அங்கே இறங்கும்போது எங்களோடு வந்தவர்களுக்கு சிரமமாகிவிட்டது மிகுந்த சிரமப்பட்டுதான் இறங்கினார்கள் அவர்கள் புதிது நல்லாகூட்டியாந்தீங்க இப்படியொரு இடத்துக்கு அப்படின்னு வந்தவங்க நீரைப்பார்ததும் வாயடைத்துபோனார்கள் குளியோ குளின்னு குளிச்சிட்டு மீண்டும் மலையேற வரம்போதுதான் அந்த அசம்பாவிதம்,,,,,,,

என்ன நடந்திருக்கும் அது அடுத்த பதிவில்தொடரும்....

ஒருபச்சபுள்ளை எவ்வளவுதான் எழுதமுடியும் இதுக்கே முதுகு முறிஞ்சிபோச்சி. ஒருவரின் டைரி படிக்கும்போது சுவாரஸ்யம் வேண்டுமல்லவா. இதுக்குதான் இது.
ஒருவருடத்திற்குள் எத்தனை எதனையோ சம்பவங்கள் நடந்தேறுகிறது அத்தனையும் எழுத ஒரே நாளோ அல்லது ஒரு டைரியோ போதாது அதுக்குதான் நாம டைரி எழுதுவதேயில்லை. எல்லாமே நம்ம மூளையும் மனதும் சேமித்துகொள்ளட்டும் என்று விட்டாச்சி.அப்பப்ப நினைவுகள் வந்து தட்டியெழுப்பும். அப்படி தற்போது குட்டிஎழுப்பிய ஆமினாக்காவுக்கு என்மனமார்ந்த நன்றிகள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

அடக்கம்..


டுக்கவா தொடுக்கவா எண்ணம்
தொடங்கவா அடங்கவா துன்பம்
நினைக்கவா மறக்கவா நெஞ்சம்
அதட்டவா ஆட்டவா சோகம்

நீ சரியா நான் சரியா உருவம்
நீ பிழையா நான் பிழையா ஆர்வம்
நீ முறையா நான் முறையா பருவம்
நீ முதலா நான் முதலா மரணம்

சிலிர்த்திடவா சிணுங்கிடவா தேகம்
சீண்டிடவா சினந்திடவா மோகம்
லந்திடவா கரைந்திடவா மர்மம்
களைந்திடவா கலைத்திடவா கோபம்

நீ என்ன நான் என்ன வாதம்
நீ பெரிதா நான் பெரிதா கர்வம்
நீ முன்னே நான் முன்னே காலம்
நீ பின்னே நான் பின்னே நேரம்

வைகளெல்லா
பிறப்புக்குள்ளுமே அடக்கம்
வையெல்லா
அவயங்களுக்குள்ளுமிது கடங்கும்
வைகளை
உணர்ந்து நடந்தால் போதும்
இவைதானே
றைவன் மனிதர்க்கு வகுத்த பாடம் ....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

சகலமும்...

கிளிக் கிளிக்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

புதியதை தா!


புத்தம் புதிதாய் பூத்திருக்கும் புத்தாண்டே
உன்னை உலகமக்களில் ஒருத்தியாக
வரவேற்க வந்துள்ளேன்
அப்படியே! இரண்டாயிரத்து பத்து
ஆண்டுகள் செய்தவைகளத்தையும்
அறிவுதெரி[ளி]ந்த நாள்முதலாய்
பார்த்திருந்து கேட்டிருந்ததை
நினைவூட்டவும் நினைக்கிறேன்

கடல் காவுகேட்டதால்
சுனாமி என்ற பெயரில்
மனிதபொட்டலங்கள் மண்ணுக்குள்
கயவர்களின் கட்டவிழ்ப்பால்
கற்புகள் சூறையாடுதல்
பூவுக்குள் பூகம்பம்
சூராவளியாகும் சூன்யம்
அழகிய தளிர்களை
அரக்கர்களே மேயும் அவலங்கள்

மாலேகன் குண்டு வெடிப்பு
மும்பை குண்டுவெடிப்பு
கோத்ரா ரயில் எரிப்பு
குஜராத் இனப்படுகொலைகள்
கொழும்பில் கொடுமைக்கள்
இயற்கையின் சீற்றங்களென
எண்ணிலடங்கா துயரச் சுவடுகள்

அறிவிழந்து ஆடைகுறைந்து
தன்னையிழந்து
தரங்கெட்டுப்போகும்
மனிதர்கள் ஒருபுறம்
உண்ண உணவில்லமல்
உடுத்த உடையில்லாமல்
தவிக்கும் மக்கள் ஒருபுறம்
அத்தனையும் ஒட்டுமொத்தமாய் சுருட்டி
உலையில் போடும் கூட்டம் மறுபுறம்

இன்னும் உலகில்
எத்தனை எத்தனையோ
மனம் தாங்கமுடியாத மரணங்கள்
இப்படி ஒவ்வொரு வகையிலும்
கூட்டம் கூட்டமாய்
கொல்லை போகிறது மனித இனம்
இன்னும் எவ்வளவோ
சொல்லிக்கொண்டு போகலாம்

உலகில் நடக்கும் ஒட்டுமொத்த
வருத்ததினையும் தெரிவித்து விட்டேன்- இனி
வரப்போகும் காலங்களிலாவது
உலகம் ஒற்றுமையாகயும் அமைதியாகவும்
உலகமக்கள் நலமாகவும் வளமாகவும்
வாழ வழிவகுத்து கொடுக்க வேண்டுகிறேன்

அகிலத்தை ஆளும் இறைவனால்
சகலத்தையும் சரிசெய்யமுடியுமென்ற
நம்பிக்கையோடு
அனைவரையும் அன்போடும் மகிழ்வோடும்
அளவிள்ளா சிறப்போடும் வாழவைக்க
எல்லம் வல்ல இறைவனிடம்
அனைவரும் வேண்டுவோமாக....

தமிழ்குடும்பத்தில் நான் 24 -12 -2009 அன்று இணைந்தேன்
இணைந்த அடுத்த வராம் 2010. அன்று  தமிழ்குடும்பத்திற்காக
நான் எழுதியகவிதையிது.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது