நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

போங்கப்பா நீங்களும் உங்க ஓட்டும்.என்ன இப்படி சொல்றேனு பார்க்கிறீங்களா! ஆமாப்பா பலயிடங்களில் பலரின் ஆதங்கப் பதிவைப் பார்த்தேன். சிறந்த எழுதுக்களுக்கு மதிப்பில்லாததுபோல் அங்கே கருத்துக்களோ ஓட்டுக்களோ பதிவாவதில்லை. ஆங்காங்கே ஓடி ஓடி பலருக்கு கருதிட்டால் சிலர் போய் கருத்திடுகிறார்கள் என்ற ஆதங்கமும். பதிவுலகில் தங்களுக்குள் தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்குள் மட்டுமே ஓட்டையும் கருத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மையாவும் இருக்கலாம்.

தன் உணர்வுகளையும். சோகம் சந்தோஷம் குடும்பம் நட்பு. என அனைத்தையும் பகிருமிடமாக பதிவுலகமிருப்பதால் இங்கும் ஓர் பலத்த எதிர்பார்ப்பு இருகிறது.நம் எண்ணங்களுக்கு கருத்துக்கள். மற்றும் ஓட்டுக்கள் மூலம் அங்கீகரிக்கபட்ட வேண்டுமென நினைக்கிறோம். அது தவறில்லை. ஆனால் ஓட்டும் கருத்தும் மட்டுமே அதை தீர்மானிப்பதில்லை என்பதையும் உணரவேண்டும்.அப்படிப்பார்தால் பலபலருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவேயில்லை.நேரம்கிடைதால் பட்டியலிடப்பார்கிறேன்.

கூகில் மூலம் நிறைய தளங்களுக்கு சென்றுள்ளேன். அப்பப்பா என்ன அருமையான கவிதைகள்.மற்றும் படைப்புகள் பலயிடங்களில் கொட்டிக்கிடக்கிறது தெரியுமா? ஆனால் அங்கே ஓட்டுபெட்டியும் கருத்துப்பெட்டியும் காலியாகவேயிருக்கின்றன. சிலதுகளில் ஒன்றிரண்டு கருத்தும் ஓட்டும் உள்ளன. அதற்காக அதெல்லாம் நன்றாகவேயில்லை அவைகளெல்லாம் படைப்புகளேயில்லையென ஆகுமா?

ஓட்டும் கருத்தும்   படைப்பவர்களை இன்னும் ஊக்குவிப்பதற்காகதானே. இவைகள் மட்டுமே படைப்பாளர்களை உருக்குவாக்குவதில்லை.
அதையுணர்ந்து படைப்பவர்கள் தங்கள் படைப்புகளை தொடருங்கள்.ஒரே ஒருவருடைய கருத்தும்கூட நம் படைப்பவைகளுக்கு பலத்தை தரலாம். அல்லது கருத்துக்களோ ஓட்டுக்களோ இல்லையென்றாலும் என்றாவது நம் எழுத்துகள் பிறரைச் சென்றடையும் என்று நம்பிக்கையோடு எழுதுங்கள்.

ஓட்டுகளும்.கருத்துகள் குவியும் அனைத்தும் நல்லபடைப்புகள்தான் என்பதல்ல. ஓட்டுகளும் கருத்துகளே இல்லாத படைப்புகளும் நன்றாக இல்லையென்றும் அர்த்தமல்ல.ஆகவே. படைப்புகள் நம் எண்ணத்தில் உருவாகி நம் எழுதுகளில் உயிர் பெறுகிறது.அதை இப்பூமியில் உலாவவிடுங்கள் நிச்சயம் அது வளர்ந்து ஆளாகி சிலரையாவது சென்றடைந்து நமக்கு சிறப்பைத் தேடித்தரும்..

முடிந்தவரை அனைவருக்கும் நமது ஊக்கனமென்னும் கருத்துக்களை தரமுயல்வோம்.

என்னங்கப்பு நான் சொல்வது சரிதானே?.......................

டிஸ்கி// அதிகபட்சம் எல்லார் பதிவிலும். வந்துபோகும் வாசிக்கும் பெருமக்களே வாசித்துவிட்டு மறக்கம ஓட்டையும் போட்டுவிட்டுபோங்கன்னு இங்கேயும் ஓட்டுகேட்கும் மக்கள். ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது