நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பச்சை பசுமையாய் பதின்ம பருவம் [தொடரோ தொடர்]

கொசுவர்திச்சுருளானயான இத்தொடரை, எழுத அழைத்த நாஸியாவுக்கு பெரிய நன்றி. ஏம்மா எத்தனை நாளா என்னைய இப்படியெல்லாம் மாட்டிவிடனுமுன்னு திட்டம், சரி சரி சொல்லுறேன் கேளுங்கோ
[அது சரி பதின்ம வயதுன்னா என்னங்கங்கங்கொ]
நமக்கு கல்லூரி வாழ்க்கையெல்லாம் கிடையாதுங்கோ பள்ளிக்கூடமே முடியலைங்கோ.
[13 வயதோட அல்லாம் க்ளோஸ்] நல்லது பள்ளிக்கூடமாவது போனியா இல்லையா. அதத்தானே சொல்லப்போறேன்
ஒரு ஊர்ல ஒரு ராஜாவும் ராணியுமாம் அவங்களுக்கு. அச்சோ அந்தகாலத்துக்கதையான்னு ஓடிடாதீங்க நில்லுங்க நில்லுங்க.
அந்தகால நினைவுகள் நெஞ்சுக்குள் புடம்போட்ட தங்கமாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது மறக்கமுடியுமா? மறக்கதான் இயலுமா!

ராஜகுமாரிமாதிரி பிறந்து. வளரும் சமயதில் பெங்களூரில் என்
2, 1/2 வயதிலேயே எல் கே ஜியும். யுகே ஜியும். அடுத்தடுத்து தந்தை வியாபார சம்பந்தமாக வேறு வேறு ஊராக செல்ல.
[அம்மாவின் அம்மா] உம்மமாவிடம் வளரவிடப்பட்டேன். ஒன்றிலிருந்து நான்காம் வகுப்புவரை பள்ளியின் அனுபவமே தனிதான் இதையெல்லாம் மறந்தா??????

பள்ளித்தோழியானவர்கலெல்லாம். என்னைவிட 2.3 வயது பெரியவர்களே! [நாமதான் இன்னும் பச்சப்புள்ளையே]
நாங்கள் தோழியான கதை மிக சுவாரசியம். ஆளுக்கு ஆள் காசு சேர்த்து கடலைமிட்டாயும். இலந்தைவடையும் வாங்கி மொகழமரத்தின்கீழ் அமர்ந்து
நான். தாஜ்மா. மர்ஜுனா. சாந்தி. நான்குபேரும் தோழிபோட்டுக்கொண்டோம்.
அதில் மூவரும் இன்றுவரை தோழியாகவேயிருக்கிறோம். [சாந்தியைத்தவிர.
அவள்மட்டும் வேறு ஊர் போய்விட்டதாக கேள்வி.]சாந்தியின் தம்பி மாரிமுத்தும் அவளும் ஒரேகிளாசில் படிப்பார்கள் .

ஒருநாள் சாந்தி வரவில்லை கேட்டால் பெரியபொண்ணு ஆயிட்டா எனசொன்னதும் நாங்கமூவரும் சேர்ந்து வீட்டில் சொல்லாமல். பள்ளிக்கூடம்போவதாகசொல்லிவிட்டு
பள்ளிக்கு வருவதுபோல் வந்து சேர்த்து வைத்திருந்த காசில். கிளாஸ்கோ பிஸ்கட் 4 பாக்கட் வாங்கிக்கொண்டு அவள் வீட்டுக்குச்சென்று விட்டோம்
அவள் வீட்டுக்கும் எங்கவீட்டுக்கும் சுமார் 2 கிலோமீட்டர்.
அதுவும் தோப்புக்குள் நாங்கலெல்லாம் யார் துணையுமில்லாமல் தோப்புக்கு போகமாட்டோம். ஆனால் தோழியென்றதும் அதெல்லாம் மறந்துபோச்சி.
அங்கேபோனதும் அவங்க அம்மாவும் அப்பாவும். ஏன்கண்ணுங்க இவ்வளதூரம் வந்தீங்க அம்மா அப்பாக்கு தெரிந்தா அடிப்பாங்க. இந்தமோரக்குடிச்சிட்டு வாங்க கொண்டுபோய்விட்டுவிடுகிறேன் என்றார். மூவரும் மாடுமாதிரி தலையை ஆட்டிய அப்போதுதான் பயம் உள்ளுக்குள் கிளம்பியது. இன்னக்கி அடி அடிதான்னு. ஆனாலும் சாந்தியை பார்த்துட்டோம் மூன்றுநாள் பார்க்கமல் என்னவோபோலிருந்தது இப்போது சரியாகிவிட்டது.

நாங்க நினைத்தபோல் பொண்ணாட்டாமெல்லாம் ஜோடிச்சி இல்லை. ஒரு உலக்கையைபோட்டு ஓரமாக உக்கார்ந்து இருந்தாள் உம்மென்று.ஒன்றும்புரியாமல் சீக்கிரம் பள்ளிக்கூடம் வந்திடுடி என்று சொன்னதோடு கிளம்பிவிட்டோம் சாந்தியின் அப்பாக்கூட.

நல்லபிள்ளைகளாட்டம் வீட்டுக்கு போயாச்சி ஒன்றும் நடக்கலை பயந்ததுபோல் என்றிருக்க. இரண்டுநாள்கழித்து நம்ம ஆம்பள பசங்க [எப்பாடி ரொம்ப பொல்லாதவங்க] வீட்டுள போட்டு கொடுத்திருக்காங்க. அப்பன்னுபாத்து நான் எங்க தெரு பசங்களோட குளத்தில் குளிக்கப்போகும்போது ஒரு திருமணமான அக்கா அதோ அந்த நடுச்சுவற்றை யார் முதலில் தொடுவதென போட்டிக்கு வருகிறாயா என்றார்கள். விடுவோமா[யாரு நம்ம அஞ்சாத அஞ்சலியாச்சே]

சரின்னு இருவரும் ஒருசேர போய் தொட அதில் ஆமை அமர்ந்திருப்பது அறியாமல் நாந்தான் பஸ்ட் என ஓங்கி அடித்தபோது ஏதோ வள வளன்னுகையில்  என்னான்னு பார்த்தா ஆஆஆஆமை அல்லாவேன்னு கத்தியபடி போனவேகத்தில் திரும்பி கரையேறியபோதுதான் பார்கிறேன் உம்மம்மா வேப்பங்குச்சியை எடுத்துக்கொண்டு அடியே நில்லுடின்னு துரத்தியதேபார்க்கனும் இப்போது நினைத்தாலும் ஓடுவதுபோலிருக்கும்.

4. வகுப்பு ஆண்டுவிழாவில். கையிறுதாண்டுதல்.முதல் 12 போட்டி நடைப்பெற்றது. மலிக்காவும் ஹபிலாபானுவுதான் அனைத்திலும் முதன்மை.
ஒவ்வொரு பரிசுக்கு கூப்பிடும்போதும் என் அக்கா[பெரியம்மா மகள்]
மாப்பிள்ளை எந்தலையில் ஒரு செல்லக்குட்டு குட்டி போகச்சொல்லுவார்.
அன்று வாங்கிய பரிசுப்பொருகள் மனதைவிட்டு நீங்கமால் இன்றும் அதிலுள்ள
சில்வர் பிளேட் என்பெயர்போட்டும். ஒரு ஹீரோபேனா. முதல் ரேங்கிற்கு தந்ததும். இன்னமும்.[பேனா எழுதாது இப்போது ஹி ஹி ஹி]

9. வயதில் எனக்கு நிச்சியம் செய்தார்கள் அதாவது பால்குடமுன்னு எங்கஊரில் சொல்லுவோம். என்ன சிரிப்புன்னா[அச்சோ அச்சோ இதவிடவா வேணும் அச்சோ] என் பால்குடத்துக்கு நானே பால்குடம் தூக்கிப்போனதுதான் மாமாவீட்டு வாசல்வந்ததும் நான் பக்கத்துவீட்டுக்கு ஓடிட்டேன் மற்றவர்கள் மாமாவீட்டுக்குபோய் நல்ல பரோட்டாவும் கறி துண்ணுட்டு வந்தாங்க எனக்கும் வந்தது. சாப்பிடப்போகும் சமயத்தில் எனது பெரியமாமியார் பொண்ணு உன்னை ஒரு போட்டோ எடுக்கனும் எழுந்து நில்லு என்றது
நின்றுகொண்டிருக்கும் சமயம் பக்கத்து அறையிலிருந்து மச்சான் வந்து டக்குன்னு ஒட்டிக்கொண்டு நிற்க[அவுக ரூமில் ஒளிந்திருந்தது தெரியாம பேக்கோ மாதிரி எழுந்து நின்னேன்] போட்டோ எடுத்ததும் எனக்கு ஒரே அழுகை ஏனென்று தெரியவில்லை இன்றுவரையும்.[எதுக்கும் மச்சாங்கிட்ட கேட்டு சொல்லுறேன்ன்ன்ன்ன்]

5 ஆம் வகுப்பு போக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது. வந்தது படிப்புக்கு ஆப்பு. என் தந்தை அவங்க ஊருக்கு என்னை அழைந்துவந்துவிடச்சொல்லி உத்தரவிட. அம்மாவும் வந்து அதிரைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். படிக்கிறேன் என்று சொன்னபோது அங்குபோய் படிக்கலாம் என்றார்கள். சரியென்றுபோய்விட்டேன். ஆனால் அங்குபோய் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. பெரியபடிப்பு படிச்சாச்சி என மதரஸாவில் சேர்த்துவிட்டார்கள்.

மதரஸா வாழ்க்கை மிகபிடித்துப்போனது. அதுவும் பள்ளிக்கூடம்போலதான் அங்கேயும் 2 ½. 3 வருடந்தான் அதிலேயே நல்லவிசங்கள் கற்றுக்கொள்ள எனக்குகிடைத்த நல்லதொரு வாய்ப்பு
அங்கேயும் ஒரு தோழி அவள் நைமா எங்க தெருதான் அவளும் சொந்தமும்கூட எனக்காக பள்ளிப்படிபை நிறுத்திவிட்டு [7 கிளாஸுன்னு நினைக்கிறேன்] என்கூட அவளும் மதரஸாக்கு வந்துசேர்ந்திட்டா [இப்போது சொல்லுவா உன்னாலதாண்டி படிக்கலைன்னு]என்னைவிட பெரியவள் என்றபோதும் எனக்கு உயிர்தோழியாகிவிட்டாள்.

அம்மடியோ நாங்க அடிக்காத அட்டகாசங்களே இல்லையெனும் அளவுக்கு இருவரும் ஒருவராகிவிட்டோம். மதரஸாவில்கூட எங்களிருக்கும் ஒரே பெயர்தான் மலிக்காநைமா. நைமாமலிக்கா மதரஸாவில் வெளியூர் வெளிநாட்டு தோழிங்க நிறைய எனக்கு நட்புவட்டாரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு அதில் மலையாள சேச்சி ரஸிதாக்காக்கிட்ட அப்[ப]பிடிச்ச மளையாளம் இப்ப ரொம்ப தெளிவா.] என்ன எல்லாருக்கும் செல்லப்பிள்ளையா அப்படின்னா எல்லாரவிட சின்னபொண்ணா நாங்கதான் எல்லாருக்கும் ஹெல்புவேற [அதாவது நைஸாக வெளியிலிருந்து திண்பண்டங்கள் அது இதுன்னு வாங்கிக்கொடுக்கிறது வேறொன்னுமில்லை]

ஒருநாள் இருவரும் மதரஸாவிற்குநடந்து வரும்போது ஒருவீட்டில் மாதுளைபழம் நிறைய தொங்கிக்கொண்டிருந்தது. உடனே இருவருக்கும் மண்டைக்குள் சாக். அவள் சொன்னாள் நான் வெளியில் நின்று யாரும் வருகிறர்களான்னு பாத்துகிறேன் நீபோய்பறி என்று சரின்னு அங்கேகிடந்த பெரிய மண்பானையின்மீது ஏறிபறிக்கலாமென்று ஏறினேனா! எட்டிப்பறித்தேனா! கையில் மாதுளையுடன் பானை உடைய விழுந்தேனே பார்க்கனும் முட்டுக்கையில் ரத்தம், சரிடி துடைச்சிக்கோ அதைதான்னு வாங்கி தாவணிக்குள்போட்டு சுவற்றில் அடித்து உடைத்தாள்
சிதறியது தாவணிக்குள்ளேயே அப்படியே எடுத்து சாப்பிட்டுக்கொண்டே மதரஸாபோய் சேர்ந்தோம். மதியம் வரும் கலகம் தெரியாமல்.

மாதுளைவீட்டு அம்மனி ஆங்காத்து வீசுதே பொங்காத்து வீசுதேன்னு மதரஸாக்குள் வந்து, ரெண்டு குட்டிகள் எங்கவீட்டில் மாதுளையை பறிச்சிவிட்டாங்க. அதுபோயிட்டுபோவுது.
மண்பானையை உடைத்துவிட்டாங்களே. எங்கே அவங்க காட்டுங்கன்னு நிக்கிறாங்க. மாட்டுவோமா மெதுவா நகர்ந்து வாசலுக்கு வந்து விட்டோம் ஒரே ஓட்டம் மூச்சிரைக்க வீட்டு வாசலில்தான் வந்து நின்னோம் அம்மாடியோ..
மாட்டியிருந்தோம் அதோகதிதான்.

இருவரும் சேர்ந்து எங்கள் உஸ்தாது எங்களுக்கும் சொந்தம்தான்.
சரிபா அக்கான்னு. அவங்களை ஒரு நாள் உளுச்செய்வதற்கு [தொழுகைக்காக] பாத்ரூம் போயிருக்கும்போது குட்டி பூனையை தூக்கி பாத்ரூம் கதவின்மேல்வழியே போட்டுட்டேன் பக்கத்தில் போடுடி போடுடி நைமா. அலறிக்கொண்டு வெளியெ வந்த அக்கா கையில் மாட்டினேன் செம சாத்து முதுகில் அப்பவும் நைமா எஸ்கேப் மாடியது மல்லிதான் பாவம் சின்னப்புள்ளைய என்னென்னப் பாடுபடுத்திட்டாங்க [ஹூம் ஹூம் அழுதுபார்கிறேன்]

அப்புறம் நிறைய நிறைய இருக்கு ஆனா உங்களை போரடிக்க விரும்பல போனபோகுது இப்பவே கண்ணக்கட்டியிருக்கும் வடிவேலு பாசையில் நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு அதேன் நிப்பாட்டிக்கிறேன்.

இந்ததொடர எழுத அழைத்து ஒருமாதம் ஆகிறதுன்னு நினைக்கிறேன் நான் நாஸியா பிளாக் போகாமல் இருந்ததால் தெரியவில்லை.
பார்ததும் எழுதியாச்சி
அச்சோ அறுத்துட்டே நிப்பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுன்னு எத்தன தடவ சொல்லுறது.

சரி சரி
இதை மேலும் அறுக்க நான் அழைப்பது.

புதுமுகம், மின்மினி

சமையல் மேதை மேனகா சத்தியா

சமையல் கலக்கல் கீதா ஆச்சல்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எனக்கும் வலியிருக்கு!


செந்தாழும் பூவும்
சின்னப் பாம்போடு ஆட

வண்ண ரோசாப் பூவும்
சின்னப்பொண்ணோடு கூட

முல்லைப் பூவும்
முகம் மலர்ந்து சிரிக்க

மொட்டவிழ்ந்த மல்லிகையோ
மஞ்சத்தில் மகிழ

செவ்வந்திப் பூவுக்கோ
மூங்கில் காற்றின் வழியே

முஹாரி ராகம் கேட்டபோது
சிணுங்கிச் சிணுங்கியழுதது 

செத்த மனிதருக்காக
செக்கச்சிவந்த என்னை

சித்தரவதை
செய்யப் போகிறார்களேயென்று!

பாவம் அதற்குத்தெரியவில்லை
பணக்கார பிணத்துக்கும்

பலவித மலர்களும் 
பாடாய் படுமென்று!!!!

[டிஸ்கி இரவு டீவியில் பார்த்த ஒரு  காட்சியால்
பிறந்தது இக்கவி ஹா ஹா
 மலரின் மனம் விம்மி அழுததாய் தோன்றியது அதான் ஹி ஹி ஹி
என்னக்கொடுமப்பா இது அப்படின்னுதானே சொல்லுறீங்க]]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பொய்யாகிப்போன..


இரவு சத்தியம்
இனிதாய் முடிய
காலைப் பொழுது
கனிவாய் விடிய

இருந்த கஞ்சியை
இளம்
புன்னகையோடு தந்து

வாசல்வரை வந்து
வழியனுப்பி
வைத்த மனைவியை

காணாது கண்டு
கதிரறுக்க
களத்துமேடு போய்

வயல் வெளியில்
வரப்பு
வேலை முடித்து

கால் கடுக்க
மலையேறி
கல்லுடைத்து கொடுத்து

மாலைச் சூரியன்
மங்கும்
வேளையில்

விழியசையாது
வாசல் பார்த்தபடி
வஞ்சியவள் காத்திருக்க

கை நிறைந்த
கூலி
கண் குளிரசெய்ய

இரவு செய்த
சத்தியம்
இன்னல்
செய்தபோதும்

மதியிருந்து
மனிதன்
மதிகெட்டுப் போனான்

மனைவியென்ற
ஒன்றிருந்தும்
மக்கட்ச்செல்வம்
கூடயிருந்தும்

கணவனென்ற
கடமையை மறந்து
தந்தையென்ற
பொறுப்பை துறந்து

மதுபோதை மயக்கம்
மற்றவையை
மறக்கடிக்க

மானம் போனாலென்ன
மனைவி மக்கள்
எப்படியானாலென்ன

மானங்கெடுத்தும்
உடல்கெடுக்கும் மதுவை
மனங்கேட்டுத் துடிக்க

மனஞ்சொன்ன
சொல்லை
மறுக்காமல் தரவே

மதுக்கடையை
நோக்கி
மார்த்தட்டிச் சென்றான்..[குறிப்பு. இந்த கவிதை சர்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுமலரில் வெளியாகியுள்ள என் கவிதை.
சீமானைப்பற்றிய ஒரு பதிவு விரைவில்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஏனென்ற கேள்வி எனக்குள் பிறக்குது!

எத்தனை எத்தனையோ
மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்கள்
இன்னும்
எத்தனை எத்தனையோ
இருந்தும் என்ன பயன்-பல
மாந்தர்களின் நிலை?
மலிந்தல்லவா கிடக்கிறது

படித்தவர்முதல் பாமரர்கள் வரை
பார்க்கும் கண்கள் அத்தனைக்கும்
போதைதரும் போகப்பொருளாய்
வில்லியாய் வேடதாரியாய்
பணத்தாசை பிடித்தவர்களாய்
பலவிதங்களில் பந்தாடப்படும்
மாந்தர்கள்

கட்டில் முதல் தொட்டில் வரை
ஊர்தொட்டு உலகம்வரை
ஒவ்வொன்றிலும் ஊன்றுகோலாய்
இருக்கும் பெண்மையை
ஒட்டு துணியுடன் ஆட விடும்
பெரிய திரை

ஆதிக்கம் செய்பவர்களாக
அடுத்தவர்கள் கணவர்களுக்கும்
ஆசைபடுபவர்களாக
ஊறுவிளைவிப்பவர்களாக
சித்தரிக்கும் சின்னத்திரை

சோப்பிலிருந்து சீப்புவரை
ஆணியிலிருந்து அந்தரங்கம்வரை
அனைத்திலும்
அரைகுறை அங்கங்களுடன்
அலையவிடும் மீடியாக்கள்

”இப்படி”

எல்லா வட்டாரத்திலும்
துரத்தித் துரத்தி
துவேசம் செய்யப்படும்
பெண்கள்
இதை சில பல நேரங்களில்
பெண்மணிகளே செய்வதும்
செய்யத்தூண்டுவதும் தான்
விந்தையிலும் விந்தை-இதை
பார்க்கும்போது
நெஞ்சம் பதைக்குது
மனதும் வலிக்குது

மேலைநாட்டு மோகமிங்கே
மேம்பட்டுக்கிடக்குது
எதை சொன்னாலும்
பழைய காலமென
பரணியில் போடுது
மனித மனங்களிங்கே
மதிப்பை இழக்குது
காகிதப் பணத்தின்
பதவி உயருது
கடவுளின்
பயங்கூட விட்டுப்போகுது

எந்திரமாக்கப்பட்டு
எல்லைகள் மீறுது
எந்த நேரத்திலும்
எதுவும் நடக்குது
தனிமனித ஒழுக்கம்
தவறிப்போவதால்
தன்னை
பிறர் ஆளும் நிலையில்
மனிதமிருக்குது
தன்னைக் காத்துக்கொள்ளவே
தவறிப்போகுது....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எங்களையும் பாருங்கோ!


ரசிக்க ஆளில்லையென்றபோதும்
ரம்யமாய் ஆடுவேன்
ரகசியமாய் ஆடுவேன்

கறுத்த மேகம் -என்னைக்
காதல் கொள்ளுமென்று!
வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
பின்புதான் புரிந்தது
அது எனக்கு நானேபின்னியதென்று!
கேமரா இல்லாமல் படமெடுப்பேன்
கேள்விகேட்டால் கொன்றொழிப்பேன்
மயக்கும்படி  நானாடுவேன்
மனிதரைக்கண்டால் வெருண்டோடுவேன்சுறு சுறுப்பையும்
அணிவகுப்பையும்
என்னைப்பார்த்து
கற்றுக்கொள்ளுங்கள்!மீசையை முறுக்கியபடி
எங்கும் என் ஆட்டம்
எதுவும் தடையில்லை
எதிலும் என் ஓட்டம்.


[டிஸ்கி டிஸ்கி....மனுசாளையும். மற்றதையும் எழுதுறேளே!
ஒரே ஒருதபா எங்களையும் எழுதுங்களேன்னு கேட்டதுபோல் இருந்துச்சி
அதேன் இவாளுக்கும் ஒரு பிட்டப்போடுவொமேன்னு....]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மகிழ்ச்சியில் மனம் ஆனந்தமழையில் நனைகிறது.


நர்கிஸ் - மல்லாரி இணைந்து நடத்திய

'முகம்மது இஸ்மாயீல் - இபுறாஹீம் பீவி நினைவு’ கவிதைப் போட்டி

பலபல வருடங்களைக்கடந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இஸ்லாமிய
மாத இதழான நர்கிஸ், மக்கள் மனதில் தனியிடத்தை பிடித்துள்ளது என்றால் அதுமிகையாகாது.

அப்படியான நர்கீஸ் இதழ்
நடத்திய கவிதைப்போட்டியில் கடைசிநேரத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
அதற்கான கவிதைகளை நர்கீஸ் இதழுக்கு அனுப்பியிருந்தேன்
 முதல் மூன்று பரிசும் ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்பட்டுள்ளன

அதில் என்னுடைய இருகவிதைகள் ஆறுதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது


இதோ அந்த கவிதைகள்..

பெண்ணே நீயும் [அடி ஞானப்பெண்ணே

வலி

பலகவிதைகள் குவிந்த குவியலுக்கிடையில் என்கவிதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்

ஒரு படைப்பாளனுக்கு தன்படைப்புகள் பரிசு பெறுவதைவிட அது ஒரு சிலரையாவது சென்றடைந்தாலே போதும், ஆயிரம் விருதுகள் வாங்கிய பெருமைகளும் சந்தோஷமும் அடைவான். அந்நிலையில்தான் நானும்..

இந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் போட்டி முடிவுகள் ஏப்ரல் நர்கிஸ் இதழில் வெளியாகும்..

என்கவிதைகளை தேர்ந்தெடுத்த தனிக்குழுவுக்கும். நர்கீஸ் ஆசிரியர் அனீஸ் ஃபாத்திமா அவர்களுக்கும். கெளரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் அவர்களுக்கும். என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

பரிசுபெற்றவர்களின் விபரம்
முதல் பரிசுக் கவிதை


“ முரண்பாடுகள் ”
அப்லலுல் உலமா எம்.நஜ்மா முஹ்யித்தீன் முஅஸ்கரியா
மார்க்கம்பட்டி

இரண்டாம் பரிசுக் கவிதை
“குறியீடுகள்!”
கு.ரா (எ) கு . இராசேந்திரன்
மேட்டூர் அணை

மூன்றாம் பரிசுக் கவிதை - 1
“இறைவா இவர்களை.....”
வழுத்தூர் ராஜா கமால் - துபை

மூன்றாம் பரிசுக் கவிதை - 2
“முஸ்லிம் இளைஞனே”
மஜீதா மைந்தன், கீழக்கரை

மூன்றாம் பரிசுக் கவிதை -3
“நான் ஏன் விதவையானேன்...?”
தாஹா , காயல்பட்டணம்

மூன்றாம் பரிசுக் கவிதை - 4
“ஆராரோ ஆரிரரோ.....”
“பொற்கிழிக் கவிஞர்மு. சண்முகம்,
இளையான்குடி

ஆறுதல் பரிசுகள்

சங்க சலீம்'
பி.ஜாகிர் ஹ¤ஸைன்
பாபநாசம்

அழாதே அம்மா '
கவிஞர் மு.சண்முகம்
இளையான்குடி

சோகச் சக்கரம்'
உம்மு ஷைபா (மஹபூபா)
கீழக்கரை

அடி ஞானப் பெண்ணே '
மலிக்கா
துபை

மாநபியின் மனிதநேயம்'
அ.ரபியுத்தீன் ஹ¤சைன்,
இராமனாதபுரம்

என் இந்தியா'
தாஹா (S.M.A . ஹைருன்னிஸா ஆலிமா)
காயல் பட்டணம்

வலி

மலிக்கா
துபை

பள்ளிவாசல்'
எல். ஆமினா,
அத்திக்கடை

மலிந்து போன மனிதம்'
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி

கலைந்த கனவு'
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி

எது நிஜமானது?
ஹாஜியா ரஹீமுன்னிஸா எம்.ஏ. பி.எட்.
கீழக்கரை

விடியல் வேண்டி'
மஹபூபா
கீழக்கரை

உண்மை உரைத்திடுவோம்'
சுலைமா சமி இக்பால்
மாவனைல்லை, இலங்கை

கையூட்டு
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி

பேராற்றலின் சொந்தக்காரன்
ஹைருன்னிஸா முஅஸ்கரிய்யா
காயல் பட்டணம்

வாலிபச் செல்வங்களே
காதிர் ஷேக்
காயல்பட்டினம்

ஒரு சிசுவின் குரல்
ஹைருன்னிஸா முஅஸ்கரிய்யா
காயல் பட்டணம்

கல்யாண மாப்பிள்ளையே!
கடலூர் காதர்

சுமைதாங்கியாய்
ஹாஜியா ரஹீமுன்னிஸா எம்.ஏ. பி.எட்.
கீழக்கரை

மரணமெனும் நூலகம்
பி.ஜாகிர் ஹ¤ஸைன்
பாபநாசம்...

பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

முடியாததை முடிக்கும்!


பட்டாம்பூச்சியாகி
பொன்வானில் பறந்ததும்

காற்றோடு கைகோத்து
கொஞ்சி குழாவியதும்

நிலவோடு நிலவாகி
நீந்தி நீந்தி நடந்ததும்

நட்சத்திரத்தை கோத்தெடுத்து
நகைசெய்துபோட்டதும்

மேகத்தின் பஞ்செடுத்து
மெத்தையாக்கிக்கொண்டதும்

வானவில்லை வரச்சொல்லி
வண்ணங்களை வாங்கியதும்

வண்ணமிகு மலர்களிடம்
வம்புபண்ணி விளையாடியதும்

கடலலைகள் துள்ளிவரக்
கால்களோடு கட்டிப்போட்டதும்

தண்ணீரை தரையில்கொட்டி
கிள்ளிவிட்டு ரசித்ததும்

அந்தரத்தில் ஊஞ்சல்கட்டி
ஆடி ஆடிப்பார்த்ததும்

இன்னும்

இயலாத அத்தனையும்
இயலவைத்துக்காட்டிடும்

முடியாதவற்றையும்
முடியவைத்துக்காட்டிடும்

பொல்லாத கற்பனை
பொய்யுரைக்கும் கற்பனை....அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வயோதிகத்தின் விளிம்பில்!16- 3-2010 அன்று
யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது
மிக்கநன்றி யூத்ஃபுல் விகடன்வளர்ந்து வரும் வயதில்
வம்புசெய்துகொண்டே
இதென்ன இதென்ன
எத்தனை முறை
அதென்ன அதென்ன
எத்தனை முறை


அசராமல் கேட்ட
கேள்விக்கெல்லாம்
அலுத்துக்கொள்ளாமல்
அன்போடு அத்தனைக்கும்
பதிலளித்தேன்


:ஆனால்”


வயோதிகத்தின் வாசம்-என்
வயதைத்தொட்டு நிற்கையில்
இதென்ன இதென்ன
இரண்டாம் முறைக்கேட்டு
முடிக்கவில்லை
முகம் சிவக்க
முனுமுனுத்தாய்


எத்தனை முறை
சொன்னாலும்
புரியாத ஜென்மமென்று!
பளிச்சென்று புரிந்தது
எனக்கு
பிள்ளையின் பாசமின்று!

இதை கிளிக் செய்தால் இந்த கவிதையின் அர்த்தம் புரியும்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்

உலகக்காதல்களில் முதல்முறையாக புதுமைக்காதல் எங்கள்காதல்
நான் பிறக்கும் முன்பிலிருந்தே பெண்தான் பிறக்கும் என்றநம்பிக்கையில்
என்மீது காதல்கொண்டு எதிப்பார்த்திருந்து
பிறந்தபின்னும் 10 வருடங்கள் எனக்காக காத்திருந்த காதல்.
காதாலாய் கண்களுக்குள் நுழைந்து கணவனாய் நெஞ்சதில் நிறைந்து
உயிராய் உதிரத்தில் கலந்த உன்னத அன்பு...

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பது
என்னைப்பொருத்தவரையில் நிச்சயமான உண்மை.
பெண்பிறக்கும் முன்பே ஆண்பிறந்து அவனுக்கான துணைவேண்டி காத்திருக்கிறான்..

தங்கைக்கு மகள் பிறந்தாள், அதை தன்மகனுக்கு கட்டனும். இது அண்ணன் தங்கை மற்றும் குடும்பம் எடுத்த முடிவு.
எனக்கான வருகைக்கு நான் பிறக்கும் முன்பிலிருந்தே காத்திருக்க  தொடங்கிய காதலும், குடும்பமும்.
பிறந்துவிட்ட புத்தம் புதியமலரை, அள்ளிக்கொடுக்கப்பட்டது காத்திருந்த பதினோறுவயது பிஞ்சிக் கைகளுக்குள். அன்று கண்களுக்குள் ஒற்றிக்கொண்ட காதல் இன்றுவரை கண்களைவிட்டு அகலாமல். எள்ளளவும் இதயத்தைவிட்டு விலகாமல் எனக்கே எனக்காய்.

மார்ச் 17 அன்று. திருமணநாள் இருமனங்கள் இணையும்நாள்..[அதான் பிறக்குமுன்பே இணைந்துவிட்டதே இருமனமும்]
தெருவையே வளைத்து பந்தல். ஊரும் உறவும் கூட மேளதாளம் முழங்க, மாலைமாற்றி மங்களம். அண்ணன் தங்கை கண்களில் நீர்கோலம். என்றோ முடிவெடுத்தது அன்று உறுதிசெய்யப்பட்டது.
கணவன் மனைவி என்றால் என்ன என்றே புரியாத வயது எனக்கு.
மனதில் நின்றெதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் மச்சான் இவர் என்னுடைய மச்சான் அவ்வளவுதான். இன்றளவும் அதையேதான் மச்சான்.

நிறைய கணவன் மனைவியரை பார்த்திருக்கிறேன். ஈகோ ஏதாவது ஒரு சிறுபிரச்சனைக்கூட சண்டை. மனம் ஒத்துப்போகாமல் அடிக்கடி மனஸ்தாபங்கள்.என விட்டுக்கொடுக்கமனசில்லாமல் ஒருவரையொருவருர் சாடுவது என பிரச்சனையை வளர்த்துகொள்வது அப்போது தோன்றியது.

கணவன் மனைவியென்றால்தானே பிரச்சனைவரும். காலமுழுவதும் மச்சான் மச்சியாகவே இருந்துவிடலாம் காதலுடம் இருந்துவிடலாம் என திருமணத்திற்குபின், என்னங்க இங்க வாங்களேன்,,,,,,,,, போங்களேனெல்லாம் கிடையாது. மச்சான் எதற்கெடுத்தாலும் மச்சான் சாகும்வரை மச்சான் இப்படியே கூப்பிடுவதென முடிவெடுத்து அதையே கடைப்பிடித்துவருகிறேன்.[என்ன நீங்களும் இன்றிலிருந்து கணவன் மனைவியெல்லாம் மச்சான் மச்சி ஆகிவிடுகிறோமுன்னு சபதம் எடுப்பதுபோல் தெரிகிறது அப்படியே ஆகட்டும்]

கணவன் மனையென்றாலே பிரச்சனைதான் என்று, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அது அவரவர் வாழும் சூழ்நிலைகள்பொறுத்து. மன நிலையைப்பொறுத்து. விட்டுக்கொடுக்கும் தன்மையைப்பொறுத்து. பிரச்சனைகளும் வரும், வரனும். அப்போதுதான் வாழ்க்கை என்ற வண்டி சுவாரசியமாக ஓடும். இனிப்பே சாப்பிட்டாலும் சரியிருக்காது கசப்பையே சாப்பிட்டாலும் சரியிருக்காது அதனால் இடையிடையே கசப்பான பதார்தங்களையும் சாப்பிட்டால் சுவையுமிருக்கும் உடல் ஆரோக்கியமுமிருக்கும் அதேபோன்றுதான் வாழ்க்கையும் [இவுக பெரியஞானி சொல்ல வந்துட்டாங்க என்ன ஹா ஹா ஹா]

கண் நிறைந்த கணவர் அப்படியென்றால் என்ன? மனம்நிறைந்திருந்தால் கண் ஒளிர்ந்திருக்கும் ஆக மனதை நிறைவடையச்செய்வதால் கண் நிறைவடையும் அப்படித்தானே!!!!!!
ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும். எப்படி நடக்கவேண்டும் என்ற உதாரணம் மச்சானிடம் நிறைய உண்டு. விட்டுக்கொடுக்கும் தன்மை.[ஆகா என்னிடமும் உண்டுங்கப்பா, ஆனாகொஞ்சம் குறைவு] பெண்ணுக்கும்
மனசு உண்டு அதில் ஆசை. எண்ணம். என அனைத்தும் உண்டு அனைத்தையும் நிறைவேற்றமுடியாவிட்டாலும் நம்மால் இயன்ற அளவு முயற்ச்சி செய்யனும் என நல்ல எண்ணங்கள் நிறைய உண்டு.
அப்புறம் எங்க மச்சானுக்கு சூப்பராக சமைக்கவும் தெரியும். சில ஆண்கள்போல் இதை நீதான் செய்யனும். நீ இதைசெய் அதை நான் செய்கிறேன் அப்படியெல்லாம் இல்லவே இல்லை

ஆண்பாதி பெண்பாதி இருவருமே சரிபாதி என்பதைபோல்.ஆபீஸ்போய்விட்டுவந்து எங்களுக்காக எங்கள் வேலைகளையும் செய்துதருவதில் மச்சானுக்கு ஒரு மனதிருப்தி. மொத்தத்தில் மச்சான் மிகவும் ஒரு நல்லகுணமுள்ள மனமுள்ளமனிதர்.
இவரைபோலவே [அச்சோ இவரையே அல்ல ஆங் அஸ்கு புஸ்கு] அனைத்து பெண்களுக்கும் கணவர்கிடைத்தால் கிடைத்திருந்தால் சந்தோஷமே!
என் எழுத்துக்களுக்கும் சரி. என் எண்ணங்களுக்கும்சரி. என்றுமே எதற்குமே எவ்விததடையும் சொல்லியதில்லை. தடையில்லையே என்பதற்காக நானும் அதை தவறாக பயன்படுத்தியதுமில்லை.

\சிறிய சம்மவம். துபையில் ஒரு பெரியஹோட்டலில் ஃபேம்லி
பார்ட்டி மச்சானின் டிப்பாட்மெண்ட் வைத்தது. அதில் கலந்துகொண்ட அத்தனைபேரும் வசதியிலும் சரி பொருப்புகளிலும் சரி பெரும் பெரும் மனிதர்கள் முக்கியமாக அரபியர்கள். அக்கூட்டத்தில் நாங்களும் எங்களோடு சில இந்தியர்களும்.


எல்லாரும் போய் போய் தானாகவே பெரியவர்களான அவர்களிடன் கைகொடுப்பதும் தன்னை அறிமுகப்படுத்துவதுமாக இருக்கும்போது மச்சான்மட்டும் எங்களோடவே இருந்தார்கள். மனதுக்குள் நினைத்தேன் ஏன் இவர்கள்மட்டும் போகமால் இருக்காங்க என்று, சிறிது நேரத்தில் யார் அங்கே ரொம்ப பெரியவராக கருத்தப்பட்டதோ அவர்களே எங்களருகில்வந்து மச்சானின் முதுகைதட்டிக்கொடுத்து கைகளைப்பிடித்துக்கொண்டு [ஃபாரூக் ஈஸ் வெரி வெரி ஜென்டில்மேன் அன் நைஸ்மேன்] என இங்லீஸில் புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்தடுத்து மூன்று நான்குபேர்கள் வந்து மச்சானிடம் பேசியவிட்டு எங்களிடமும் இவர்மிகவும் நல்லவர் சிறந்தவர் வேலையில் மிகுந்த கெட்டிக்காரார்..என பாராட்டியபோது எப்படியிருந்திருக்கும் ஒரு மனைவியான எனக்கும். குழந்தைகளான என் பிள்ளைக்கும்.சந்தோஷம் தத்தளித்தது தன்கணவரை பிறர் அதுவும் பெரிய பதவியிலிருக்கும் பெரியப்பெரியமனிதர்களே பாராட்டக்கேட்கும்போது ஆனந்தத்தில் திளைத்தோம். நிறைய பரிசுகளும் வழங்கப்பட வாங்கிக்கொண்டு மனம் நிறைந்து வீடுவந்தோம்./

மனைவியென்பவள் தன்கணவருக்கு சிறந்த மனைவியாக. சேவையில்தாயாக. சிலநேரம் தந்தையாக. நல்ல தோழியாக. பழக்கத்தில் குழந்தையாக. என சகலமுமாக வாழவேண்டும் என நினைக்கிறேன், பலநேரம் நடக்கிறேன். சில நேரம் நானே குழந்தையாக மாறிவிடுகிறேன் பிடிவாதத்தில்..சிறு சிறு சண்டைகள்கூட வேண்டுமென்றே போட்டுக்கொள்வோம் அதிலும் நானிருக்கேனா அப்பாடி சும்மாவாச்சிக்கும் மச்சானை வம்புக்கு இழுத்து தொனதொனவென பேசுவேன் பாவம் மச்சான் இல்லல்லலல.

இதோ இன்றோடு பதினெட்டைக்கடந்து, பத்தொன்பதாம் ஆண்டை வெற்றிக்கரமாக தொடங்கப்போகிறோம். அழகிய அன்பான இரு குழந்தைகளோடும். கனிவான குடும்பத்தோடும்...
வாழும் காலம்வரை மனநிம்மதி, மனசந்தோஷம் மனதிருப்தி. இருந்தால்போதும் எங்களுக்கு.
நிச்சயம் எங்களுக்குள் அது என்றும் நிலைத்திருக்கும்.
இருக்கும்படி செய்துகொள்வோம் என்ற நம்பிக்கையில். மீண்டும் இருவரின் கைகளும் இருவர் கைகளுக்குள்ளும். இளமைக்காதல் இதயத்துக்குள்ளும்.


பச்சிளம் வயது பவளம்
பாசம் கொண்டது பருவம்
நிச்சயம் செய்தது குடும்பம்
நினைத்தது நடந்தது குதூகலம்

மாலைப்பொழுதின் வேளை
மாலை சுமந்தாள் மங்கை
மச்சானென்ற கணவன்
மனத்துக்குள் நிறைந்து
கலந்தான் உயிரில்

அன்றுமுதல் இன்றுவரை
உள்ளம் நோகும்படி
ஒருவார்த்தை சொன்னதில்லை
ஊரார் பேசும்படி
ஒருபோதும் நடந்ததில்லை

வேதனைகள் வந்தபோதும்
வருத்தப்பட வைத்ததில்லை
கடிந்து பேசினாலும்
கோபங்கள் கொண்டதில்லை

அணைத்துப்பேசும்போது
அன்னையானான்
அதட்டிப்பேசும்போது
அண்ணனான்

தட்டிக்கொடுக்குபோது
தந்தையானான்
கொ[கு]ட்டிப்பேசும்போது
தங்கையானான்

கொஞ்சி நடிக்கும்போது
குழந்தையானான்
தோளில் சாயும்போது
தோழியானான்

மார்பில் சாயும்போது
மச்சான் ஆனான்

ஆக மொத்ததில் எனக்கு
அனைத்துமானான்
ஆதலால்
மொத்தமாய் நான்
அவனுக்கே அவனுக்கானேன்...

இதோபோன்றதொரு வாழ்க்கையை அமைத்துத்தந்த என் இறைவனுக்கே புகழனைத்தும். அதோடு என்தாய் மாமன் அவர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன் கண்ணீர் வழிய [தற்போது அவர்கள் உயிரோடு இல்லை] என் தாய் தந்தைக்கும் என் தாய்மாமன் அவர்களுக்குக்காவும் நான் என்றென்றும் துஆசெய்யக்கடமைப்பட்டவள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எனக்குப்பிடித்த பத்து பெண்கள் [தொடரோ தொடர்]


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தேனக்காவிற்கு நன்றிகள் பல.

நமக்கு உலக அறிவு பத்தாதுங்க அதை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்
[ஹூம் இன்னமும் வளர்ந்தபாடில்லை]
நிபந்தனைகளை நான் சற்று தளர்த்திக்கொள்கிறேன் அடிக்க வர்ரவங்க ஆட்டோவில் வந்தாலும் சரி ரயிலில் வந்தாலும் சரி.இல்லன்னா ஏரோபிளேனுல் வந்தாலும் சரி. ஹா ஹா [அடிவாங்கப்போறது நானில்லையே]

நிபந்தனைகள் :-

1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...


பாத்திமாபீவி.[முன்னாள் தமிழக கவர்னர்]
இவர்  முதல் பெண் நீதிபதியாக சுப்ரின்கோர்ட்டில்
பணிபுரிந்தவர்.
கவர்னராகவும். மனிதஉரிமை கமிஷனில் உறுப்பினராக இருந்தவர்


அன்னை தெரெஸா..[அவர்கள்]
அனைத்து குழைந்தைகளுக்கும் அன்னையாக ஒருதாயால் முடியாது. ஏதோ ஒருவிதத்தில் முகம் சுளிக்கநேரிடும். ஆனால் அனைவருக்கும் அன்னையாக வாழமுடியும் என வாழந்துக்காடிய அன்னை.இவங்களைப்போல் நற்குணத்தை நாமளும் உண்டாக்கிக்கொள்ளனும்..

பாத்திமா [ரலியல்லாஹ்] அவர்கள்
இவர்கள் நபிகள் நாயகத்தின் திருமகளார். ஒருபெண்மணி எப்படி வாழவேண்டும் என்ற பாதையை வழி வகுத்துத்தந்தவர்கள்.
தாய் தந்தை அவர்களுக்கு சிறந்த மகளாக. கணவர் [அலி ரலியல்லாஹ்] அவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனைவியாக. மகன்கள் ஹசன். ஹுசைனாருக்கு சிறந்த தாயாக விளங்கியவர்கள். மரணிக்கும்போதும் கணவரின் மார்பில் உயிர்நீத்தவர்கள்.
ஒரு நல்லவரை நேரில்பார்த்து அவர்களைபோல் வாழ்வதைபோல். அவர்கள் இப்படி நல்லவர்களாக தூயவர்களாக வாழ்ந்தார்கள் அதுபோல் வாழவேண்டும் என சொல்லக்கேட்டு வாழ்வதிலும் மிக சிறப்பு உள்ளது. இவர்களை மிகவும் பிடிக்கும்..

கவிஞர்.கனிமொழி.[அவர்கள்]எழுத்தாளர். கவிஞர். இந்திய பாராளுமன்ற இரு அவைகளில் ஒன்றான "மாநிலங்களவை உறுப்பினர்" (Member of Parliament (Rajya Sabha). எம்.பி. இவரின் நடை. உடை பாவனை. எளிமை. பேச்சு. அத்தனையும் பிடிக்கும் [இங்கு துபை வந்திருந்தபோது எவ்வளவு எளிமை நேரில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்] இவரின் கவிகளும் மிகப்பிடிக்கும்.வி சாந்தா. [அவர்கள்]
அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன்.
இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை
அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.

அருணாராய்.[அவர்கள்]
இவர் ஒரு சமூகசேவகி.இந்தியன் அட்மினிஷேசனில் சிவில் சர்வன்டாக பணிபுரிந்தவர். ஏழைகளுக்காக குரல்கொடுத்தவர்.

சி என் ஜானகி..[அவர்கள்]
இவர். இருகால்களையும் போலியோவினால் இழந்தும். நீச்சல் துறையில் சாதனைப்படைத்தவர்

லத்திக்கா சரன்.[அவர்கள்]
சென்னை மாநகர காவல்துறை முதல் பெண் ஆணையர்

அதோடு தற்போது, தமிழ்நாடு காவல்துறை முதல் பெண் இயக்குனர் (D.G.P)

வனிதா [ஜெனட்] [அவர்கள்]
இவர் பெங்களூரைச்சேர்ந்தவர். துபை வந்துதான் இவரைத்தெரியும். [தமிழ் படிக்கத்தெரியாட்டியும் பேசத்தெரியும்] அன்புத்தங்கையாகவே ஆனவர். பாசத்தையும் அன்பையும் இவரிடம் நிறைய கடன்வாங்கனும். இவரைப்போலவே இவர்கணவரும்.. [துபையில் இன்னும் நிறைய இருக்கு ஆனா ரூல்ஸ மீறக்கூடாதுன்னு விட்டுட்டேன் ஓகே]

பத்தாவதாக நான். [அன்புடன் மலிக்கா]

என்னது முறைக்கிறீங்க. [சொந்தங்களையும் உறவுகளையும் சொல்லகூடாதுன்னுதான் கண்டிஷன். நான் என் மச்சானுக்குதான் சொந்தம் உறவெல்லாம் சரியா] அதனால என்னை எனக்கு ரொம்பப்பிடிக்கும். என்னை எனக்கு பிடித்ததாலதான் மற்றவங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப்பிடிக்கிறது. குழப்புறேனா அதானே வேணும் ஹா ஹ ஹா


பெண்களில் வெரும் பத்துபேரைமட்டும்தானா????????? இன்னும் நிறையச்சொல்லலாம் ஆனா அல்லாரும் அவங்களுக்கு பிடிச்சவங்களை சொல்லி பத்துக்கு பத்து பத்துலச்சத்துக்குமேலன்னு ஆகிட்டதால இதுபோதும்..[இதில் பிழைகளிருந்தாலும் தவறுகளிருந்தாலும்  பொருந்திக்கொள்ளவும்]

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தேனக்கா ரொம்ப தேங்ஸ் என்ன இப்படி பொழம்பவிட்டதுக்கு.


நான் பொழம்பினமாதரி பொழம்பாம தெளிவா எழுதுற ஒரு நாளுபேரயாவது கூப்பிடுவோமா!


வாங்கங்கையா,, வாங்கம்மா...

ஜலீலாக்கா

நிலாமதியின் பக்கங்கள்

பித்தனின் வாக்கு

ஜெய்லானி

அப்பாடா நம்ம வேலை முடிஞ்சிரிச்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

என்ன பாவம் செய்தேனம்மா!!!!


சேவலென்ற கோழி கூவவில்லை
காகங்கள் கூடிக் கரையவில்லை
கட்டிடங்களுக்கு இடையே
கதகதப்போடு கிளம்பத்துடித்த
சூரியனுக்கு முன்பே
கிளம்பிவிட்டாள்
அதிகாலையில் அவசரமாய்

குளித்த தலையில் ஈரம் சொட்ட
குளிரில் தேகம் நனைந்து வாட்ட
ஒருபுறம் தோளில் கிடந்த
குழந்தை தூங்கி வழிய
மறுபுறம் கிடந்த
கைப்பை வரிந்து சரிய

பணத்துக்காக குழந்தைகளைப்
பார்த்துக்கொள்ளும் பெண்ணிடம்
கையில் கொடுக்கும் வேளை
பதறிக் கதறியது பிஞ்சு குழந்தை
பால்வடியும் முகம்கண்டும்
பதறவில்லை பாவை

பொசு பொசுக்கண்ணங்களில்
கண்ணீர் வழிய
கைகளை காட்டி அன்னையை
அணைக்க முயல
எட்டி நீட்டிய விரல்கள்
இவள் கூந்தலை இழுக்க
இருந்தும் ஈயாடவில்லை
தாயவள் முகத்தில்
எவ்வித தவிப்புமில்லை

முதுகை மட்டும்
தட்டிக்கொடுத்து விட்டு
முகம் திருப்பி வேகமாக
 நடை நடந்து
அவசரமாக ஓடி ஏறினாள்
ஆபீஸ் கார் கதவை
திறந்துக்கொண்டு

இரவு கிடைத்த அரவணைப்பு
இனி அடுத்த இரவுதான்
கிடைக்குமென்பதை நினைத்தும்
தாய் வாசத்தை நுகர்ந்த தேகம்
மாற்றாந்தாயின் மணத்தை
ஏற்காததை நினைத்தும்
ம்மா ம்மாயென நெடுநேரம்
அழுதது குழந்தை
அசதி வரும்வரை......

காலத்தின் கோலமிதுவோ!
காசுபணம் செய்யும் மாயமிதுவோ!!

[டிஸ்கி டெய்லி காலங்காத்தால நம்ம பையன ஸ்கூலுக்கு அனுப்ப பஸ்ல ஏத்த போறாம, அப்போ இப்பால அப்பால இதப்போல நெறய பாக்குறோமா அதால வந்த வின இந்த கவித, இருந்தாலும் மனசு கேக்கல அதேன்ன்ன்]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நட்பின் வலிமை


ப்ரியம் சமைத்த
பசுமை நிறைந்த
புல்வெளியில்
பனித்துளிபோல்,

பிரியமென்றாய்
பாசம்கொண்டேன்
அதீதப் பிரியமென்றாய்
அன்புகொண்டேன்!
நட்பானதால்.

துன்பம் வந்துன்
தோள் தொடுமுன்
கண்முன் வருவேன்
உன்தோள்தாங்கி
நிற்பேன்!
நட்பானதால்.

பேராசைகளோடு
பேரன்புகொண்டால்
வேண்டாமென்பேன்
கோபத்தோடு
கைகோத்து நின்றால்
கூடாதென்பேன்!
நட்பானதால்.

உன்னைச் சுற்றி
சோதனைகள்
சூழ்ந்ததென்றால்
சோகம்
என்னைத்தேடி
வாட்டும்
நட்பானதால்.

நீ
தவறிழைக்கும்போது
தட்டிக்கொடுக்கமாட்டேன்
ஏன் செய்தாயென
தட்டிக்கேட்பேன்
நட்பானதால்.

நீ
சாதித்து நிற்கும்
வேளையிலும்
இதுவெல்லாம்
போதாதென்பேன்
நட்பானதால்.

உன்னை
வருத்தம் வருத்தும்
வேளையில்
வருந்தாதவாறு
வருட வருவேன்
வசந்தமாய்
நட்பானதால்.

நீ
விலகிச்சென்றாலும்
வெறுத்துச்சென்றாலும்
வருவேன் கூடவே
நிழலோடு நிழலாய்!

ஏனென்றால்!!

படைத்தவன் கொடுத்த
என்
உள்ளக் கூட்டுக்குள்
உன்னை
பத்திரப்படுத்திக்
கொள்வேன்
என்னுயிரில் கலந்த
நட்பாய்................

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


[அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாத இதழுக்காக நான் எழுதிய கவிதை  [இம்மாத தலைப்பு நட்பின் வலிமை]

உறக்கமென்பது!!!!!


மரணத்திற்கான
முன் ஒத்திகை!
மரணம் வருமென்ற
முன்னெச்சரிக்கை!

மனப்போராட்டத்திற்கு
சிறு ஓய்வு!
மனிதப்போராட்டத்திற்கு
மறு ஆய்வு!

நிறைவேறாத ஆசைகளின்
நீச்சல்குளம்!
நிறைவேற்றும் எண்ணங்களின்
எதிர் நீச்சல்தளம்!

உடல் உழைப்புக்குண்டான
இடைவேளை!
உள்ளச் சோர்வுக்குண்டான
மலர்மாலை!

கலர் கனவுகளின்
வேடந்தாங்கல்!
கனப்பொழுதினிலும்
சொர்க்க ஊஞ்சல்!

ஆறடியையும் அடக்கும்
மயக்கும் வித்தை!
அடங்கிவிட்டால் அன்றே
மண்ணுக்குள் சிறை!!!!!!!!!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பரபரப்பு இங்கேயும்

என் மற்றொரு வலைப்பூவான  இனியபாதையில் இன்று
/மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்/ என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்,  அதை பார்க்கும்படி கேட்டுகொள்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கெளரவ வாழ்க்கை
உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்

அன்னாந்து பார்த்ததும்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்

மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க

வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி

குளியலறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்

தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
சென்றது
ஷவரின் அடியில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வாங்க வந்து தீர்ப்பச்சொல்லுங்க
மாப்புள்ள உடைச்சா அது கைதவறி
பொண்சாதி உடைச்சா அது கொழுப்புளடி!

[அச்சோ பழமொழிகூட வருதே. திகிரேட் டி” மலிக்கா]

அப்படின்னு சொல்லுவாங்க அதேபோல்.

”சரி சரி மேட்டர் என்னான்னு சொல்லு சீக்கிரம் அப்படித்தானே கேக்குறீங்க!

”என்னயிருந்தாலும் எப்படி சொல்லுரரரரரது”.

/ஏன் இந்த இழுவ

”இல்ல இது ஆம்புளைங்களைப்பத்தி இருக்கே அதேன் பயந்து வருது.

அவுகள குத்தம் சொல்லுறமோன்னு ஆளாளுக்கு அனானியா மாறிடுவாங்களோன்னு.

/ச்சேச்சே அப்படியெல்லாம் செய்யமாட்டாங்கா ரொம்பபப நல்லவங்கப்பா”

/சொல்லு சொல்லு மேட்டர் என்ன

”அதுவா? அது இதுதான் படிங்க.’

பையனுக்கு பெண்பார்க்கும்போது. [பணம் நகைக்கு அப்பாற்பட்டு]

நல்லகுடும்பமா?

பெண் நல்லவளா?

நல்ல குணமுடையவளா?

கொஞ்சமாவது அழகுள்ளவளா?
[இப்பவெல்லாம் வெள்ளவெள்ளேர்னுதான் பொண்ணுவேணுமாம்]

அனுசரனையாக நடப்பவளா?

காதல் கீதல் எதிலும் மாட்டாதவளா?

குடும்பத்துக்கு ஏற்றதுபோல் நடப்பாளா?

கட்டுக்கோப்புடன் இருப்பாளா?

எனசகலமும் நோண்டி நொங்கெடுத்து தெரிந்துகொண்டு அதில் சிறுகுறையிருந்துட்டா. [அட இதுதானே. சின்னப்புள்ளையில யார்தான் தப்புபண்ணல இதெல்லாம் ஒரு குத்தமா. அப்படியெல்லாம் எதிர்பார்க்ககூடாது ஓகே] இது நமக்கு சரிவராது சரிவராது வேறுயிடம் பார்ப்போம் என சொல்லிவிடும்போது,,,,,,,,,,

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது.

பையன் நல்லவனா?

.குணமுடையவனா?

.நல்லமனமுடையவனா?

.வேலையில் இருக்கிறானா?

சம்பாதிக்ககூடியவனா?

குடும்பத்திற்கு ஏற்றவனா?

கருப்பானாலும் [யார்ப்பா அது கருப்ப பத்திமட்டும் ஸ்ஸ்ஸ் மூச்சிவிடக்கூடாது]
எந்த கெட்டபழக்கவழக்கங்களும் இல்லாமலிருக்கா?

என ஒன்றுவிடாமல் ஆராயோ ஆராயின்னு ஆராயப்படுகிறது, அப்போது சின்னவயதில் சிலபல தவறுகள்தான். அது திருமணத்திற்குபின் எல்லாம் சரியாகிவிடும்[சரியாகலைன்னா அதுவிதிவிட்ட வழி அதெயெல்லாம் பத்திப்பேசக்கூடாது] என சொல்கிறார்களே!
அதையும் ஏற்றுக்கொண்டு திருமணம் முடிக்கிறார்களே!
அது சரியா?

இதே சிறுதவறை பெண் சிறுவயதில் அறியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?

தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றில்லையா?

இல்லை விதிவிலக்கிருக்கா?

திருமணம் ஆனவரானாலும் நோ பழாபழம். ஆகலைனாலும்
நோ பழாபழம். நியாயத்த சொல்லுங்க. இது சும்மா பேச்சிக்காக மட்டும்சொல்லிட்டு போறதில்லைங்க.அல்லாரோட
வாழ்க்கைக்காவும்தான்.

கொஞ்சம் விபரமாக விளக்குனீங்கன்னா இந்த அறியாத பச்சபுள்ளயும்
அல்லாரோடவும் சேந்து அறிஞ்சிகுவ்வேன். [நாட்டாமேங்களா தீர்ப்ப சொல்லுங்க] அதான் மேட்டரு வேரஒன்னுமில்ல நிஜமா வெளிக்குத்து, உள்குத்தெல்லாம் ஒன்னுமில்லங்கங்கோகோ கோ........


[டிஸ்கி: மலிக்கா வித்தியாசமா யோசிக்கிறாங்களாமா.. ஹி ஹி ஹி. ஏதாவது வித்தியாசம் தெரியுதுங்களா?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது