நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் இனிய பெற்றோர்களே! உங்களுக்குத்தான்!..



அனைத்து பெற்றோர்களும் அப்பாடா என பெருமூச்சுவிட்டு,
 மீண்டும் ஓரு பெருமூச்சுவிட காத்திருக்கும் நேரம் தற்போது இல்லையா!. பெருமூச்சோடு சேர்ந்து சில பெற்றோர்களுக்கு பெரும்குடல் சிறுங்குடல் எல்லாம் சேர்ந்துவிடுவதுபோன்ற கலக்கமும் மனதில் இருக்கும்.
 தேர்வுகள் முடிந்து தேர்ச்சிகளும் பெற்று அடுத்தது என்ன படிப்பது. எங்கு சேர்ப்பது. எந்த பள்ளி சிறந்தது. எந்த காலேஜ் சிறந்தது. அதுவும் ஹாஸ்டல் வசதியெப்படியிருக்கும். அதற்கு எவ்வளவு சிலவாகும் என மண்டையைக் குடையும் கேள்விகள் பலஎழுந்து எழுந்துஅடங்கும்.


இச்சமயத்தில்தான் மிக கவனமாக செயல்படவேண்டும்.
படிப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக முக்கியமானது. அதை சரியானநேரத்தில். சரியான விதத்தில். சரியாக தேர்வுசெய்து அவர்களுக்குத்தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை. அவர்களின் எதிர்காலமே இப்படிப்பில்தான் இருக்கிறது என்பதை முதலில் அவர்களுக்கு உணர்த்துதல் மிக அவசியம். அப்புறம். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்.


அவர்கள் எடுத்திருக்கும் முடிவும். தேர்வும். சரியானதாக இருக்கும் பட்சத்ததில் அவர்களின் விருப்பத்திற்கே படிக்க அனுமதிப்பது சிறந்தது. அல்லது அது சரியானதாக இல்லாதபட்சத்தில் எடுத்துச்சொல்லுங்கள். ஏன்? எதனால்? என்பதையும் சற்று விளக்கிச்சொல்லுங்கள். அத்தோடு குடும்ப சூழலையும் அவர்களுக்கு புரிவதுபோல் சொல்லுங்கள்
நம் குழந்தைகள்தான் அவர்களிடம் பக்குவமாக சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். ரொம்ப கறாராக நடந்து. இவங்க என்னத்த சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள். நிதானம் அவர்களைவிட நமக்குதான் மிகமுக்கியம்.






அடுத்து தேர்ந்தெடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி அதில் மிக கவனமாக இருங்கள். தரமான கல்லூரிகளாக! அதேசமயம் உங்கள் வசதிக்கு தகுந்தார்போல் தேர்ந்தெடுத்துச் சேருங்கள். அதற்குமீறி சேர்த்துவிட்டு பின்பு அவஸ்தைக்குள்ளாகாதீர்கள். இதனால் பாதிப்படைவது இருவருமே! நிறைய மார்க் வாங்கியும். வசதியில்லாத காரணத்தால் தரமான கல்லூரிகளில் சேர்க்கமுடியவில்லையா! தொண்டு நிறுவனங்களையும். கல்விக்காக உதவும் நல்லுள்ளங்களையும் தயங்காமல் நாடுங்கள். கல்விக்காக உதவ எத்தனையோ மனங்கள் காத்திருக்கு அவைகளை நல்வழிக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


அடுத்து ஹாஸ்டல். ஹாஸ்டலில் தங்கிப்படிக்கவைப்பது தற்காலத்தில் பேஷனாகிவிட்டது.முதலில் ஹாஸ்டலில் தங்கிதான் படிக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள். ஏனெனில். ஹாஸ்டல் என்பது குழந்தைகளுக்கு நல்லன்பைதரக்கூடிய இடமாக இருக்குமா!
எல்லாம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாவும்.  ஏதோ எதற்கோ படிக்கவந்துள்ளோம் என பொடுபோக்குதனமான படிப்பை படிக்குமிடமாகவும் தானேயிருக்கும்.   பிஞ்சுமனசு பயமறியாது.எவ்வித  பயமில்லாமல் நாம் இங்கே எதைச்செய்தாலும் யார் கேட்கப்போகிறார்கள். எதையும் செய்துக்கொள்ளலாம் எங்கும் மனம்போனபோக்கில் போகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுமே?


அங்கே அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ,
கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு
எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!




அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக தனிமைபடுத்தும் சிறை அவசியமானதா! அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தாலும் மனதளவில் தனிமைச்சிறைதானே! தட்டிக்கேட்க ஆளில்லாமல். கட்டுக்கடங்காமல். [ஒருவார்டனை சமாளிப்பதா பெரியவிசயம்மென] எத்தனை எத்தனை தவறுகள்.
எத்தனை எத்தனை குற்றங்கள். பிஞ்சியிலேயே வெம்பி வெதும்பவிடவும் யார்காரணம். சில வேளை யாருக்காக ஓடாய் தேய்கிறார்களோ அவர்களே இல்லாமல் போய்விடுகிறார்களே இதெற்கெல்லாம் எது காரணம்! யார் காரணம்?


ஆனால் தற்காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் குழந்தைகளை கவனிக்க வீட்டில் ஆளில்லாமல் இருக்கும் பட்சத்தில் ஹாஸ்டலில் விட்டுவிடுவதுமேல் என நினைப்பது சரி. அங்கே தன் குழந்தை எப்படியிருக்கு. எந்த மனநிலையில் இருக்கு என்று நிறைய பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. அவன் நல்ல நிலைக்கு வரவேண்டும். அதற்காகதானே நாங்களிருவரும் மாடாய் உழைக்கிறோம்.என்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கு ஓடாய் தேய்வது பலநேரம் பலனற்றுப்போய்விடுகிறது. ஒரே ஒரு குழந்தை அதுவும் ஹாஸ்டலில் என்ன கொடுமை. அக்குழந்தை வளர்ந்து ஆளாகி எப்படி நம்மை கடைசி காலத்திலோ! அல்லது முடியாமல் போகும் நேரத்திலோ தம்மை வைத்துபார்ப்பார்களா?.


சின்னச்சிறிய வயதிலேயே நாம்தானே அவர்களுக்கு கற்றுக்கொடுகிறோம் தனிமையை! அதையேதான் அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரவுமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது.
அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்.
அதையும் அவர்களெதிரிலேயே சொல்லாதீகள்.


நீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும். நீங்கள் நினைக்கலாம் அது நம்கடமையல்லவா அதற்கு கைமாறு எதிர்ப்பார்கலாமான்னு. இது கைமாறல்ல. அவர்களுக்கும் கடமையிருக்கு என்பதை உணர்த்துவதேயாகும்.




எதுவென்றபோதும் அனைவரும் அமர்ந்து கலந்து ஆலோசியுங்கள். முதலில் குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் போக்கில மாறுதல்கள் தெரியும் பட்சத்தில். கடிவாளத்தைப்போடுங்கள். நீங்கள் போடும் கடிவாளத்தை மிக கவனமாக போடுங்கள். அது அவர்களின் வாழ்க்கையென்னும் குரல்வளை நெறித்துவிடாதவாறும். அல்லது இவ்வாழ்க்கையிலிருந்தே அறுத்துக்கொண்டு ஓடிவிடாதாவாறும் இருக்கவேண்டும்.


உங்களின் எதிர்காலம் அவர்களின் எதிர்காலம் எல்லாமே நீங்கள் எடுக்கும் முடிவிலதான் இருக்கிறது. எடுக்கும் முடிவை நீங்கள் தவறாக எடுத்துவிட்டு கடைசியில் அவர்களை குற்றம் சொல்வதில் எவ்விதத்திலும் நியாயமேயில்லை! ஆகவே பெற்றோர்களே! உங்களின் தேர்வுகள். மிக தெளிவானதாகவும். அது. உங்கள் வம்சத்தையும் உங்களையும் பாதிக்காதவாறு தேர்வுசெய்யுங்கள் அதாவது.படிப்பைதந்துவிட்டு வாழ்க்கையை தொலைக்க வைத்துவிடாதீர்கள். அவர்களின் எதிர்காலம் என்பது அவர்களுடையை வாழ்க்கையையும் சேர்த்துதான்.


வாழ்க்கைக்கு கல்வி மிக மிக அவசியம்
அக்கல்வியை நெறியாக. முறையாக.
அமைத்துகொடுத்தலும் அமைத்துக்கொள்ளுதலும்.
மிக மிக மிக அவசியம்..


டிஸ்கி//இதில் நான் எதுவும் தவறாக சொல்லியிருந்தாலும். மனம்படும்படியான வார்த்தைகளிலிருந்தாலும் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்.


நீலவானில் ..

படிப்பு வேண்டும் படிப்பு வேண்டும்

பள்ளிப்படிப்பு படிக்கவேண்டும்

புகழ் வந்து சேர்த்த போதும்
பெரும் வசதிவாய்ப்பு வந்தபோதும்
படிப்பறிவு இல்லையென்றால்
பத்தாம் பசலியாகக் கூடும்

பணக்காரனும் படிக்கவேண்டும்
பாமரனும் படிக்கவேண்டும்
பள்ளிப்படிப்பு முடித்த பின்னே
பட்டப்படிப்பு தொடரவேண்டும்
படு புத்திசாலியாக வேண்டும்

வீட்டைகாக்க படிப்பு வேண்டும்
நாட்டைக்காக்க படிப்பு வேண்டும்
படிப்பை மட்டும் படித்துவிட்டால்
பல சோதனைகளை வெல்லக்கூடும்
பெரும் சாதனைகள் வந்து சேரும்.

சில்லென்ற காற்றில் கூட
சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
நீலவானில் -உன் கால்கள் நடக்கும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.


என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது