நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலைந்து எறி


கவலைகளை

மனச்சிறையில் அடைத்து வைக்காதே
அது செல்லாக மாறி

உன்னையே அரித்துவிடும் அழித்துவிடும்

கவலைப்படுவதால்

ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு

கவலையேற்படுமென்றிருப்பின்
அது வந்தேதீரும்

வருத்தம்வந்துவிட்டதே! என

நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா

எல்லாவற்றையும் எதிர்பார்த்து
வாழ்வதே

வாழ்க்கையென்றாகிவிட்டதால்

எதையுமே

ஓர் வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்


கவலையென்பது கானல்நீர்

”ஆனால்”
நீதான் அதை நீரென்று

நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்


கவலை கவலை என

உனக்கு நீயே ஏன்
வலை பின்னிக்கொள்கிறாய்


கவலையிலும்

ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்

”வ”என்ற
 வருத்தத்தை நீங்கிவிட்டு


கவலைகளா அதை கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு அல்லது
கவலையை கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்

கவலையே காணாமல்போய்விடும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

வலி


கைதடியை

தட்டித் தட்டியக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா

தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி

வீடுவந்து சேர்த்தவர்கள்
வாசல்திரும்பவில்லை

உள்ளிருந்து ஒலித்தது

ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின்

ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு

வாக்கிங்

கத்தியில்லாமல்

குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல்

வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம்

தானாய் புலம்பியது ரத்தினமே நீ
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்
இந்த புண்பட்ட கிழவனுக்கு
எப்போது உயிர்
பொசுக்கென்று போகுமோ,,,
வலுவிழந்துவிட்டால் வாழ்க்கை
வலியாகிப்போய்விடுமோ-


என்று
வருத்தும் நெஞ்சடைக்க
விழியருவி பார்வையை மறைக்க
வெற்றிடத்தை உற்றுப்பார்த்தபடி
உருக்குலைந்த உடம்போடு

உருகியது மனம்...

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது