நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தடுமாற்றம்!


சுசிலா வழக்கம்போல் கணினியில் அமர்ந்தபடி தன் வேலைகளை தொடர்ந்தாள்.கைகள் டைப் செய்துக்கொண்டிருந்தபோதும் ஒருகணம் மனம் அவனை நினைத்தது.

ஒரு ஸ்டெனோவா அலுவலகத்தில் இருக்கும் சுசிலாவுக்கு ஒருமுறை சாட்டிங்க வழியே ஹரி என்ற நண்பனின் அறிமுகம் கிடைக்கவே தினமும் அவனிடம் 10 நிமிடமாவது உரையாடிக்கொள்வதுண்டு.
இதுவே 2 ,மாதங்களாக தொடர்ந்தது. தோழமைகளான நட்பு சற்றுவிரிவடைந்து காதலானது.

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை இருந்தபோதும் நெருக்கம் கூடியது, வார்த்தைகள் தேன்தடவி விளையாடியது, வானவில்லின் வண்ணங்களை கண்முன்கொண்டுவந்து கொட்டியது.

இருவருமே திருமணமானவர்கள்.
ஆனபோதும் ஏதோஒன்று இருவரையும் இணைத்துப் பிணைத்தது.
இது இருவருக்குமே தவறு என தெரிந்தபோதும் ஏனோ மனம் பிடிவாதமாய் தவறில்லையென வலுக்கட்டாயம் செய்தது.

நாட்கள் செல்லச் செல்ல மனம் பதைபதைப்புக்குள்ளாகியது
ஒருமுறை கணினிவழியே பேசிக்கொள்ளவிட்டாலும் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தாள்.

ஒருநாள் தன் அன்புக்கணவன் சுந்தரிடம் இதைசொல்லிவிடலாமா என எண்ணிக்கொண்டே அருகே அமர்ந்தாள்.
குடும்பத்தின் சிலசூழல்களை அவன் சொல்லத்தொடங்கியதும் தான் சொல்ல வந்ததை சொல்லாமலே அவன் மார்பில் முகம்புதைந்து அழுதாள்.

ஏன் ஏன்னென்று அணைத்தபடி அவன் கேட்டும் சொல்லமுடியாமல் கண்ணீரை துடைத்தபடி ஒன்றுமில்லைங்க என சொன்னவளாய் மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

மனம் ஒரு குரங்கு அது நினைத்த இடத்திற்கு தாவ நினைக்கும்
அதன் வழியிலேயே விட்டுவிட்டால் நாசம்தான் மிஞ்சும்.
தன்வாழ்க்கையில் எக்குறையும் இல்லாமல் வாழ்ந்துவரும்
நாம் எதில் சரிக்கினோம்?
எதற்கு மற்றவரின் வார்த்தையில் மயங்கினோம்?
வார்த்தைகள் அத்தனை வலிமையானதா?
தவறிட இருந்தோமே!
நல்வாழ்க்கையை தொலைக்க நினைத்தோமே!
என்று எண்ணிக்கொண்டே
தன்னையே சற்றுநேரம் தாழ்ந்தவளாய் நினைத்தாள்

மனம்போனபடி வாழ்வதா வாழ்க்கை, இப்படித்தான் வாழவேண்டும் என்பதுதானே வாழ்க்கை, எப்படிவேண்டுமென்றாலும் வாழலாம் என்பது வாழ்க்கையல்லவே!
என்பதை அவள் மனம் அவளுக்கு உணர்த்தியது.

மறுநாள் காலை ஒருமுடிவெடுத்தபடியே அலுவலகத்திற்குள் நுழைந்தவள், கணினியை கண்டதும் அவன் நினைவுவர அப்படியே புறந்தள்ளிவிட்டு ஆன்மாவுக்குள் ஆண்டவனை நினைத்தாள்
தவறுதலாக தவறை செய்துவிட நினைத்தேன், அதனை தவறென்று உணர்த்தி, என்னை உன் தண்டனையிலிருந்த காப்பாற்றிய கடவுளே! உனக்கு கோடான கோடி நன்றி
என்று நெஞ்சம் உருக கண்ணீர் வழிந்தது.

உள்ளம் புயலுக்குள் சிக்கிமீண்ட உணர்வை உணர்ந்தாள்
மனம் இப்போது தென்றலின் சுவாசத்தை உள்வாங்கியபோது
நெஞ்சுக்குள் நெகிழ்ச்சியாய் சில கவிதை துளிகள் தெறித்தது..


தவறிழைக்காத மனிதறென்று எவருமில்லை
தவறிழைத்துக்கொண்டே இருப்பவர் மனிதரில்லை

மனமே...!
நீ தவறிழைப்பது இயல்பு - அதுவே
தொடர்வது அழகற்ற மரபு....

மனிதன்
தவறிச்செய்யும் சிறு குறும்பு - அதுவே பின்னால்
யானைக் காதில் புகுந்த எறும்பு....

தவறை செய்து விட்டபின் மனமே....
தவறுவதிலிருந்து திரும்பு - அதுவே
உனக்கு நீயே கொடுக்கும் மருந்து....

மனசாட்சியோடு வாழ்வது சிறப்பு....
அதை துறந்து வாழ்வது - உனக்கு நீயே
தேடிக்கொள்ளும் இழப்பு

மனம்போல் வாழ்வதா அழகு - உன்
மனசாட்சியில் வேண்டும் நலவு -அதனால்
மனதோடு
மல்லுக்கு நின்று பழகு...

 
டிஸ்கி// இன்று இப்படி நாளை எப்படி? என்பதைக்கூட விளங்கமறுக்கும் கூட்டமாக தற்கால சூழ்நிலையின் சுழற்சியில் சிக்கிக்கொண்டு சீரழிந்தும். சீரழியப்பார்க்கும். மனங்கள் ஏராளம்.
அதிலிருந்து நம்மைநாமே காப்பாற்றிக்கொள்ள தன்னைதானே தெளிப்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமல்லவா?
 இதுபோன்று நிறைய நடக்கிறது.அதுதான் இப்படி கருவை வைத்து, எழுதத்தூண்டியது. எழுதியது சரிதானே? எதுவென்றாலும் சொல்லுங்கள்.

கதைக்குள் கவி என்று. என்னுடைய இந்த குட்டிக்கதை கவி. 
சார்ஜாவில் இருக்கும் சீமான் அமைப்பின் 
ஆண்டுமலர் புத்தகத்தில் வெளியாகியுள்ளது . அதில்,
இதிலுள்ள பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு வெளியாகியிருக்கிறது.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது