நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எச்சில் பூக்கள்


நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த
அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது

பெற்றோரின்
முகம்காணாயிந்த மொட்டுக்கள்
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும்
சிறகொடித்த பறவைகள்

தன் சுகங்களை மட்டுமே
பெரிதென எண்ணிவாழும்-சில
மனித ஜென்மங்களால்
ஜனனத்தில்கூட ஜடமாகிபோகும்
இச்சின்னஞ்சிறிய சிசுக்கள்

தான் அனாதையாக்கப்பட்டோம்
என்பதையறியாமலே
ஆதரவற்ற நிலையில்
அனாதையில்லத்தில்
அல்லாடும் இத்தளிர்கள்
தான் யாரென அறிந்த பின்னே
துடியாய்த் துடிக்கும்
இந்த பிஞ்சு மனங்கள்

கலாச்சாரத்தின் குரல் வலையை
காலடியில்யிட்டு மிதித்து
நாகரீகத்தின் பிடியில்
சிக்கிச் சீரழியும்
நவநாகரீக கன்றுகளே!

தன்கற்பு எனும் மானத்தை
காத்துக் கொள்ளுங்களேன்
அனாதை என்ற ஒன்றை
இல்லாமல் ஆக்குங்களேன்!!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது