நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்தேக கேள்விகளின் பதில்கள். [பகுதி 1]

வாங்க வாங்க உக்காரவெல்லாம் நாற்காலிபோடலை அதனால நின்னுகிட்டே படிச்சிட்டுபோங்க [அச்சோ அச்சோ நாங்க ஏற்கனவே சேர்போட்டுஉக்காந்துகிட்டுதானே இங்கேயே வந்தோம் ஹா ஹா]

கிட்டதட்ட இந்த பதிவை 440 மேற்பட்டவர்கள் பார்த்தும்
நான் கேட்ட கேள்விகளுக்கு ஏனோ  யாரும் பதில்
சொல்ல முன்வரவில்லை[ஒரு சிலரைத்தவிர] அனைவருக்கும் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒன்று தடுக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை. இல்லை அப்படி கேட்கக்கூடாத கேள்வியா? என்றும் புரியவில்லை.

சரி சரி விசயத்துக்கு வா என முனங்குவது கேட்கிறது. என் பதில்கள் பிறருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனாலும் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டிய விசயத்தை சொல்லிவிடவேண்டும் சந்தர்பங்கள் கிடைக்கும்போது ஆகவே எனக்கு தெரிந்த நான் அறிந்த வகையில் சொல்கிறேன்.

எனது பதில் தமிழ்நாட்டுக் கலாசாரத்தை சார்ந்தது. ஏனெனில் நான் தமிழச்சி.இங்கு [நீரோடைக்கு]வந்துபோகும் அனைவரும் தமிழைச்சார்ந்தவர்களேயென நினைக்கிறேன்[ஹி ஹி தமிழை தமிழர்தான் படிப்பார். சில வெளிநாட்டவர் தமிழ்படிக்கும் ஆர்வளர்களும் உண்டுதான்] ஆக நாம் எப்படியுள்ளோம். எப்படியிருக்கிறோம் எப்படியிருக்கப்போகிறோம் அதுதானிங்கே. மேலைநாட்டில் இப்படி. கீளைநாட்டில் அப்படி அதெல்லாம் இங்கில்லை. தமிழ்நாட்டில் எப்படி?

இவைகள் நான் கண்டதும். கேட்டதும். பார்த்ததும்.
முதலில்:

நாடுகடந்த சுதந்திரம்.
மனிதப் பிறப்பே மனிதப் பிறப்பே
மகத்துவமானதாக-அதை
மறந்து திரிந்தான் மறந்து திரிந்தான்
சுதந்திரமாக!

சுதந்திரமென்ற தென்றல் ஆனது
சூராவளியாக!-அதைச்
சுற்றிக்கொண்டபல மனிதரையிங்கு
சூறையாடுதே வேங்கை புலியாக!

சுதந்திரமென்ற பூக்கள் ஆனது
பூகம்பமாக! -அதை
சூடிக்கொண்டபல மனிதரையிங்கு
சுருட்டி போட்டதே சுக்கு நூறாக!

நல்ல சுதந்திரம் நல்ல சுதந்திரம்
நாடு கடந்ததிங்கே! -அயல்ச்
நாட்டு சுதந்திரம் பட்டாப் போட்டதும்
நிலைகுலைந்ததிங்கே!
நல்லறங்களெல்லாம்
நிலைகுலைந்ததிங்கே!
1ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?

ஆண்பெண் சுதந்திரம். அது தற்போதைய காலத்தைப் பொறுத்தவரை சற்றல்ல மிதமாகவே மிதமிஞ்சியே இருக்கிறது. நல்ல கலாச்சாரங்கள் கடந்துபோய் மிகவும்
பின் தங்கியுள்ளதால் நாகரீகமென்ற நாளொருகூத்து சுதந்திரமென்ற பெயரில் சுற்றிவலைத்து சூறையாடுகிறது. மனிதமனதையும் உடலையும்.

தினம் தினம் மீடியாக்களிலும். செய்திநாளிதள்களிலும் அக்கம் பக்கமும். அப்பப்பா தாங்கமுடியலப்பா எந்தபக்கம் போனாலும் இதேதான் என ஒருநாளாவது தனக்குள் நீங்கள் சொல்லி வருதங்கொண்டது கிடையாது?. அப்படி வருத்தங்கொண்டிருந்தால் இதிலுள்ள வரிகள் புரியும்.

ஓகே விசயத்திற்கு வருவோம். சில சில துளிகள் மட்டுமிங்கே கோடிட்டுகாட்டியுள்ளேன். அவ்வளவுதான்

தனக்கு பிடித்த, தான்விரும்பிய,தன் இஷ்டத்திற்கு நடப்பதுதான் சுதந்திரம் என்றெண்ணிக்கொண்டு, தான்விரும்பும் துணையை தான்தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, ஆனால் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைபெற்றவர்களிடம் மறைத்துவிட்டு, காலை 10 மணிக்கு, திருமணம் என்றபோது 9.30 யாருக்கும் தெரியாமல் ஓடிப்போவதும் அதனால் பெற்றோர்கள் இறந்தாலும். மனமிழந்தாலும்  .கேட்டால் சுதந்திரம்
என் சுதந்திரத்துக்கு தடை. அதனால் என்னை பெற்றவர்களுக்கு தண்டனை. எனசர்வசாதாரணமாக சொல்லும் பிள்ளைகள்.

தன்பிள்ளைகளை சுதந்திரமாய் திரியட்டுமென சினேகம் என்றஒரு தூய்மையானவற்றின் பெயரில், ஆணோடு பெண்ணையும், பெண்ணோடு ஆணையும், சுதந்திரமாய் வலம்வரவைத்துவிட்டு பின்பு அதனால் அடையும் மனவருத்தங்களும், மனச்சிதைவுகளும். ஏன்பலநேரம் மானத்தையே இழக்கும் தருவாயையும் உருவாக்கி உருகுலைக்க வைக்கிறது இன்றைய சுதந்திரம்.
போய் கேட்டுப்பாருங்கள் மனசாட்சியுள்ள டாக்டர்களிடமும். வீட்டு வைத்தியர்களிடமும்.திருமணத்துக்குமுன்னே கருகலைப்புகாக வந்து நிற்கும் சுதந்திரத்தை.

இது ஒரு மனிதமுள்ள மனிதரின் [காஞ்சி முரளி] பார்வையில்
இது என்னுடைய ஒரு பதிவில் கருத்துக்களாக போட்டது

//நீங்கள் துபையில் வசிக்கிறீர்கள்... இங்கு வந்து பாருங்கள்.... touristஆக அல்ல... ஓர் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ வசித்து பார்த்தால்... இங்கு நடக்கும் அலங்கோலங்களை காணலாம்... 'பெண் விடுதலை' என்ற பெயரில் நடக்கும் அநியாங்களை பிரதான சாலைகளிலும் - பீச்சிலும் - தியட்டர்களிலும் குறிப்பாக ஸ்டார் ஹோடேல்களிலும் காணலாம்... இது தமிழ்நாடா என்று வியந்து போவீர்கள்...
மனிதன், .............விட கேவலமாய் சாலைகளில்....

என் கவிதை வரிகளில் சொல்லவேண்டுமென்றால்...
"பெண் விடுதலை என்ற பெயரில்...
அவயங்களைக் காட்டி...
அடுத்தோரை சுண்டியிழுக்கும்...
சில வக்கிரங்களின் அணிவகுப்பு...

சாலைகளில்...
பட்டப்பகலில்...
மாநகரத்தின்..
மையச் சாலைகளில்...
முகத்தில்... முக்காடிட்டபடி...
ஆணுடலோடு சங்கமித்து செல்லும்
பெண்ணினத்தைக் கண்டும்....

காலையிலேயே....
கடற்கரையில்...
சுடுமணலில்...
ஈருயிர் ஓருடலாய்...
பின்னிப் பிணைந்திருக்கும்
பெண்ணினத்தைக் கண்டும்...."

கல்வியில் சிறந்த பெண்கள்....
கலாச்சாரச் சீரழிவை
ஏற்படுத்தும் வகையில்...
"டேட்டிங்"கில் ஈடுபடும்
இன்றைய பெண்ணினத்தைக் கண்டும்.... //

மிக ஆழமாக இதைவிடசொல்லமுடியாது சுதந்திரமென்றபெயரில் சுற்றித்திரியும் அவலங்களை!

இதைவிடக்கொடுமை. மானத்தைகாற்றில்விட்டு திறந்துதிரியும் கூட்டம் சில, மானத்தை மூடிமறைக்கும் சிலரை வசைபாடுவதுதான். பிறரை சுண்டியிழுக்கும் அங்க அவங்களை மூடிச்செல்வதால் அடுதவர்களுக்கென்ன பாதிப்பு?. பிறரையும் பாதித்து தன்னையும் பாதிக்கும் ஒரு பாதகச்செயலிலிருந்த தன்னை காத்துக்கொள்வது சுதந்திரத் தடையா?ம். சுதந்திரத்திற்குச்சுமையாய் இருக்கிறதென சுமப்பவர்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை காணும் குற்றக்கண்கள் தன் கற்பனைக்குதிரைக்கு கடிவாளத்தை திறந்து ஓடவிட்டு தனக்கு வருத்தமளிப்பதுபோல் நினைத்துக்கொண்டு, பிறரை வருத்தப்படுதுவதுதான். வேடிக்கை..

இங்கே கொஞ்சம்தான் சொல்லியிருக்கேன் மற்றவைகளை சொல்லிதான் தாங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றில்லை. தெரிந்தும் தெரியாமலிருப்போருக்கு நான் பொருப்பல்ல.
இவைகள் மேலை நாடுகளில் நடந்தால் இந்தக் கேள்விகளுக்கே இடமில்லை, ஏனெனில் அவர்கள் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை வெற்றுப்பார்வையில் பார்ப்பவர்களே அன்றி அதில் வாழ்பவர்களில்லை,வாழ்ந்தவர்களில்லை. [ஆனாலும் உலக நாடுகளில் நம்நாட்டுக்கென்ற ஒரு தனிமதிப்பு வேறுநாட்டுகில்லையென்பதே உண்மை அந்த மதிப்பே பலங்கால நல்லொழுக்கம்தான்] ஆனால் எந்நாடு சென்றபோதும் தமிழ்நாட்டுகென்ற மரியாதையையும். கலாச்சாரத்தையும்.தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காமல் வாழ்பவந்தானே தமிழன். சென்றிருக்கும் அந்நாட்டு [அ]நாகரீகத்தை கற்றுக்கொள்ளும் மனிதன் தன்நாட்டு ஒழுக்கத்தையும். கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடுவது ஏன்? [ஓ கால சூழலுக்கேற்ப எதையும் மாற்றும் திறனோ மாற்றுவதைதான் மாற்றலாம் தன்மானத்தை?]ஏனெனில் இதில் பல கட்டுபாடுகள். இப்படிதான் வாழவேண்டுமென்ற கோட்பாடுகள் இவைகளெல்லாம் அவனுக்கு சுதந்திரத் தடையாக இருக்கிறது.

பல்லாண்டுகால பாரம்பரியங்களையும். கட்டுப்பாடுகளையும். இன்றும் பெருமையாய் பேசப்படுகிறதே ஏன்? அதில் நன்மையுண்டு அதனால் தீமைகளின்பக்கம் போகாமலிருக்க தடையுண்டு, ஆனால். அதை விளங்கியும்கூட விளங்காமலிருக்கும் மனிதனைக்கண்டுதான் வியப்பாகவும் உண்டு. வருத்தமாகவும் உண்டு.

திருமணத்துக்கு முன் கருகலைக்கும் கூட்டமாக!
தான்தோன்றிதனத்தால் தன்னையிழக்கும் இனங்களாக!
அங்கங்களை அடுதவர்களின் பார்வைகளுக்கு விருந்துபடைக்கும் படையலாக!
அயல்வீட்டுகாரரைக்கூட அடுத்துக்கொள்ளாத அன்னியனாக!
சொகுசு விடுதிகளில் சொக்கியாடி கொக்கிபோடும் கேடுகளாக!
எழுத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறும் எந்திரங்களாக!
முதியோர் இல்லங்களை நிரப்பும் மனசாட்சியற்ற மனங்களாக!
அனாதையில்லங்களை அகலப்படுத்தும் அவலங்களாக!
நான்கு சுவற்றுக்குள் நடக்கும் புனிதங்களை
நடுரோட்டில் அரங்கேற்றும் அசிங்கங்களாக!

இப்படி, இன்னும் இன்னும். ஆண்பெண் சுதந்திரம் மிக மிக பலவீனமாகி பாதிப்பை உண்டாக்கும் கேடாகத்தானிருக்கிறது.
சிலபல விதிவிலக்குகளைத்தவிர.

சரி எப்படியிருக்க வேண்டும்.? [இத நீ என்னத எங்களுக்குச் சொல்றது எங்களுக்கு தெரியும் என்பவர்களுக்கல்ல இது]

ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம்
முறையான ஒழுக்கம்
இதனுள் அத்தனையும் அடங்கும்.

காணும்இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமோ-இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும்
நான்குகால் மிருகமோ அல்ல மனிதன்,

மனிதன் மிகுந்த மதிப்பு மிக்கவன்
தன்னுடைய சுய ஒழுக்கம். தனக்கென்று ஒருகம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை. தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன என்பதை உணர்ந்தால் நிச்சயம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகிய செயல்களின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு, சுதந்திரமென்றால் என்ன? அது நம்மை எவ்வாறு சுற்றியிருக்கவேண்டும். அல்லது நாம் எவ்வாறு அதனைச் சுற்றிக்கொள்ளவேண்டும். என்பதையறிந்து சுதந்திரமென்னும் சுத்தமான சுகந்தத்திற்குள் சுகமாய் சுற்றித்திரிவதோடு,தன்னை சுற்றியுள்ளவர்களையும்
தன் சுழல்சியில் சேர்த்துக்கொள்வான். சுதந்திர சுகமாய் வாழ்வான்..

அப்பாடா ஒருவழியா முடிச்சிட்டேன் இந்த ஒருகேள்விக்கே முதுகும். விரல்களும் கண்களும். ஒரு வழியா வலியாயிடுத்துபா. இன்றைக்கு இதுபோதும் மீதம் அடுத்தடுத்து. இடையிடையே பிரேஏஏஏஏஏஏஎக்கும் விடுவோம். உங்க அளவுக்கு என்னால் யோசிக்க முடியாவிட்டாலும் ஏதோ என்னளவுக்கு அதாவது என் மூளைக்குள் சென்று இதயத்தை அடைந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். இதில் பிழைகளிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது