நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவிதையே! உன்னை காதலித்ததால் எனக்குமுதலிடம்..
முக நூலில் கவிதை சங்கமம் நடத்திய கவிதைப்போட்டியில்
எனது கவிதையான ”வாய்ப்பும் வியப்பும்” கவிதை
முதலிடத்தை பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காற்றாய்...மலராய்...
நீராய்... நெருப்பாய்...
என்னுள் குடிக்கொண்டு...
என்னை
என்னாலேயே தேடவைக்கும்....!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

அழுகையாய்... சிரிப்பாய்...
யதார்த்தமாய்... இயந்திரமாய்...
இப்படி
எல்லா நிலையிலும்
எனை வடிக்கும்..!
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

உலக உருண்டைக்குள்
ஓடிவிளையாடி...
ஓயாது விடைதேடி
ஒளிந்து மறந்து வியப்பூட்டும்...
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்...

கனவில் கருகொண்டு...
நினைவில் நிலைகொண்டு....
நெஞ்சத்தில்
நீங்காயிடங்கொண்டு... எனை
நிலைகுலையச் செய்யும்
கவிதையே.... உன்னைக்
காதலிக்கிறேன்...!

காணும் காட்சியாவும்
கண்ணுக்குள் குடிகொள்ள
நிகழும் நிகழ்ச்சியாவும்
நெஞ்சிக்குள் புதைந்துகொள்ள
புலனுக்கு புலப்படா
புதிர்களையும்
தோண்டிப் பார்க்கவைக்கும்
கவிதையே...உன்னைக்
காதலிக்கிறேன்

கவிதை சங்கமத்தில்-எனக்கொரு
வாய்ப்பாய் கவியெழுத வைத்து
விருதாய் முதலிடத்தை
வியக்கும்படி தந்து
விழிநீர் வழிய வழிய
வசந்தத்தைத் தேடித்தந்த
கவிதையே.. உன்னைக்
காதலிக்கிறேன்..

இறைவன் எனக்களித்த
இந்த இன்றியமையா
வாய்ப்புதன்னை
போற்றி காப்பதுடன்
இதில்வரும்
புகழில் மயங்கிடாமல்
இருதயத்தை பாதுகாத்துக்கொண்டே
கவிதையே!... உன்னைக்
காதலிப்பேன்......

டிஸ்கி// இரண்டாம் இடம்.
திரு இராமன் அப்துல்லா அவர்களுக்கு.
மூன்றாம் இடம்.
திரு கோயம்புத்தூர் பால சுப்பிரமணியன் அவர்களுக்கு.
இருவருக்கும் மனமார்ந்த பராட்டுக்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது