நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

”ப்பூ”
நிலவுமில்லாமல் ஒளியுமில்லாமல்
இருள் இரவை கவ்விக்கொண்டிருந்த நேரம்
நடுநிசியில் நாயொன்று ஊலையிட
நெடுநெடுயென வளர்ந்திருந்த
தென்னை கீற்றுக்கிடையிலிருந்த
தேவாங்குகள் திருத்திருவென விழித்திருக்க

ஊரடங்கிடந்த வேளையில்
உரத்த குரலெழுப்பி
உளறத் தொடங்கியபடியே
ஊரை வலம் வந்தது ஒரு உருவம்

கேட்பாரற்று பார்ப்பாற்று கிடக்கிறேன்
கேடுகெட்ட இம்மனிதர்களுக்கிடையில்
நாதியற்று நான் தங்கிட வீடற்று
நடுவீதிகளில்  நிற்க்கிறேன்

கந்தல் துணி அணிந்ததினால்
காரித் துப்பப்படுகிறேன்
நாலுகாசு இல்லையென்று
நாயைபோல நடத்தப்படுகிறேன்.

வேடிக்கையான உலகினிலே-பல
வேடிக்கைகள் காண்கிறேன்
வேசம் கண்டும் மோசம் கண்டும்
வெடுக்குச் சிரிப்பு சிரிக்கிறேன்

வேசிகளும் தாசிகளும்
வீட்டுத் தலைவியாக
வேசம் கட்டி நடிக்கிறார்
ஊரையடிச்சி உலையில்போட்டு
வட்டியோடும் குட்டியோடும்
வீட்டுதலைவனென்று  நடக்கிறார்

நாலுகாசு கையிலிருந்தா
நாயைக்கூட மதிகிறார்
நாறிப்போன மனிதரெனத்தெரிந்தும்
நட்புகொண்டு  அலைகிறார்

உள்ளே அழுக்கு வெளியே மினுக்கி
உலகிற்காக வாழ்கிறார்
நாளும் வேசம் பொழுதும் மோசம்
நாணிக்கோனி நடிக்கிறார்

வீதியிலிருக்கும் என்னைப்பார்த்து
விதியே வேதனையே என்கிறார்
வீட்டுக்குள்ளே இருந்தபோதும்
வீட்டுக்கு விலக்காய் கிடக்கிறார்

புத்தி சரி யில்லையென்று
என்னைக் கண்டு
பயந்து விலகி போகிறார்

பாவம் புரியவில்லை
புத்தியே அவருக்கில்லையென்பதை
புரிந்துகொள்ள மறுகிறார்
இந்த பூமி உருண்டை என்பதை மறக்கிறார்

“ப்பூ”

இந்த வாழ்க்கை
போலியென்பதையும் உணராது தவிக்கிறார்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது