நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முடியாததை முடிக்கும்!


பட்டாம்பூச்சியாகி
பொன்வானில் பறந்ததும்

காற்றோடு கைகோத்து
கொஞ்சி குழாவியதும்

நிலவோடு நிலவாகி
நீந்தி நீந்தி நடந்ததும்

நட்சத்திரத்தை கோத்தெடுத்து
நகைசெய்துபோட்டதும்

மேகத்தின் பஞ்செடுத்து
மெத்தையாக்கிக்கொண்டதும்

வானவில்லை வரச்சொல்லி
வண்ணங்களை வாங்கியதும்

வண்ணமிகு மலர்களிடம்
வம்புபண்ணி விளையாடியதும்

கடலலைகள் துள்ளிவரக்
கால்களோடு கட்டிப்போட்டதும்

தண்ணீரை தரையில்கொட்டி
கிள்ளிவிட்டு ரசித்ததும்

அந்தரத்தில் ஊஞ்சல்கட்டி
ஆடி ஆடிப்பார்த்ததும்

இன்னும்

இயலாத அத்தனையும்
இயலவைத்துக்காட்டிடும்

முடியாதவற்றையும்
முடியவைத்துக்காட்டிடும்

பொல்லாத கற்பனை
பொய்யுரைக்கும் கற்பனை....அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது