நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொய்யாகிப்போன..


இரவு சத்தியம்
இனிதாய் முடிய
காலைப் பொழுது
கனிவாய் விடிய

இருந்த கஞ்சியை
இளம்
புன்னகையோடு தந்து

வாசல்வரை வந்து
வழியனுப்பி
வைத்த மனைவியை

காணாது கண்டு
கதிரறுக்க
களத்துமேடு போய்

வயல் வெளியில்
வரப்பு
வேலை முடித்து

கால் கடுக்க
மலையேறி
கல்லுடைத்து கொடுத்து

மாலைச் சூரியன்
மங்கும்
வேளையில்

விழியசையாது
வாசல் பார்த்தபடி
வஞ்சியவள் காத்திருக்க

கை நிறைந்த
கூலி
கண் குளிரசெய்ய

இரவு செய்த
சத்தியம்
இன்னல்
செய்தபோதும்

மதியிருந்து
மனிதன்
மதிகெட்டுப் போனான்

மனைவியென்ற
ஒன்றிருந்தும்
மக்கட்ச்செல்வம்
கூடயிருந்தும்

கணவனென்ற
கடமையை மறந்து
தந்தையென்ற
பொறுப்பை துறந்து

மதுபோதை மயக்கம்
மற்றவையை
மறக்கடிக்க

மானம் போனாலென்ன
மனைவி மக்கள்
எப்படியானாலென்ன

மானங்கெடுத்தும்
உடல்கெடுக்கும் மதுவை
மனங்கேட்டுத் துடிக்க

மனஞ்சொன்ன
சொல்லை
மறுக்காமல் தரவே

மதுக்கடையை
நோக்கி
மார்த்தட்டிச் சென்றான்..



[குறிப்பு. இந்த கவிதை சர்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுமலரில் வெளியாகியுள்ள என் கவிதை.
சீமானைப்பற்றிய ஒரு பதிவு விரைவில்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது