நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வசியமருந்து!

 
வக வகயா கறியும் வச்சி
வாசமான குழம்பு வச்சி
வீட்டுகாரர வளச்சிபோட்டு ராசாத்தி
உன்
வலையல் கைத்திறன காட்டிவிடு ராசாத்தி!

அவிச்ச முட்டை பொரிச்சி வச்சி
அவியல்கறி கூட வச்சி
அக்கரையா கொடுத்துவிட்டு ராசாத்தி
 வீட்டு
அதிகாரத்தில் பங்குபோடு ராசாத்தி!

நெய்மீனு குழம்புவச்சி
நெத்திலிமீனு வறுத்துவச்சி
நித்தம் நித்தம் ஆக்கிப்போட்டு ராசாத்தி
நீ
நெனச்ச காரியத்த முடிச்சிவிடு ராசாத்தி!

பச்ச காய்கறியில் கூட்டு வச்சி
பக்குவமா சமச்சி வச்சி
பண்போடு பரிமாறிவிட்டு ராசாத்தி-
 நல்ல
பேர வாங்கி குவிச்சுவிடு ராசாத்தி!

வெள் ளாட்டுக்கறி எலும்பு வாங்கி
வெட வெடன்னு சூப்பு வச்சி
வாய்க்கு ருசியா கொடுத்துவிட்டு ராசாத்தி
வீட்டுச்சாவி கையில் கேளு ராசாத்தி!

புது புதுசா பல காரம் செஞ்சி
புதுவிதமா அலங்கரிச்சி
பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு ராசாத்தி
பாசத்திலும் பங்குபோடு ராசாத்தி!!

அஞ்சுவக காயெடுத்து
அலுக்காம வேலபாத்து
அருமையாக சமச்சிவைய்யி ராசாத்தி
அது ஆரோக்கியம் தந்திடுமே ராசாத்தி!

பசியோடு புசிக்கும்போது
பாவக்காயும் ருசிக்குமடி
பக்குவமா சமைச்சிபோட்டா
பலவயிறு குளிருமடி ராசாத்தி
பல பாராட்டையும் வாங்கிக்கலாம் ராசாத்தி! 

வசியம் செய்ய பலவகையில்
வகைவகையா இருக்கையிலே
வசிய மருந்து எதுக்கடி ராசாத்தி!
உன்குடும்பதை  உ[ன்கையால்]ள்ளத்தால்]
வலைச்சிபோடடி ராசாத்தி! 


டிஸ்கி:// ஏண்டிமா மல்லி இதெல்லாம் நடக்குற காரியமாங்குறீங்களா? 
அதுக்குத்தேன் புகைப்படத்த மாத்திபோட்டிருக்கோமுல்ல. அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஒ.. 
..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது