நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிரின் வேர்கள்.

பதுமையே பதுமையே-உன்

பட்டுமேனி தொட்டிடவா
பஞ்சுக் கன்னம் தொட்டிடவா
பிஞ்சு விரல் தொட்டுமீட்டி
பிள்ளையுன்னை கொஞ்சிடவா

பூப்போன்று முடிவைத்துக்கொண்டு
பொசுபொசுவென கிடக்கின்றாய்
காதுமடல் நான்தொட்டால்
கைகால்கள் ஆட்டுகின்றாய்

நெற்றிரோமம் நீக்கிவிட்டால்
நெளிந்து வளைந்து கூசுகின்றாய்
இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
இமைக்கவிடாது செய்கின்றாய்

உச்சிமுகர்ந்து பார்க்கையிலே-என்
உச்சிகுளிர வைக்கின்றாய்-என்
உள்ளங்கையில் ஏந்துகையில்-இந்த
உலகே நீயென உணர்த்துகின்றாய்

கருவறையில் இருந்தவரை
காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
கண்மணியே என் காலம்வரை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது