நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அதிர்ச்சியூட்டிய சம்பவம்.போனில் பேசப்பேச திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும், இருந்தது. அன்றிரவே அப்பெண்ணிடம் மெதுவாக விசாரிக்க. அவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள். அவனுடைய போன்நம்பரையும் தந்துவிட்டாள். அவன் விசிட்டிங்கில் இங்கு வந்திருந்தபோது, ஒரு புரோக்கிராமில் சந்திப்பு ஏற்பட அடுத்தடுத்து ஓரிருமுறை சந்தித்ததில் பலக்கம் ஏற்பட, அதுவே தொடர்கதையாக, இவளின் வசதிகளை அறிந்துகொண்டு ஊருக்குபோன அவன் அங்கிருந்துகொண்டு மிஸ்கால் அடிப்பதும், இங்கிருந்து இவள்போன் பேசுவதும் அதுவே தொடர்கதையாகிவிட்டது, முடிவில் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு அவளை வீட்டைவிட்டு ஓடிவரசெய்வதே அவனின் திட்டம். அனைத்தும் வெளிவந்துவிட உடனே ஊரிலிருப்பவர்களிடம் போன்செய்து இப்படி இப்படியென விபரம் சொல்லி விசாரிக்கவேண்டிய வகையில் விசாரியுங்கள் என சொல்லபட்டதாம். 

 அங்கும் துரித நடவடிக்கை எடுத்ததில், அவனிடமிருந்து வந்த பதில்அதர்ச்சியை தந்ததாம் அதாவது இது எந்த பெண் என்று, அப்படியென்றால் இன்னும் எத்தனைபெண்ணோடு  உனக்கு தொடர்பு என விசாரிக்கப்பட  இவளோடு சேர்த்து 3 என அவன் சொல்ல.தம்பிபுள்ளையாண்டான் வசமாக மாட்டிக்கொண்டான். எதற்காக இப்படி செய்தாய் என கேட்டதற்க்கு எல்லாம் காசிற்காகதான் அதனால்தான் வசதியான வீட்டு பசங்களையாக தேர்வுசெய்தேன் என சொல்லியிருக்கான்.மற்ற பெண்களின் பெற்றோருக்கும் போன்கள் மூலம் தகவல்சொல்லப்பட, அவர்களுக்கு கிலிபிடித்து உடனே அங்குவர, சட்டப்படி அவனை என்ன செய்யனுமோ அதை செய்யச்சொன்னதாக சொன்னார்கள்.அதை இப்பெண்ணிடம் சொன்னபோது அவள் நம்பவில்லையாம்,உடனே அவனிடம் சொல்லி அவனையே போன் செய்யசொன்னபோதுதான் நம்பியிருக்காள்.இவைகளைதான் அவர்கள் என்னிடம் போனில் சொல்ல நான் திகைத்தது.

சொன்னதோடு மலிக்கா நீங்களும் அவளிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்றார்கள் நானும் அவளிடம் பேசினேன்.குட்டிமா வாழ்க்கையென்பது ஒருமுறைதான் அதை கண்ணியமான முறையில் வாழவேண்டும்,அது நாம் தேர்ந்தெடுக்கும் முடிவில்தான் நம்முடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என தீர்மானிக்கப்படும், அழித்து அழித்து எழுத இது காகிதமல்ல வாழ்க்கை. மனிதராய் பிறந்த அனைவரும் தவறுகள் செய்யாமலில்லை,தவறுகள் செய்வது மனிதவாழ்வில் சகஜம், ஆனால் அது தவறு என உணரும்போதும் உணர்த்தப்படும்போதும் அதன் பக்கம் செல்லாதிருப்பதே நமக்கு நலம்.

நீ படிக்கும் புத்திசாலிப்பெண், சிந்தித்து யோசித்துபார் நான் சொல்வது எல்லாமே உனக்கு புரியும் என்றேன்.தெரியாமல் செய்துவிட்டேன் ஆண்டி இனி இதுபோன்று நடக்கமாட்டேன். படிப்பில் கவனம் செலுத்துவேன் பிராமிஸ் ஆண்டி என்ற அந்தகுரலில் குழந்தையின் தேம்பல் கேட்கவே எனக்கும் அழுகை வந்துவிட்டது. பாவம் நாம் செய்தது சரியா? நாம் இந்த சின்னபெண்ணுக்கு தொல்லைகள் கொடுத்துவிட்டோமா என்று நினைத்தபோது, உடனே உள்ளே ஒருகுரல் நீ சொல்லவில்லையென்றால்தான் அக்குழந்தை கஷ்டத்தில் மாட்டியிருக்கும் என மனதுக்குள் ஒலிக்கவே ”சரிமா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி, இனி இறைவன் நல்லதையே நாடுவான், நல்லவழியைக்காட்டுவான் கவலைபடாமலிரு” என்று சொல்லியபோது சரி ஆண்டி அம்மாவிடம் போனைதரேன் என கொடுத்துவிட்டாள்.

அவர்கள் போனை வாங்கி மலிக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நீங்கள் மட்டும் இதை மறைத்திருந்தால் அல்லது நமக்கென்ன என்றிருந்தால் எங்களின் குழந்தைகளின் நிலை என்னவாகியிருக்கும்,
உங்களை நாங்கள் எந்நாளும் மறக்கவேமாட்டோம்.என உடைந்து அழுதார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.இனி சற்று கூடுதல் கவனமெடுத்து கவனித்துக்கொள்ளுங்கள்.என அவர்களுக்கு வேண்டிய சில அறிவுரைகளை சொல்லிவிட்டு அல்ஹம்துல்லில்லாஹ் என இரண்டு ரக்காயத் தொழுதுவிட்டு துஆக்கேட்டேன்.

பெற்றோர்களே! அறிவுரை சொல்லுமளவிற்க்கு எனக்கு அருகதையிருக்கா எனத் தெரியாது. ஆனபோதும் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டியதை சொல்லித்தான் ஆகனும்.
நீங்கள் பெற்றடுத்த பிள்ளைகள்தான் உங்களை மீறிவிடாது என்ற எண்ணம் இருக்கலாம் அதை மிகைப்படுத்திவிடாதீர்கள் அதுவே அவர்களுக்கு சிலநேரம் வரம்பு மீறவும், அதன் பாதிப்பால் நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை பாழ்படுத்திவிட்டோமென்ற குற்றவுணர்வையும் ஏற்பட வைத்துவிடாதீர்கள்.

பொது இடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்லும்போது சற்றல்ல மிகவும் கவனமாக இருங்கள்.அலைபாயும் வயதில் அணையை மீறிடாதவறு அதேசமயம் நம்முடைய செயல் அவர்களை எவ்விததிலும் பாதித்திடாதவாறு அவர்களை கண்கானியுங்கள்.அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையிலில்லை நம்கையில்தான். அவர்களாக முடிவெடுக்கும் காலம்வரும்போது, அது சரியா? தவறா? எனப்பாருங்கள் நல்லதென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். கெட்டதென்றால் எடுத்துச்சொல்லுங்கள். பெற்றோராகிய நம்மீது பொறுப்புகள் அதிகமிருக்கு. எனக்கும் திருமணம் ஆகிவிட்டது நானும் குழந்தை பெற்றுவிட்டேன் என்பதற்காக மட்டுமல்ல. இது ஒரு அற்புத வாழ்க்கை.இதை நாமும் வாழ்ந்து அதை நம் சந்ததிகளையும் சிறப்பாக வாழவைத்துப் பார்ப்பதே நம்முடைய மிகப்பெரிய கடமை. அதையுணர்ந்து செயல்பட்டால் நம்குழந்தைகள் மிகசிறப்பாக வாழ்வதோடு அவர்களுடைய சந்ததிகளையும் சிறப்பானதாக உருவாக்குவார்கள் என்பது என் கருத்து.

இதில் சில சம்பவங்களை பலர் நலம்கருதி எழுதவில்லை. நடந்தவைகள் நடந்தைகளாக தொலையட்டும் இனி நடப்பவைகள் நல்லவைகளாக நானிலம் போற்றுபவைகளாக நடக்கட்டும். ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது