நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விதைத்தாலும் முளைக்காது! முளைத்தாலும் நிலைக்காது..!


விஷவிதைகளை விதைப்பதாய் எண்ணி

வில்லங்கத்தை காசாக்கிப்பார்க்க
விஷப்பரீட்சைகளை நடத்தும் 
விஸ்வரூப வேடதாரிகளே!

உங்கள் வெறியடங்க விளையாடுங்கள் 
வேடிக்கையாய் 
விளையாட்டுக் காட்டுங்கள் - அனைத்தும், உங்கள் 
வேஷங்கள் கலையும்வரைதான்..!

வீணர்கள் விதைக்கும் விதைகள்யாவும்
விதைத்தாலும் முளைக்காது,
முளைத்தாலும் நிலைக்காது
வெற்று விதைகள் மண்ணையே முட்டாதபோது
வேரூன்றி நிற்பதெங்கே..!

உன்னைபோல் ஒருவன், உலகநாயகனாகி,
ஹேராம் பாடிக்கொண்டே, குருதிப்புனலெடுத்து
விஸ்வரூப தோட்டாக்கள்கொண்டு 
துளைத்தெடுக்க நினைத்தாலும்
தூளாகிடுமா?தூயவனின் தூயமார்க்கம்!

உலக மனிதர்களை நேர்வழிப்படுத்த வந்த மார்க்கமிது
பிறர்உணர்வுகளை மதிக்காது
நெறிதவறி வாழும் உம்மைப் போன்றோரையும்
மனமுவந்து மன்னிதருளும் நேர்மை மார்க்கமிது!

உலகின் ஒட்டுமொத்த ஆன்மாக்களும் ஒன்று திரண்டு வரும் 
இஸ்லாமிய மார்க்கத்தையா இழிவுபடுத்த எண்ணுகிறீர்..?
ஓடி வருகிறார்கள் - தினம் தினம் 
இக்லாஸெனும் தூய்மையை நாடி வருகிறார்கள்!

உங்களைப்போன்றோர்
எதிர்க்க எதிர்க்கத்தான்
ஏகனின் வழியில்வர ஏகமனதோடு
ஆவல் கொள்கிறார்கள்!

கேளிக்கை கொண்டாட்டதினுள்
வேடிக்கையாய்
வினைகளை புகுத்துவது
கோடிகள் குவிக்கவா?

நீங்கள் வெட்டவெட்டத்தான் இன்னும்
வேக வேகமாக வளர்கிறது இஸ்லாம்
நிறுத்தாமல் வெட்டினாலும்
நிமிர்ந்து நின்றே வளரும்

விதவித கோணங்களில் வௌ;வேறு ரூபங்களால்
வேரறுக்க வந்தாலும் -வீழ்வது என்னவோ
உங்களதும் உங்களைப் போன்றோரின்
விஷரூபங்களாகத்தானிருக்கும்..குவைத்தில் வெளியாகும் ”வசந்தம்” இம்மாத இதழில் எனது கவிதை..
 குவைத் வசந்தம் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது