நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்

மரகத பெண்பூவே!
மஞ்சம் தந்த மாமயிலே
தாய் மடித்தேடி வந்த
மஞ்சள் நிலவே
தாய் தந்தையின்
தாரகை மலரே

தேகங்கள்
மையம் கொண்டிட
தேவதையாய் வந்தவளே!
தேன்சிந்தி நின்றவளே!

நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
எங்கள் காதினில் வந்து
அவை ஒலித்ததடி

நீ
வளர்ந்த ஒவ்வொரு நாளும்
வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி
எங்கள்
வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி

வண்ணமயிலே
நீ வாழ்ந்திடு
பல ஆண்டுகாலம்
உன் வாழ்க்கை முழுதும்
சிறந்து விளங்கட்டும்
ஆனந்த விழாக்கோலம்

அன்பு மகளே!
அடுத்தவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எங்கள்
ஆருயிர் நெஞ்சம்

அன்போடு நீ,,
கிள்ளிக்கொடுத்தால் போதும்
அதுபோதும்
எங்களுக்கு எப்போதும்

இதயங்கள் இணைந்ததால்
இனியசாரல் அடிக்குதடி
உன்னால் -எங்கள்
இதயக்கூட்டுக்குள்
எண்ணங்களெல்லாம்
இனிக்குதடி.........

டிஸ்கி// இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது