நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதியதை தா!


புத்தம் புதிதாய் பூத்திருக்கும் புத்தாண்டே
உன்னை உலகமக்களில் ஒருத்தியாக
வரவேற்க வந்துள்ளேன்
அப்படியே! இரண்டாயிரத்து பத்து
ஆண்டுகள் செய்தவைகளத்தையும்
அறிவுதெரி[ளி]ந்த நாள்முதலாய்
பார்த்திருந்து கேட்டிருந்ததை
நினைவூட்டவும் நினைக்கிறேன்

கடல் காவுகேட்டதால்
சுனாமி என்ற பெயரில்
மனிதபொட்டலங்கள் மண்ணுக்குள்
கயவர்களின் கட்டவிழ்ப்பால்
கற்புகள் சூறையாடுதல்
பூவுக்குள் பூகம்பம்
சூராவளியாகும் சூன்யம்
அழகிய தளிர்களை
அரக்கர்களே மேயும் அவலங்கள்

மாலேகன் குண்டு வெடிப்பு
மும்பை குண்டுவெடிப்பு
கோத்ரா ரயில் எரிப்பு
குஜராத் இனப்படுகொலைகள்
கொழும்பில் கொடுமைக்கள்
இயற்கையின் சீற்றங்களென
எண்ணிலடங்கா துயரச் சுவடுகள்

அறிவிழந்து ஆடைகுறைந்து
தன்னையிழந்து
தரங்கெட்டுப்போகும்
மனிதர்கள் ஒருபுறம்
உண்ண உணவில்லமல்
உடுத்த உடையில்லாமல்
தவிக்கும் மக்கள் ஒருபுறம்
அத்தனையும் ஒட்டுமொத்தமாய் சுருட்டி
உலையில் போடும் கூட்டம் மறுபுறம்

இன்னும் உலகில்
எத்தனை எத்தனையோ
மனம் தாங்கமுடியாத மரணங்கள்
இப்படி ஒவ்வொரு வகையிலும்
கூட்டம் கூட்டமாய்
கொல்லை போகிறது மனித இனம்
இன்னும் எவ்வளவோ
சொல்லிக்கொண்டு போகலாம்

உலகில் நடக்கும் ஒட்டுமொத்த
வருத்ததினையும் தெரிவித்து விட்டேன்- இனி
வரப்போகும் காலங்களிலாவது
உலகம் ஒற்றுமையாகயும் அமைதியாகவும்
உலகமக்கள் நலமாகவும் வளமாகவும்
வாழ வழிவகுத்து கொடுக்க வேண்டுகிறேன்

அகிலத்தை ஆளும் இறைவனால்
சகலத்தையும் சரிசெய்யமுடியுமென்ற
நம்பிக்கையோடு
அனைவரையும் அன்போடும் மகிழ்வோடும்
அளவிள்ளா சிறப்போடும் வாழவைக்க
எல்லம் வல்ல இறைவனிடம்
அனைவரும் வேண்டுவோமாக....

தமிழ்குடும்பத்தில் நான் 24 -12 -2009 அன்று இணைந்தேன்
இணைந்த அடுத்த வராம் 2010. அன்று  தமிழ்குடும்பத்திற்காக
நான் எழுதியகவிதையிது.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது