நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உறவில்லா ஒரு உறவு!


உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள்கொடி வழி வந்தல்ல
நட்புக் கிளையில் வளர்ந்தது
உறவில்லாமல் உருவான
ஒரு உன்னத உறவு

அக்கொடி வெட்டியபின்பே
வளர்கிறது அளவுகடந்த பாசம்
இக்கொடி வளர்வதிலேதான்
உயிர் உருகித்தொடர்கிறது  நேசம் 

பள்ளியில் உருவானாலும்
பாதையில் உருவானாலும்
தொண்டு தொட்டு நீளவே
நீயும் நானும் விரும்புகிறோம்

இடையில் இடைவெளியோ
எப்போதாவது இடைவெளியோ
அதை விரும்புவதில்லை
ஒருபோதும் நீயும் நானும்!

காற்றடிக்கும் திசைகளில்
மண்மணக்கபெய்யும் மழைகளில்
உனக்கும் எனக்குமான நட்பினை
ஒரு நொடியாவது நினைவில்
வந்துபோகமலிருப்பதில்லை!

காலசூழலில் காணமல்போகும் சில 
கனவுகளைப்போல்
கண்காணா தூரங்களில்
மறைந்துவாழ்கிறோம் அதுதானே தவிர 
மறந்து வாழ்வதில்லை!

வாழை !
வாழையடி வாழையாக
வாழாமல் வீழ்வதில்லை..
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது