நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுதந்திரக் கிளிகள்.

முக்காட்டிட்டே
முடக்கப்படுகிறார்களென
முணுமுணுக்கும் சிலபேர்கள்
சிறகொடித்து கூண்டுகிளியாய்
சிறையில் வைத்துள்ளதாய்
சித்தரிக்கும் பலபேர்கள்.

முழுவதுமாய் மூடியிருப்பது
உடலையே தவிரை
உள்ளத்தையல்ல!
அதை செயல்படுத்தும்
மூளையையுமல்லவென-

முன்னேறிக் காட்டுகிறது
முக்காடிட்டபடியே
முன்னுக்கு வந்தும்
முழங்கால் கட்டாமல்
முகம் நிமிர்த்தி நின்றும்

சுதந்திரம் பறிக்கப்பட்ட
கூண்டுக் கிளிகளென
கூக்குரலெழுப்படுகிறது
கோடிட்டுக் காட்டப்படுகிறது
உண்மையறியாமல்

சுதந்திரம் கொடுக்கப்பட்ட கிளிகளாய்
சிறகை விறித்து பறக்கிறதே தவிர
கிளிகளையொன்றும் சிறகையொடித்து
சிறைப்படுத்தி வைக்கப்படமில்லை

கூண்டுக்கிளிகளாய் பறப்பதிலும்
கிளிகளுக்கொன்றும் பாரமில்லை
ஏனெனில்! சிலபல பார்வைகளில்
சினேகமுமில்லை   சத்தியமுமில்லை

பலங்காலத்து நாகரீகம்போல்
பின் நவீனத்திலும் ஆடைகளற்றும்
அரைகுறையாய் திரியும் மக்களிடையே
அகிலத்தை அறிவோடு வலம்வந்து
அசிங்கத்தை அவமதிக்கும்
இதேக் கூண்டுகிளிகளாய்
கூண்டுக்கிளியென்றபோதும்
யாருக்குமிங்கே அடிமையில்லை
சுதந்திரமாய் உலகத்தில்
சுற்றித்திறிய தடையேதுமில்லை

குறைக்கூறி கூக்குரல்
எழுப்பத் தேவையில்லை -மார்க்க
கோட்பாடுகளை குறைச்சொல்வதில்
சிறிதளவும் நியாயமில்லை

பர்தாஅணிவதில் தவறேதுமில்லை
இதனால் பாதகங்கள் எவருக்குமில்லை
பசுந்தோல் போர்த்திய புலிக்கும்
பச்சோந்திப் பார்வைக்கும் விருந்தாக
இப்பாவைகளுக்கு விருப்பமில்லை

மறையோன் சொல்லாத ஒன்றை
மனிதனுக்காக செய்யவேண்டுமென்ற
அவசியமுமில்லை
மாண்புடையோன் சொன்னசொல்லை
மறுத்திட மனதுக்கும் அனுமதியில்லை

கூண்டுக்கிளிகளாய்
இருப்பதில் சிறிதளவிலும்
வருத்தமுமில்லை
இறைவாக்கை மீறிட
எள்ளளவும் விருப்பமுமில்லை
இவ்வுலம் மட்டுமே
வாழ்க்கையுமில்லை

இதைத்தாண்டியும்
வாழ்க்கை உண்டென்பதே உண்மை
இதையறிந்து நடந்தால்
வசந்தமாய் கிடைத்திடும் நன்மை...

டிஸ்கி// ஆங்காங்கே உண்மை புரியாமல் எழுத்துக்கள்தானே  என வாரிக்கொட்டப்படுகிறது. நோகடிக்கும் வார்த்தைகள்.
தவறுதலாய் சிதறிய சோற்றை அள்ளிவிடலாம் ஆனால் வேண்டுமென்றே
தாறுமாறாய் சிந்தும் சொல்லை அள்ள முடியாது.
மல்லுக்கு நின்று மனதை நோகடிக்கும் சொல்லுக்கு மன்னிப்புதர மனம்மறுக்கும் சந்தர்ப்பதை யாரும் உருவாக்கிக்கொள்ளவேண்டாம்.

இந்தக்கவிதைக்கூட யாரையும் நோகடிக்கவல்ல.
உண்மை என்னவென்று சிலரேனும் விளங்கிக்கொள்வார்களென்றுதான்.
இதில் கருத்துக்கள்கூட யாரும் கடினவார்த்தைகள்கொண்டு கருத்திடவேண்டாம் பிறர்மனம் நோகும்படி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது