நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முதலிடம்! இது நியாயமா?


என்ன தலைப்பை பார்த்ததும் என்னவோன்னுதானே வந்தீங்க. வந்ததுதான் வந்தீங்க முழுவதையும் படிச்சிடுங்க..

கடந்த மாதம் தடாகம் சர்வதேச மட்டத்தில் முக நூல் மூலமாக கவிதைப் போட்டி ஒன்றை ஆரம்பம் செய்து வைத்தது
இப்போட்டியில் சர்வதேச மட்டத்தில் இருந்து சுமார் (29) கவிதைகள் எமக்கு வந்து சேர்ந்தது
கவிதைகள் அனுப்பிய அத்தனை கவிஞர்களுக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றிகள்

தெரிவுக்குழுவினால்கவிதைகள் தெரிவு செய்யப் பட்டது இதில்
இந்தியாவை சேர்ந்த பெண் கவிஞர் திருமதி மல்லிக்கா பாருக் வெற்றி பெற்று உள்ளார் அவருக்குக்கும் எங்களின் வாழ்த்துக்கள்


அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் அனுமதியோடு..
ரமாலன் தீன்
தகவல் பிரிவு
தடகம் கலை இலக்கியவட்டம்..


முதலிடம் பிடித்த எனது கவிதை


இது நியாயமா?


குற்றம் செய்பவனைவிட
அதைச் செய்யத் தூண்டுபவனுக்குக்கே
அதிக தண்டனையென்று

சட்டத்திலிருக்கிறதாம்
ஆனாலதை யாரும்
சட்டைசெய்வதேயில்லையே!


தூண்டப்படுகிறது
தீவீரவாதம் புரிய
தூண்டப்படுவதறிந்தும்
தூண்டுபவனை யாரும்

தண்டிப்பதேயில்லையே!

குண்டு வைப்பதும்
கொத்துக் கொத்தாய்
கொலைசெய்வது மட்டுமே
தீவிரவாதமல்ல!


பிறம[த]ன உணர்வுகளைச் சிதைத்து- கேளிச்
சித்திரங்கள் செய்வதும் அதன்மூலம்
உணர்வுகளை உசுப்பி
சினங்கொள்ளச் செய்வதும் தீவிரவாதம்தான்!

அநியாயங்கள் புரிந்து
அட்டூளியங்கள் நிகழ்த்தி
அடுத்தவர்களை தனக்காக
அழித்து வாழ்வதும் தீவிரவாதம்தான்!


”ஆனால் இன்னவர்களை”
சட்டம் ஒருபோதும் தண்டிப்பதில்லை
சட்டப்படி தண்டிக்கப்படுபவன்
சாமனியனே!

தூண்டிவிடப்பட்டுவதால்
சினம் கொண்டு - தன்
இனம் மானம்
இரண்டும் காக்க நினைப்பவனே!


தீவிரவாதம் ஒருபோதும்
நியாயமில்லை!
தீரா துயரத்தை
யாருமே விரும்புவதுமில்லை!

நியாயத்திற்கு என்றுமே
நியாயம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை!
அநியாயத்திற்கே நியாயங்கள் கிடைக்கும்
அதுதான் நியாயமேயில்லை.............
 
எனக்கு எழுத்தறிவித்தவன் இறைவனே! அவனுக்கே புகழனைத்தும்.. என் கவிதையை முதன்மையாக தேர்வுசெய்த, அன்பின் சகோதரி ஹிதாயா ராத்தாவுக்கும்.தடாகம் கலை இலக்கிய வட்ட அமைப்பினர்களுக்கும் எனது நெஞ்ச்சார்ந்த நன்றிகளை சொல்லிகொள்கிறேன். எழுத்து என்பது இறைவன் கொடுத்த வரம், வரத்தை வசந்தமாக்கவே விரும்பும் எம்போன்றோருக்கும், வாஞ்சையாய் தோள்தரும் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.. 

உச்சியிலிருந்து உருண்டுவிழுந்து, உலக்கு நீர்கொடுத்து. உழவுக்கு உயிர்கொடுத்து, இயற்கைக்கு குளிர்கொடுத்து, கொஞ்சும் சதங்கைகளை சத்தமிட்டபடியே சலசலத்து ஓடும் அருவியென்றாலே காண்போருக்கே ஆனந்தம், அந்த அருவியையே எமக்கு பட்டமாகளித்ததால் அளவில்லா ஆனந்தம். எல்லாம் எம் இறைவனின் எமக்களித்த பேரானந்தம்.. கவியருவி! பட்டத்தை வழங்கியஉள்ளங்களுக்கு மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

மீண்டும் தடாகம் கலை இலக்கிய வட்டத்திற்க்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்..


அன்புடன் மலிக்கா ,
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது