நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

facebook கவிதைகள்..[ஓமனிதா! முகம்!!]

ஓ மனிதா
















நீ சிந்தித்ததென்ன
சிந்திக்கப்போவதென்ன!
நீ சாதித்ததென்ன
சாதிக்கப்போவதென்ன!

மயிலிறகாய்
கிடைத்திருக்கும் வாழ்க்கையை
மாயவலையில் மாட்டிவிட்டு-நீ
மதிமயங்கிவிடவா!-இல்லை
மரபுகளென்னும்
மதிப்புமிகுந்த சோலையில்
மணவீசி-உன்
மனம் சிறக்கவா!

சிந்தனையை சிற்பியாயிருந்து
செதுக்கி வடிவமை
உன் வாழ்க்கையை
சாதனைகள்
வசந்த சிற்பமாய் வந்து
உன் வாசல்தட்டும்
உன் வாழ்வும் செழிக்கும்..

முகம்















முகம்
அகத்தின் கண்ணாடி
சிலவேளை
அதுவே
மாயக்கண்ணாடி!

மனதை வாசிக்க
முகம்வழியே முயற்சிப்பது
முடியுமென்பது சிலநேரம்
முடியாதென்பது பலநேரம்

அதன்
உள்ளுணர்வை
வெளிச்சமாய் காட்டிவிட்டு
வெளியுணர்வை
உள்ளடக்கிக்காட்டும்

முகக்கண்ணாடி
அதுவே
மாயக்கண்ணாடி..

கிளிக் கிளிக் இங்கே

//டிஸ்கி// இது facebook கவிதைகள். கவிதை முகம் மென்னும்  //facebook இன் தமிழ்க் கவிஞர்களுக்கான ஒரு தேடல்// வாரம் ஒரு கவிதையை ஒரு தலைப்புகொடுத்து எழுத்தசொல்றாங்க. கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

22 கருத்துகள்:

  1. அட நீங்களெல்லாம் களமிறங்கியாச்சா அங்கே - அப்ப வெறும் பார்வையாளனாக மட்டும் இருக்க வேண்டியது தான் ...

    பதிலளிநீக்கு
  2. அங்கும் படித்தேன். ரசித்தேன். படங்கள் அருமை .மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ///அதன்
    உள்ளுணர்வை
    வெளிச்சமாய் காட்டிவிட்டு
    வெளியுணர்வை
    உள்ளடக்கிக்காட்டும்///

    Suuuuuuppper.......

    இர‌ண்டு க‌விதையும் ந‌ல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  4. முகத்தை பற்றிய உங்கள் கவிதை அருமை, அகமகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. ரசிக்க வைத்த நல்ல கவிதைகள்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மயிலிறகாய்...
    மரபுகளுடன்...
    சிந்தனையை
    செதுக்கிய
    சிறந்த .... "ஓ மனிதா"...

    அழகான...
    அர்த்தமுள்ள...
    அனைவரையும் ஈர்க்கும் இம் "முகம்" ....

    சில வரிகளில்...
    சிறந்த இரு குறுங்கவிதைகள்..
    சிறந்த படங்கள்...

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  7. நல்லாயிருக்கு... மனதை பார்க்க கண்ணாடி தேவையில்லை புன்னகை ஒன்றே போதும்...

    ரியாஸ்,

    பதிலளிநீக்கு
  8. இரண்டும் சூப்பர் கவிதை அக்கா...facebook கவிதைகள் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு
  9. //கவிஞர்கள் பலர் உலாவரும் அங்கு. ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதியிருக்கோம். எப்புடியிருக்கு சும்மா சொல்லிட்டுபோங்க கூலியெல்லாம் கேக்கமாட்டேன்..//


    இமயமலை அடிவாரத்துக்கு வந்துட்டீங்க. இனி சீக்கிரமா உச்சிக்கு நிச்சயம் வந்துடுவீங்க நம்பிக்கை இருக்கு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. சும்மாவே கவிதயை ஒரு கலக்கு கலக்குற ஆளுக்கு தலைப்ப குடுத்தா , விட்டுடுவீங்களா என்ன :-)))

    பதிலளிநீக்கு
  11. நன்றாக இருக்கிறது சகோதரி!

    பிரபாகர்...

    பதிலளிநீக்கு
  12. கவிதைகள் எல்லாம் அருமைங்க..... பாராட்டுக்கள்!
    The pictures are nice too.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை...பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  14. இரண்டுமே எப்பவும்போல
    அசத்தல் கவிதைகள் தோழி.

    பதிலளிநீக்கு
  15. ம்ம் வழக்கமான அசத்தல்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. //மனதை வாசிக்க
    முகம்வழியே முயற்சிப்பது
    முடியுமென்பது சிலநேரம்
    முடியாதென்பது பலநேரம்//

    உங்கள் வரிகள் அனைத்தையும் ரசித்து ரசித்துப் படித்தேன்....

    பதிலளிநீக்கு
  17. கவிதை+பிக்சர்ஸ் எல்லாம் சூப்பர்.
    உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது
    எனக்கு ஒரு கவிதை வேண்டும்,
    முடியுமா?

    பதிலளிநீக்கு
  18. Vijis Kitchen கூறியது...
    கவிதை+பிக்சர்ஸ் எல்லாம் சூப்பர்.
    உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது
    எனக்கு ஒரு கவிதை வேண்டும்,
    முடியுமா..//

    மிக்க நன்றி விக்கி.
    நிச்சியம் தருகிறேன். என் மெயில் ஐடி.
    ப்ரொபையிலில் இருக்கு பாருங்க விக்கி.
    அதிலேயே காண்டாக்ட் செய்யலாம்..

    பதிலளிநீக்கு
  19. அக்கா,

    உங்கள் பேஸ்புக் கவிதைகளை அங்கேயே படித்தேன். அருமை.

    இங்கும் (அபுதாபியில்) எங்கள் ஏரியாவில் மட்டும்தானா அல்லது பல இடங்களிலா என்று அறியவில்லை. கடந்த நாங்கு நாட்களாக ஜிமெயில் பிரச்சினை. அதனால் பிளாக்கில் பதிவுகள் இடமுடியவில்லை. பின்னூட்டம் இடமுடியவில்லை. இன்றுதான் வைத்து முயற்சித்தேன். பின்னூட்டம் ஒகே. பதிவிற்கு வாய்ப்பில்லை. நண்பர்களுக்கு பின்னூட்டமிட்டேன். பிரச்சினை எப்ப தீரும் என்று தெரியவில்லை.

    உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை.

    தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அழகான கவிதைகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி வரவேற்ப்பை பாத்ததும் மிக்கமகிழ்ச்சி.

    அப்ப இனி கவிஞர்களுக்கு மத்தியில் இந்த கத்துக்குட்டியும் கலமிறங்கவேண்டியதுதான்.

    பாருங்கப்பூ நம்ம ஜமால்காக்காவ அவுகளவிடவா நான் கவித எழுதுரேன் ஃபேஷ்புக்கில்போய்பாருங்க என்னாமா எழுதிகீறாங்கன்னு..

    ரியாஸ் சிலவேளைமட்டுமல்ல பலவேளை புன்னகை பொய்யாக்கிவிடும் அதெல்லாம் நம்பி ஏம்மாந்துவிடவேண்டாமென்று நல்லாஒர்களின் சங்கம் கேட்டுக்கொள்கிறது..

    சீமாங்கனி அங்கேயும் போய் அசத்துங்க..

    சிகரத்தை நோக்கி சிட்டுக்குருவிய பறக்கச்சொல்லுறீகளே ஜெய்லானி. சரி முயன்றுதான் பாப்போமே..

    வாழ்த்துக்கள் தந்து பாராட்டுக்ள் பகிர்ந்து இன்னும் முன்னேறிவா என்று ஊக்கம் தரும். தந்துகொண்டிருக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .

    ஒரே பதிலாக்கிவிட்டேன்னு தவறா எண்ணாதீங்க. எல்லாம் கைவலியால்தான். சரியானதும் தனித்தனியா பதில் போடுகிறேன்..

    அன்புடன் மலிக்கா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது