நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நான் அவளின் பிரதிநிதி ...
உன்னை ஒருபோதும் நான்
மறக்கப் போவதில்லை
வெருக்கப் போவதுமில்லை

என் வாழ்வின்
திசையையே திருப்பியதும் நீ
திக்கற்று நிற்கவைத்ததும் நீ

உன்மூலம்தான்
அடுத்து கெடுக்கும் நரிதனத்தை
உள்ளம் அறிந்துகொண்டது!

உன்மூலம்தான்
பொய்மையின் கயமைத்தனம்
நெஞ்சதிற்கு புலப்பட்டது!

உன்மூலம்தான்
நல்லுள்ளத்திலும் தீயவை
ஒளிந்திருக்குமென்பது உணர்வுக்கெட்டியது!

உன்னால்தான்
உயிருடன் புதைவதெப்படியென்பது
உணர்த்தப்பட்டது!

உன்னால்தான்
ஊனமான உள்ளமும்
உருப்பெற கற்றுத்தரப்பட்டது!

அத்தனைக்கும் மேலாய்,,,,,

உன்னால்தான்
வழி தவறயிருந்த என் பயணம்
நேர்வழி பெற்றது

அப்படியிருக்க!
எப்படி மறப்பேன் உன்னை
உன் சொல்லை உன் செயலை!

உன்னை என்று மனம்
மறக்கிறதோ
அன்றே என் சுயம் செத்து மடியும்,

சுயமற்று வாழ்வது கோழையன்றோ
அஃதே மறவேன் மறவேன்
மரணத் தருவாயிலும் உனைமறவேன்....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது