நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிந்திக்க சில நொடிகள்
உள்மெளனங்களை 
உதறிக்கொண்டே 
மெல்லிய புன்னகை பூத்தபடி 
மெல்ல அன்னார்ந்து பார்க்கிறேன்!
சூழ்ந்திருந்த மேகங்கள் 
கொஞ்சம் கொஞ்சமாய் நகர 
ஒளிந்திருந்த நிலவின் வெளியே 
ஒரு ஒளிவட்டம் தெரிகிறது!

வானத்தை  நிறைத்திருந்த 
விடிவெள்ளிகள் 
மின்னி மின்னி கண்களுக்கு 
மகிழ்ச்சி விருந்தளிக்கிறது!

விருட்டென்று ஒரு வெள்ளி 
வானத்தைவிட்டு வெளியேறி 
பூமியை நோக்கி  
பொசுகென்று விழுகிறது!
ஒற்றை நிலவுக்கு  
இடைவெளிவிட்டு  
கொஞ்சம் தள்ளி ஒரு வெள்ளி 
நிலவை ரசித்தபடி தொடர்கிறது!
தூண்களே இல்லாமல்  
ஒரு வானம் 
தூய்மையாக காட்சி தந்து-பற்பல 
புதுமைச் செய்திகள் அளிக்கிறது!
அந்தரத்தில் வசப்படுத்தப்பட்ட 
புவியீர்ப்பு சக்திகளை 
பூமிக்கும் அளித்தபடி 
கோல்களும் சுழல்கிறது!
எத்தனை எத்தனை விந்தைகள் 
அத்தனையும் வியக்குபடி 
அகிலமுழுவதும் அருளாளனின்  
அருள்கொடைகள் நிறைந்தபடி!
எல்லாம் கண்டு களிக்க 
ஏகனின் அற்புதம் கண்டு வியக்க 
எனக்கிரு கண்கள் படைத்த 
இறைவனே உனை போற்றுகிறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது