நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விசா பறவைகள்!!


விழிநிறைய கனவுகளோடு
விமானமேறிய விசாபறவைகள்
விபத்துக்குள்ளாவது அறியாது
வானத்தில் சென்றன

எத்தனை எத்தனை கனவுகள்
எத்தனை எத்தனை நினைவுகள்
எண்ணங்களுக்கு
சிறகடித்துப் பறந்திருக்கும்

எல்லாம் முடிந்திருக்கும்
விமானம் 
வெடித்து சிதறி-வீசி
எரியப்பட்டபோது


நாடுவிட்டு நாடுவந்து
நாடோடிகளாய்
நாமிருக்கும் வேளையில்
நாளை நடப்பதை நாமறியோம்

வயிறுப் பிழைப்புக்கும்
வசதிக்கும்
வழிபோக்கர்களாய் வெளிநாடு
வந்திருக்கும் நாம்

வீடு திரும்பும்வரை
வியர்வை வழிய உழைத்து
விழிகள் வலிக்க அழுது
விடியலிலும் தொழுது


இப்படி
எதிர்பாராமல் வரும்
இன்னலையும் இரங்கல்ளையும்
எதிர்கொள்ளமுடியாமல் தவித்து

விசா பறவைகளாய்
வீட்டைவிட்டு வெளியேறி
வேலை தேடிவரும்
மனிதப் பறவையாய்

மர நிழலென்னும்
தன்கூடுக்குள் திரும்பும்வரை
மனதிலும் நிம்மதியில்லாமல்
தன்னுள்ளதிலும் உணர்வில்லாமல்

பெற்றது பாதி
பெறாதது மீதியென
புறப்பட்டு போகும் வழியில்
பறந்துவரும் விமானம்

விதிவசத்தால் விபத்துக்குள்ளாகி
விகாரமாய் வீசியெறிப்படும்போது
விதவிதமாய் கண்ட கனவுகள்
விழிநிறைந்த விஸ்வரூப நினைவுகள்

எல்லாம்,,,, எல்லாம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணெதிரே களைந்து
எரியப்பட்டு உயிர்களைனத்தும்
காற்றோடு கலக்கப்படுகின்றன

விசயம் அறிந்ததும்
வீறிட்டு அழுது
விம்மி வெடிக்கிறது
உள்ளம்

மரணத்தை தழுவியவர்கள்
முகமறியாதவர்கள் என்றபோதும்
மனதுக்குள் வந்து சென்றதுபோல்
நினைவைத் தருகிறது சோகம்

எதிர்பார்ப்புகளோடு வந்தவர்கள்
எதிர்பாராமல் இயற்கை
எய்திவிட்டார்கள் -இருகரம்
ஏந்தி


இறைவனிடம்
இறைஞ்சி வேண்டிடுவோம்
இறந்தவர்களின் ஆன்மாவை
இரச்சிக்கச்சொல்லி.....

//மங்களூர் விமானவிபத்து இன்று செய்திபார்த்தேன்.
 மனம் தாங்கமுடியவில்லை
இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறுவழியில்லை.
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நாம்படும்பாடு.
சிலநேரம் சுகமோடு சிலநேரம் சோகத்தோடு.
இறைவா!
உன்னாலே உயிர்பெற்றோம்.
உன்னிடமே திரும்பவருவோம்.
எங்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
ஆமீன் ஆமீன் ஆமீன்..//


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது