நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொதியிழுக்கும் மனிதன்குருதியின் கண்ணீராய்
வேர்வைத் துளிகள்
வேகாத வெயிலிலும்
தாங்காத குளிரிலும்
தன்னை வருத்திக்கொண்டு

குடும்ப மென்னும் கூடு
வறுமை யென்னும்
கிலிக்குள் சிக்காதிருக்க
வருத்தமதை தான் சகித்து
வசந்தமதை குடும்பம் சுகிக்க

நெஞ்ச டைக்கும் பாரம்
தாங்க முடியா துயரம்
மேனி தாளா வருத்தம்
எதையும் பொருட்படுத்தாது

பொதியிழுக்கும்
மாடாய் மனிதன்
காகிதமவனை ஆட்டுவிக்க
களி மண்ணை
சுமக்கும் நிலையில்

சூலைகளின்
சுவாலையில்
வேகும் செங்கற்கள்
கருகாது சிவந்திருக்கும்

ஏனெனில்
களிமண்ணுக்குள்
ஏழைகளின் உழைப்பு
செந்நீராய் கலந்திருக்கும்...


100, தாண்டி மீண்டும் 01 லிருந்து தொடங்கப்பட்ட
கவிதை வயலுக்காக இக்கவிதை. நன்றி சகோ றாபி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது