நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

'வாழ்க்கையும் குறிக்கோளும்''



மனிதா!
எத்தனையோ கேள்விக் கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!

இச்சையின்பத்தால்
இரண்டரகலந்ததில்
இவ்வுலகத்தை
இருகண்கொண்டு கண்டவன் நீ
இளக்கர தோரணையோடு
இவ்வுலகில் வலம்வருகிறாய்!

நீ வரும்போது
அழுகையைத் தவிர
ஏதுமில்லை
உன்னிடத்தில்
அதையும்
நீ போகும்போது
பிறரிடம் கொடுத்துசெல்பவன்
இருந்துமேனோ
இருமாப்புடன் வாழ்கிறாய்!


ஆகாசமும் பூமியும்
உனக்காக
படைக்கப்படத்துதான் என்ற
ஆணவத்தில்
அலைபவனாக திரிகிறாய்
ஆகாதென தெரிந்தும்
அமிலத்தை
அறுஞ்சுவையென நினைக்கிறாய்!

ஐபூதங்களின்
ஆதரவில் வாழ்பவன் நீ
ஐந்தில் ஒன்றை இழந்தாலும்
ஆட்டம் கொள்ளும் உனதுடலுயிர்
அப்படியிருந்தும்
அனாச்சாரபிடியில் சிக்கி
அழிவை நோக்கி நகர்கிறாய்!


உனக்கு தரப்பட்டிருக்கும்
காலகெடு முடியும்வரைதான்
உனதாட்டம் இப்பூமியில்
காலக்கெடுக்கு கணக்கு வழக்கில்லை
காலவெதியான உயிர்களுக்கு
இப்பூமியில் இடமில்லை
இவையறிந்துமேனோ
இச்சைகளின் பின்னே
அட்டைகள்போல்
ஒட்டிக்கொண்டலைகிறாய்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரை
பாவங்களால் நிரம்பியிருப்பவன் நீ
பாவங்களை பெருக்குவதிலிருந்து
உன்னை விலக்குவதில்லையென
விடாபிடியாகயிருக்கிறாய் ! 

ஒருதுளி நீரால்
உருவாகியவன் நீ
ஒவ்வொரு தீங்குகளையும்
நீர் தெளித்து வளர்கிறாய்
குறிகோள்கள் ஏதுமற்று
குட்டியச் சுவராகவே
வாழ்ந்து கெடுகிறாய்
மரணம்வரும்வரை
மதியிழக்கிறாய்
மரணவேளையில்
மனதால் மடிந்தழுகிறாய்!

மனிதா!
எத்தனையோ கேள்விக்கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!
==================================

கவிதை வயலின் 100 வது கவிதையிது. நன்றி றாஃபி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது