நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் கண்ணே


கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால்
என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்

ஸ்கேன் என்னும்
கருவியோடு
என் வயிற்றுக்குள்
நடக்குது போராட்டம்

உன்உருவத்தை
பார்க்க
என்உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு
உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்

அன்னை
அழுது புலம்புகிறேனே
அமுதே
என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா

புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே
என் தவிப்பு
உனக்கு புரியலையா

பூமியைப்பார்க்க
உனக்கு விருப்பமில்லையா
இல்லை
இந்த அப்-பாவித்தாயை
பார்க்கபிடிக்கவில்லையா

மருவித்தவிக்கின்றேன்
மன்றாடிதுடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான்போகின்றேன்

பதுமையே பதுமையே
எனை காணவருவாயா
பட்டுப்பூவினமே
என்னை
பதறவைப்பாயா

காத்திருக்கிறேன்
கண்மணியே உயிருக்குள்
உருகியபடி
வசந்தமான உனைக்காண
என்வயிற்றை வருடியபடி

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மைதான்
முழுமையின் அடையாளம்

அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும்வரம்..[ஏழு வருடங்களுக்கு முன் மனம்பட்டபாடு
அதை கிறுக்கலாய் வடித்தேன் என் எழுத்துக்களோடு]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது