நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுதந்திரமே சுதந்திரமே


சுதந்திரமே சுதந்திரமே!

உன் சுவாசம் தேடி அலைந்தபோது –அது
உச்சானிக் கொம்பில்
மூவர்ணங்களின் கொடியில்
மூச்சுவிட்டு அசைந்து கொண்டிருந்தது

சுதந்திரமே! உன்னை
அறுபத்தியிரண்டு வருடங்களுக்கு
முன்பே பெற்றுவிட்டோம் -ஆனால்
அதன் அடிச்சுவடுகூட தெரியாமல்
வாழ்வோரை காணும்போது
வியப்பதா? வேதனைப்படுவதா?

பாடசாலைகளில்
கல்வி கற்கவேண்டிய பாலகர்கள்
பட்டாசு தொழில்சாலையிலும்
கல்குவாரியிலும்.

சுத்தமான காற்றைகூட
சுவாசிக்க முடியாத
குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை
சுற்றிவலைத்த கொசுக்களிலும்
கூவத்தின் நாற்றத்திலும்.
அநியாயத்தில் கைகளில்
நியாயத்தின் குரல்வலைகளும்.

சகோதரத்துவத்தோடு
வாழவேண்டிவர்களின் ஒற்றுமை
சாதிமத சண்டைகளால்
வெட்டிக் கொன்று கொண்டும்
தனக்குச் சொந்தமானவைகளைக்கூட
தன்னோடு வைத்திருப்பதும்
ஆபத்தாகவும்.

அர்த்த ராத்திரியில்
ஆண்களே தன்னந்தனியே
வெளியில் செல்வது முடியாமல் போவதும்
முகம் திறந்த திருடர்களின்
கொள்ளையடிக்கும் மோகமும்
நாளுக்குநாள் கூடுவதும்

இப்படி சுதந்திரமே! நீ இருந்தும்
இல்லாததுபோலானதேயென
இவர்களின் நிலையை நினைத்து
வருந்தும் மனம் புண்ணாகிபோகிறது.

ஆனால்!
உன்னை அத்துமீறி
பயன்படுத்துவோரை காணும்போது
ஆத்திரப்படுவதா? ஆதங்கப்படுவதா?

அன்புக்கணவனையும்
ஆசைக் குழந்தைகளையும்
அந்தரத்தில் விட்டுவிட்டு
தன்சுகங்களுக்காக
தடுமாறிப்போகும் மனைவிகள்!
தன்னையே நம்பிவந்த மனைவி மக்களை
தவிக்க விட்டுவிட்டு
தன்னலத்துக்காக
தலைமறைவாகும் கணவர்கள்!

தன்சுதந்திரம் பறிபோகுதென
தன்னைப் பெற்றவர்களையே!
பெருஞ்சுமயையாய்
பெற்றபிள்ளைகளே நினைக்க
பெருகி வழியும் முதியோர் இல்லங்களில்
நெஞ்சுருகும் சோகங்கள்!

வயிற்றுக்கே போராடும்
வறுமையுடையோர்களை
வசதிபடைத்தோர்கள் வாரியணைக்காது
அன்றாங்காய்சியாக்கி அடிமாடுகளாய்
அடிபணியவைக்கும் அல்லல்கள்

முழுவதும் மூடிய காலம்போய்
சுதந்திரம் என்ற பெயரில்
முற்றும் துறந்தவராய் அலைந்துதிரியும்
ஆபாசத்தின் அவலங்களென
சுதந்திரத்தை
அசுத்தமாக்குவோரை எண்ணி
நெஞ்சம் புலம்பித் தவிக்கிறது.

சுதந்திரமே!
உன்னை அன்னியர்களிடமிருந்து-பலபல
சோதனைப்பின் சொக்கத்தங்கமாய்
வென்றெடுத்தோம்
அதை நம்மவர் சிலரின்
சுயநலத்துக்காக மட்டும் நீ
சொந்தமாகி மீண்டும்
அடிமையாகிவிடாதே!

சுதந்திரமே! சுதந்திரமே!
உன் சுதந்திரக் காற்றால்
இந்த தேசதத்தை சுத்தப்படுத்து
உன் சுகந்தமானகாற்று
இவ்வுலகை சுற்றியடிக்கட்டும்
அதில் இப்புனிதபூமியே
ல்லாங்குழல் வாசிக்கட்டும்
உலகெங்கும் சுதந்திரத்தின்
சுகங்கள் பரவட்டும்
மனங்களனைத்தும் இணைந்துஒருதாய் மக்களாய் வாழட்டும்.....


/இதை சுதந்திரதினத்தன்று :தமிழ்குடும்பத்திற்காக: எழுதியது/
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது