நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விடியலை நோக்கி,


முகநூலில். கவிதை சங்கமம் நடத்திய கவிதைபோட்டியில். “வாய்ப்பும் வியப்பும்” என்ற என் கவிதை முதல் இடத்தை பெற்றிருந்தது. அதற்கான பரிசாக இப்புத்தகத்தை சங்கமம் குழுவினர்கள் மனமார்ந்த வாழ்த்துகளோடு இதை அனுப்பிவைத்துள்ளார்கள் கூரியரில்.நேற்றுதான் இது கிடைக்கபெற்றது. இம்மகிழ்ச்சியான விசயத்தை உங்களோடு  பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம்.

இன்பமும் துன்பமும் நிலைப்பதில்லை இந்த நிலையில்லா உலகைப்போல். சிரமமும் சந்தோஷமும் கலந்துதான் வாழ்க்கை  என்பதை உணர்த்துகிறது வாழ்க்கைப்பாடம் சிறுசந்தோஷத்தை தந்த இறைவன் சீரிய நல்லதை தந்து,சிரமத்தையும் நீக்கவழிசெய்வான் என்ற நம்பிக்கையில்...


வெளுத்த வானத்தை
கருத்தமேகம் சூழ்ந்து
வெளிச்சக்கதிரை
மறைக்க முயழ

சுற்றி வீசும் தென்றல்
சூழ்ந்த மேகத்தை கலைத்து
வெளிச்ச ஒளியை
உலகில் பரப்ப

கருத்த மேகமலையை -தன்
ஊடுருவல் உளியால் செதுக்கி
மெல்ல மெல்ல புகுந்து
வெண்ணிற வானத்தை அடைய

தென்றல் புகுந்த கீறலின் வழியே
தெரியப் பார்க்கும்
வெளிச்சக் கோடுகளை வரவேற்று
விடியலை நோக்கும் பூமியாய்

கவலைகள் சூழ்ந்துள்ள
மனதிற்கு சிறுமகிழ்வாய்
சந்தோஷக் கீறல்கள்
சில சில வந்தபோதும்

நிஜ விடியலை எதிர்பார்த்து
நிறைவைக் காணத் துடிக்கும்
நிலைகுலைந்த நெஞ்சம்
நிறைவைத் தரச்சொல்லி புகுந்தது
இறைவனிடம் தஞ்சம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்- இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
கவிஞர்களையும். இலக்கிய ஆர்வர்வலர்களையும். ஊக்கும்விக்கும்வகையில் செய்ல்படும்  கவிதை சங்கமத்திற்கு
மனமார்ந்த நன்றிகள்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது