நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நட்பின் வலிமை


ப்ரியம் சமைத்த
பசுமை நிறைந்த
புல்வெளியில்
பனித்துளிபோல்,

பிரியமென்றாய்
பாசம்கொண்டேன்
அதீதப் பிரியமென்றாய்
அன்புகொண்டேன்!
நட்பானதால்.

துன்பம் வந்துன்
தோள் தொடுமுன்
கண்முன் வருவேன்
உன்தோள்தாங்கி
நிற்பேன்!
நட்பானதால்.

பேராசைகளோடு
பேரன்புகொண்டால்
வேண்டாமென்பேன்
கோபத்தோடு
கைகோத்து நின்றால்
கூடாதென்பேன்!
நட்பானதால்.

உன்னைச் சுற்றி
சோதனைகள்
சூழ்ந்ததென்றால்
சோகம்
என்னைத்தேடி
வாட்டும்
நட்பானதால்.

நீ
தவறிழைக்கும்போது
தட்டிக்கொடுக்கமாட்டேன்
ஏன் செய்தாயென
தட்டிக்கேட்பேன்
நட்பானதால்.

நீ
சாதித்து நிற்கும்
வேளையிலும்
இதுவெல்லாம்
போதாதென்பேன்
நட்பானதால்.

உன்னை
வருத்தம் வருத்தும்
வேளையில்
வருந்தாதவாறு
வருட வருவேன்
வசந்தமாய்
நட்பானதால்.

நீ
விலகிச்சென்றாலும்
வெறுத்துச்சென்றாலும்
வருவேன் கூடவே
நிழலோடு நிழலாய்!

ஏனென்றால்!!

படைத்தவன் கொடுத்த
என்
உள்ளக் கூட்டுக்குள்
உன்னை
பத்திரப்படுத்திக்
கொள்வேன்
என்னுயிரில் கலந்த
நட்பாய்................

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


[அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் மாத இதழுக்காக நான் எழுதிய கவிதை  [இம்மாத தலைப்பு நட்பின் வலிமை]
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது