நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

களையெடுத்தால்!உடல் திண்ண ஓடியாடி அலையும்
ஓநாய் கூட்டங்கள்
மலக்கழிவுகள் என்றபோதும்
மாங்கு மாங்கென்று தின்றுதீர்க்கும்
மனிதப் பன்றிகள்

இரக்கம் இச்சைக்கு முன்
இரக்கமற்று கிடப்பதால்
ஈட்டிகளாய் மாறிடும்
ஈனப் பிறவிகள்

பச்சிளங்களைக்கூட
விட்டு வைக்காத
பாதகர்களின் கண்கள்
காமத்தால் மறைக்கப்படுவதால்
மேடையமைக்கும் கொடூரங்கள்

காணும் இடமெங்கிலும்
கவர்ச்சிகளின் அலங்கோலம்
கண்ணோரம் மோகமமர்வதால்
கண்ணியமெல்லாம் காததூரம்

கற்புகள் கலைக்கப்படுவது ஒருபுறம்
காணாமல்போகும் கற்புகள் மறுபுறம்
மானக்காப்பது மிக மிக கஷ்டம்
மானமிழப்பதோ மிக சர்வசாதாரணம்

நாளுக்கு நாள் சீரழிவுகளின்
நாட்டியமரங்கேற்றம்
நாய்களுக்கும் நரிகளுக்கும்
நாகரீக சிம்மாசனம்

காட்டேறிகள் வசிக்கும் பூமியில்
கற்புகள் சூரையாடப்படுவது மிகுதம்
கண்ணியம்
காக்கும் பொருப்பை பலப்படுத்தி
கலாச்சாரம் காப்பது சிறப்பாகும்

கற்பழிப்பவர்களை
தூண்டிவிடும் உணர்ச்சிகளை
துண்டித்து
காரணிகளை களையெடுத்தால்
கற்பழிப்பார்களா இனி?

இல்லையெனில்

கற்பை துச்சமென நினைக்கும்
துஷ்மன்களின் உயிர்களை
துகிலுரித்து துவேசித்தால்
கற்பழிக்க எண்ணுவோருக்கும்
கதிகலங்க வைக்காதோ மதி...
--------------------------------------

குறிப்பு:
இதுபோன்ற கொடூரங்களுக்கு தண்டணை கடுமையானால்தான்
தவறுகள் குறையவாவது நினைக்கும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது