நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முதிர்ந்துதிரும் இளமைகள்.வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,
வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு
வயது போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை கொடுக்க
வழியில்லையே என்று!

உடல் உருப்படியான
ஆண்மகன்களுக்கு
உள்ளம் ஊனமானதோ?
பழமுதிர் சோலையாகவேண்டிய
கன்னியற்களுக்கெல்லாம் அதனால்
பாலைவன வாழ்க்கையாகுதோ?

இந்த முதிர்-கன்னிகளின்
தேடலுக்கு முடிவென்ன?
முதுகெலும்பில்லாதவர்களின்
தேவைகளுக்கு தீர்வுதானென்ன?
முன்பக்கம் வேண்டாமென
பின்பக்கம் பல்லிழிப்பதை
தவிர்ப்பதெப்போ?

முதிரவைக்கும்
வரதட்சணையை
எதிர்த்து நில்லுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கணவர் எனும் உறவுக்கு
கெளரவம் சேர்க்க
முன்வாருங்கள்..

அன்புடன் மலிக்கா இறைவனை
நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது