புகை படிந்த பூக்கள்!
விசால மண்ணில் விசித்திரப்பூக்கள்
விரகதாபத்தால் விஷம் தோய்க்கும்பூக்கள்
வெண்ணிறமாய் வேடம்தரித்து
வேஷமிடும் பூக்கள்
வேதனையில் வெந்துசாகும்
விபச்சாரப் பூக்கள்
புகைபடிந்து புகைப்படிந்து
பூத்துக்குலுங்கும் பூக்கள்
புன்னகையை கடன்வாங்கி
பூட்டுப்போடும் பூக்கள்
எஞ்சி மிஞ்சியதை
எடுத்துக்கொடுக்கும் பூக்கள்
எயிட்ஸையும் அள்ளிதரும்
எச்சில் பூக்கள்
ஏஞ்சலென ஆடிவரும்
எந்திரப் பூக்கள் -அதை
ஏக்கத்துடன் தேடிப்போகும்
ஏராளமான வண்டுகள்
புகை படிந்த பூக்களென்றாலும்
பூந்தென்றல் தாலாட்டும்
படிந்த புகையும்
பொலபொலவென கீழ்கொட்டும்
பூத்துச்சிணுங்கும் பூக்களாய்
புன்னகைத்து வாழ்ந்தாலும்
ஒருபோதும் இவர்களுக்கில்லை
புண்ணியங்கள் எந்நாளும்...
2
பூவே!
உன்மீது புகைபடிய வைத்த
காற்றை
கைது செய்யச்சொல்லி
என்காதலனை அனுப்பியுள்ளேன்
கலங்காதே
புகைபடிந்த உன்மீது
என்சுவாசத்தின்
ஸ்பரிசம் பட்டதும்
புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..
[டிஸ்கி: இந்த தலைப்பு என்னுடயதல்ல!
காஞ்சி முரளியுடையது.
அவர்கள் எழுதிய ஒரு கவிதைத்தலைப்பில்
நாமும் எழுதிப்பார்ப்போமேன்னு.
மிக்க நன்றி முரளி.]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)