நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொய்யின் தண்டனை!


பொய்யுரைக்கும் நாவிற்கு
போசனமேதுமில்லை!
பொய்யாளியின் பேச்சிற்க்கு
போதியளவேனும் மதிப்பில்லை!

ஒற்றைப்பொய்யை மறைப்பதற்கு
ஓராயிரம் பொய்களை அடுக்கிக்கொண்டால்
ஒழுக்கக்கேட்டை அணிந்துகொண்டே
ஒப்பாரி வைக்க வர வேண்டிவரும்

பொய்யில் தொடங்கும் தொடக்கமெல்லாம்
பிரயோசனமற்று அழிந்துவிடும்
பொய்யுரைப்போருக்கு தண்டனையோ
அவர்
மெய்யுரைத்த போதிலும்
அனைத்தும்
பொய்யே என்று  தூற்றுப்படும்

நெருப்பு விறகை   தின்பதுபோல்
பொய் இறையச்சத்தை தின்றுவிடும்
பொய்யின் வழியே செல்வோருக்கு
நல்வழித்தடங்களே  மறைந்துவிடும்.

பொய்யைச்சொல்லி ஒருகவளம்
சோற்றை வாங்கி உண்பதற்க்கு
மெய்யைசொல்லி ஒருகுவளை
தண்ணீர் வாங்கிப் பருகிவிடு
தவறும் வழியிலிருந்து மீண்டுவிடு!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நம்மைநோக்கி



அருளான அருளாளன்
அன்பினை சொல்லிட
அருள்மாத மொன்று
அருமையாய் வருது நம்மைநோக்கி!

இறைமறையென்னும்
திருமறை வேதம்
தோன்றிய நன்னாளொன்று
பெருமையாய் வருது நம்மைநோக்கி!

தக்வாவென்னும் இறையச்சத்தை
தூசிதட்டி மனதை தூய்மையாக்க
தூய துடைப்பமாகவரும் நாளொன்று
விரைந்து வருது நமை நோக்கி

உறுதியான ஈமானை
உதறிதள்ளி வாழ்வோருக்கும்
உள்ளத்தெளிவை உண்டாக்கும் நாளொன்று
ஓடி வருது நம்மைநோக்கி!

தர்மமென்னும் ஜக்காத்தை
தாராளமாய் ஏழை எளியோருக்கும்
வாரி வாரிக்கொடுத்திடும் நாளொன்று
வருது வருது நம்மைநோக்கி

லைலத்துல் கதிரென்னும்
ஒளிகொண்ட நன்னாளொன்று
அகம் புறம் குளிர்விக்க
அதிவேகமாய் வருது நமைநோக்கி!

பசித்திருந்து தனித்திருந்தும்
படைத்தோனை வழிபடவே
பதினோரு மாதங்கள் கடந்து
பவித்திரமாய் வருது நம்மைநோக்கி!

உடலுக்கும் உள்ளத்துக்கும்
உரம்கொடுக்கும் ஒருமாதம்
உணர்வையும் உணர்ச்சியையும்
உணர்ந்து புரியவைக்கும்  திருமாதம்

பசிக்கும் தாகத்துக்கும்
பரிட்சை வைக்கும் பண்மாதம்
வரியோரையும் எளியோரையும்
வாஞ்சைகொள்ளச்செய்யும் நன்மாதம்

உலக்காசை துறந்து
இறையாசை அதிகரிக்கும் ஏற்றமிகுமாதம்
பாவங்களை போக்கி
பயபக்தியை உண்டாக்கும் மாதம்

இம்மாதம் இம்மாதம்
ஒருமாதம் மட்டும் வந்தால் போதாதே!
இம்மாதம்போல் மக்கள்
எம்மாதமும் வாழ்ந்தால்
இவ்வுலகம் இவ்வுலகம்
இழிவான பாவங்களால் சுழலாதே!



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தான் வாடியும்!


வாடி வதங்கிய‌
வாசனையற்ற‌ மலராய்
வாஞ்சைக்காட்ட ஆளில்லா
தோல் சுறுங்கிய‌
கூன் விழுந்த கிழவி‍‍!


வயிற்றுப் பசியைப் போக்க
வாசனை நிறம்பிய மலர்களை
தான் வாடியும்
மலரை வாடவிடாது
வெயில்மழை பாராது
வீதியோரங்களில் அமர்ந்து
வாய்வலிக்க விற்குது கூவி..


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது