நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாவமன்னிப்பு


எங்கள் இறைவா!
அகிலத்தின் அதிபதியே!
ஆட்சி செய்பவனே!
இரக்கமுள்ளவனே!

ஈகையாளனே!
உறுதியாளனே, உண்மையாளனே!
ஊக்கமளிப்பவனே!
எல்லைகளை கடந்தவனே!
ஏற்றமுடையவனே!
ஐபூதங்களையும் அடக்கி ஆள்பவனே!
ஒரு சிறு தீங்கும் இழைக்காதவனே!
ஓர்மை நிறைந்தவனே!
எங்கள் பிழைகளை பொறுக்கச் சொல்லிமன்றாடி நிற்கிறோம் இறைவா!

எங்கள் இறைவா!
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும்புரிந்தும்
புரியாமலும் கூட்டத்திலும் தனிமையிலும்
ரகசியமாகவும் பகிரங்கமாகவும் செய்த ஒவ்வொரு சிறிய பெரிய
பாவங்களையும் மன்னித்தருள்வாயாக
!

எங்கள் இறைவா!
எங்கள் உடல் உறுப்புக்கள் செய்த

ஒவ்வொருபாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

எங்கள் இறைவா!
பூமியில் பிறந்த நாங்கள் புண்ணியம் செய்வதை விட்டுவிட்டு
பாவங்களின் பக்கம் எங்கள் முகங்களையும் எங்கள் மனங்களையும்
பிணைத்துவைத்திருக்கின்றோம் அதிலிருந்து
எங்களை மீட்டெடுப்பாயாக
!

எங்கள் இறைவா!
எங்கள் இதயங்கள் அழுக்கடைந்திருக்கிறது பலவிதங்களில்
பாவங்கள் புதைந்துகிடக்கிறது எங்கள் உள்ளங்களை தூய்மைப்படுத்தி
எங்கள் எண்ணங்களை தெளிவானதாக்கி வைப்பாயாக!

எங்கள் இறைவா!
நாங்கள் பலவீனமானவர்கள்
ஒன்றும் தெரியாதவர்கள்
மாய உலகில் சிக்கியவர்கள்
வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்
நல்லது கெட்டது என்று தெரிந்தும் பல
நேரங்களில்தவறிழைக்ககூடியவர்கள் இறைவா!

எங்கள் ஒவ்வோர் உறுப்புகளும் பாவத்தில் மூழ்கியிருக்கிறது
எங்கள் குற்றங்களை மன்னித்துவிடு எங்கள் பாவங்களை போக்கிவிடு
எங்களின்
கவனக்குறைவுகளை நீக்கிவிடு

எங்கள் இறைவா!
பாவமன்னிப்புக்கேட்டு தலைகுனிந்து நிற்கிறோம்
கைகளை ஏந்தியவண்ணம் நிற்கிறோம்
எங்கள் கைகளை வெறுங்கைகளாக தட்டிவிடாதே!
உன் சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்
எங்கள் கோரிக்கைகளையேற்று எங்களின் பாவங்களை மன்னித்து
எங்களுக்கு நல்லருள் புரிவாயாக!

எங்கள் இறைவா!
எங்களை ஷைத்தான்களின் தீங்கைவிட்டும்
கொடியமனிதர்களின் தீங்கைவிட்டும்
கொடிய வியாதிகளின் தீங்கைவிட்டும்
நேரான பாதையிலிருந்து வழி தவறுவதைவிட்டும்
கெட்டவர்களிடம் கூட்டு சேர்வதைவிட்டும்
நல்லவர்களிடமிருந்து பிரிவதைவிட்டும்
தீயபழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதைவிட்டும்
எங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கிழைப்பதைவிட்டும்
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதைவிட்டும்
அடுத்தவர்களின் பொருள்களை அபகரிப்பதைவிட்டும்
அநியாங்கள் செய்வதைவிட்டும்
அத்துமீறிய செயல்களைவிட்டும்
எங்களை காப்பற்றுவாயாக! எங்களை காப்பாற்றுவாயாக!

எங்கள் இறைவா!
புனிதமாதத்தின் இறுதியில் இருக்கிறோம்
எங்கள் பிராத்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக
இம்மாதத்தின் பொருட்டால்
எங்கள் பிழைகளை மன்னித்தருள்வாயாக!
இந்நோன்பின் பொருட்டால்
எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக!
வணக்கங்களின் பொருட்டால்
எங்கள் தவறுகளை மன்னித்தருள்வாயாக!
இனி தவறுகளின், பாவங்களின், குற்றங்களின்
பக்கமே எங்கள் உடலும் உள்ளமும் திரும்பிவிடாதவாறு
நேரான வழியில் எங்களை நடத்திச்செல்வாயாக
எங்களை பாதுக்காப்பாயாக!
எங்களை பரிசுத்தப்படுத்துவாயாக!

எங்கள் இறைவா!
உன்னிடமே உதவி தேடுகிறோம்
உன்னிடமே எங்களை மன்னிக்கச்சொல்லி நாடுகின்றோம்
எங்களை மன்னித்து உன் அருளை எங்கள்மீது புரிந்தருள்வாயாக!
புரிந்தருள்வாயாக! புரிந்தருள்வாயாக! ஆமீன்...




அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்





விழிப்”புணர்வு”



விழியே
கதை எழுதி எழுதி ஏங்கவைப்பதே
உன் விளையாட்டாகிவிட்டது

எழுதும் கதைகளை
வாசித்தும் வாசிக்காமலும்
மனங்களெல்லாம் மருகித்தவிக்கிறது


விழியே உன் வழியே-பல
விபத்துக்கள் நேர்க்கின்றன

உன்னால் பலர் வழுக்கிவிழுவதும்
வாழ்வு இழப்பதும்
வழக்கமாகிக்கொண்டே போகிறது

விழியே ஒளிதரும் உனக்கு
பிறறின் இருள் எதற்கு

உன்னால் மன ரணங்களும்
மரணங்களும் நிகழ்கிறது

விழியே! விழிப்புணர்வோடு இரு
இல்லையென்றால் உனக்கும்
விபத்துக்கள் வந்தடையகூடும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது