நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சுதந்திர சிறை.


சிறகிருந்தும் சிறையில்
இறகு பிடுங்கபட்ட நிலையில்
எக்கி எக்கி பார்த்தும்
எட்டாக் கனியாய்
எங்கோ எங்கெங்கோ
எள்ளிநகையாடியபடி

ஏனென்று கேட்டால்
என்னடி எகத்தாளமா
இடிசொல்,,

எதற்கென்று கேட்டால்
என்னம்மா திமிர்தனமா
பழிச்சொல்,,

எனகென்று கேட்டால்
என்னடி எடுப்புதனமா
கடுஞ்சொல்,,

சுமைக் கல்லைகட்டி
சுகமாய் பறக்கசொல்லும்
சுதந்திரம்,, பலருக்கு

சுகபோக வாழ்வுகொடுத்து-மன
சுறுக்குபோட்டு நிலைகுலைக்கும்
சுதந்திரம்,, பலருக்கு

தரத்தையும் கெடுக்கும்
தரத்தையும் கொடுக்கும்
சு தந்திரம்
தந்திரமிக்கது
தரம் பார்த்தே
தங்குமிடத்தை
தேர்வு செய்கிறது...

 கவிதை வயல்-- 186--

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மண்ணும் நானும்...

நீ என் ஆதிமூலம்
நான் உனது அங்க நாளம்

உன்னையன்றி
என் பயணம் போக
வேறு வழியில்லை

நீதானே
என் வாழ்க்கையின்
வரையறுத்த எல்லை

உன்மீது நான்போடும்
ஆட்டமெல்லாம்

என் ரத்தநாளங்கள்
அடங்குவரையே தொடரும்

உன்னைப்போலவே நானும்
பொறுமை காக்கிறேன்

பொறுக்க முடியா நிலையில்
சிதறி உடைகிறேன்

புன்னகையென்னும்
பூக்கள் பூக்கிறேன்

வாடும் நிலைதனில்
வதங்கி சிதைகிறேன்

பாச நீரூற்ற
படர்ந்து வாழ்கிறேன்

பாசம் வேசமாக
பட்டுப்போய் சாய்கிறேன்

..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது