நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சோறுபோடும் சேறு!


காலக்கருக்களிலே களத்துமேடு போறமச்சான்”
காலக்கருக்களிலே களத்துமேடு போறமச்சான்”
கடக்கண்ணக் காட்டிடுங்க
கஞ்சிகொண்டு நானும் வாரேன்
சோடிசேந்து போவோம் -அந்த
சேத்தில் இறங்கி உழுவோம்
சோந்து போயிடாம -எடயில்
கஞ்சியையும் குடிப்போம்


செக்கச்சிவந்தபுள்ள சீமக்கார செவத்தபுள்ள”-அடிச்
செக்கச்சிவந்தபுள்ள சீமக்கார செவத்தபுள்ள”

சுள்ளுன்னு வெயிலுபட்டா
சுருங்கிபோகும் ஓவ்வுடம்பு

சூடெல்லாம் தாங்கமாட்டே
வீட்டிலேயேயிருடி நாமட்டும் போய் வாறேன்
வயலுவேல முடிஞ்சி அடி சொனங்கிடாம வாரேன்-
.
மாமென்பெத்த மன்னவனே! ஏம்மனசுகேத்த சின்னவனே!
மாமென்பெத்த மன்னவனே! ஏம்மனசுகேத்த சின்னவனே!

செக்கச் செவந்தமேனி யானாலும்
செல்லச்சீமாட்டியா பொறந்தாலும்
செத்தபின்ன வெத்துடம்பு

செத்துப்புட்டா மண்ணுக்குதான்
நானுங்கூட வந்து ஒங்கூட நாத்து நடவ வேணும்
நாகரீகம் பாத்தா அட நம்ம வயிறு காயும்


வேணான்டி அன்னக்கிளி வேற வேல ஊட்டுலபாரு

வேணான்டி அன்னக்கிளி வேற வேல ஊட்டுலபாரு


வெள்ளாம நமக்கு வேணாம்
வெவசாயம் ஒண்ணுவேணாம்
வெளச்சலும் சரியில்ல
வரவுங்கூட ஒன்னுமில்ல
விட்டுப்புட்டு போயிடலாம்
வேற வேல பாத்துக்கலாம்
வெளி நாடுபோயி அங்க வேல கீல பாப்போம்
வெள்ளக்காரங்கபோல நாம வசதியாக இருப்போம்
அச்சச்சோ ஆசமச்சான்அப்படியெல்லாம் சொல்லாதீங்க!
அச்சச்சோ ஆசமச்சான் அப்படியெல்லாம் சொல்லாதீங்க!

வெள்ளாம அழிஞ்சுபோகும்
வெவசாயம் நின்னுபோகும்
விட்டுபுட்டு போயிவிட்டா
வெட்டவெளியாகி போகும்
வெவரமில்லாம பேசாதீங்க
வெளுத்ததெல்லாம் பாலுமில்ல
வெள்ளாமையில் உள்ள சுகம்
வேறெதிலும் அங்கேயில்ல
வெளிநாட்டு பேச[ஷ]ன் அது எல்லாமே மோசம்
வேல இல்லாம போனா அட வெவகாரமாகிபோகும்


மாமிபெத்த மரிக்கொழுந்தே ஏம்மனசுகேத்த மகிழம்பூவே
மாமிபெத்த மரிக்கொழுந்தேஏம்மனசுகேத்த மகிழம்பூவே

மனகண்ண தொறந்துப்புட்ட
மனசக்கூட உசுப்பிவிட்ட
மடப்பய மண்டையில
மதியைக்கூட தூண்டிவிட்ட
காலக்கொஞ்சங் காட்டு நாதண்ட கொலுசுபோட
காத்திருக்கேன் வாடி நாமசோடிசேந்து போவ


அப்படிபோடு கருத்தமச்சான் நாஞ்சொன்ன கருத்தக்கேட்ட
அப்படிபோடு கருத்தமச்சான் நாஞ்சொன்ன கருத்தக்கேட்ட

சும்மாட்ட தலையில் வச்சி
சுமந்துவாரேங் கஞ்சிக்கூட
சோடி சேந்து போய்வரலாம்
சுகமாக வாழ்ந்திடலாம்
சேந்து நாமபோவோம் அந்த
சேத்தில் இறங்கி உழுவோம்
சோந்து போகமாட்டோம் எப்பவும்
சுறுசுறுப்பா இருப்போம்.....
[டிஸ்கி;;;நாட்டுப்புற பாட்டப்போல படிச்சுப்பாருங்க
நல்லாயிருந்த கருத்தயும் ஓட்டையும் போடுங்க!]


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

41 கருத்துகள்:

  1. ஆமா நீங்க " கமெண்ட் கவியரசி " உண்மையாவா ...

    பதிலளிநீக்கு
  2. நாட்டுப்புற ஸ்டைல்ல படிக்கறப்போ இன்னும் சுவையா இருக்குங்க... பசுமை என்றும் குளிர்ச்சிதரும்...

    பதிலளிநீக்கு
  3. கமெண்ட் கவியரசியா சொல்லாவேயில்ல.
    அதாருங்க சொன்னது மைதீஸ் உங்கக்கிட்ட.

    /mythees கூறியது...
    ஆமா நீங்க " கமெண்ட் கவியரசி " உண்மையாவா//

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியாய்
    இருக்கு, அருமை!!! வாழ்த்துக்கள் "கவியரசி"

    பதிலளிநீக்கு
  5. இதை பரவை முனியம்மா ஸ்டைலில் படிச்சிப்பாத்தேன். பாட்டு சூப்பர்


    அடடா...எங்கையோஓஓஓஓ போய்டிங்க ( சின்னி ஜெயந்த் மாதிரி படிங்க )

    பதிலளிநீக்கு
  6. / க.பாலாசி கூறியது...
    நாட்டுப்புற ஸ்டைல்ல படிக்கறப்போ இன்னும் சுவையா இருக்குங்க... பசுமை என்றும் குளிர்ச்சிதரும்...
    /

    ரொம்ப மகிழ்ச்சி பாலாஜி. சுவைச்சி படித்தமைக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  7. நாட்டு புற பாட்டில், கருத்தும் மெட்டும் நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  8. //nidurali கூறியது...
    good post with suitable pictures./

    மிக்க நன்றி. ரொம்ப நாளைக்கு பிறகு வருகைத்தந்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  9. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    கருத்துக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியாய்
    இருக்கு, அருமை!!! வாழ்த்துக்கள் "கவியரசி.

    எப்போதுமே குளிர்சியாகயிருக்க நாமளும் உழைக்கனும்
    இல்லையா சை கொ ப.
    [அதுக்காக என்னை மாடு ஓட்டச்சொல்லுரிங்களான்னு கேக்குவீகபோல] முனங்குவது கேட்குது.

    மிக்க நன்றி பரோட்டா. கவியரசியா. நீங்களுமா நடக்கட்டும் நடக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  10. நாட்டுபுற‌ பாட‌ல் ஸ்டையில் ப‌டித்தால் இனிமையாக‌ இருக்கிற‌து.. அதேப்போல் நாட்டுபுற‌ பாட‌ல்க‌ளில் உள்ள‌ க‌ருத்தும் இதில் மிளிர்கிற‌து... வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  11. ஜெய்லானி கூறியது...
    இதை பரவை முனியம்மா ஸ்டைலில் படிச்சிப்பாத்தேன். பாட்டு சூப்பர்.//

    அச்சச்சோ நான் கேட்கவேயில்லியே!
    எப்புடிப்பாடிப்பாத்தீங்கன்னு நானும் கேட்க
    அப்படியே ரெக்காட் பண்ணி அனுப்புங்க ஜெய்லானி அண்ணாஆஆஅஆ

    /அடடா...எங்கையோஓஓஓஓ போய்டிங்க ( சின்னி ஜெயந்த் மாதிரி படிங்க )//

    ரொம்ப ஒயரத்துல கேக்குரமாதரியிருக்கு சத்த சொல்லுங்கோ.

    அப்படியேஏஏஏஏஏஏஏஏஎ படிச்சிட்டோம்..

    பதிலளிநீக்கு
  12. //செக்கச் செவந்தமேனி யானாலும்
    செல்லச்சீமாட்டியா பொறந்தாலும்
    செத்துப்புட்ட மண்ணுக்குதான்//

    மண்தான் கடைசியில் ஜெய்கிறது

    கிராமத்து வாசனையோடு படிக்கும்(பாடும்) போது இன்னும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. /Chitra கூறியது...
    நாட்டு புற பாட்டில், கருத்தும் மெட்டும் நல்லா இருக்குங்க. பாராட்டுக்கள்!/

    பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றிங்க தோழிமேடம்..

    பதிலளிநீக்கு
  14. /நாடோடி கூறியது...
    நாட்டுபுற‌ பாட‌ல் ஸ்டையில் ப‌டித்தால் இனிமையாக‌ இருக்கிற‌து.. அதேப்போல் நாட்டுபுற‌ பாட‌ல்க‌ளில் உள்ள‌ க‌ருத்தும் இதில் மிளிர்கிற‌து... வாழ்த்துக்க‌ள்./

    அப்படியா ரொம்ப சந்தோஷம் ஸ்டீபன்
    வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. சுவையான நாட்டுப்புற பாடல்
    அருமை....அந்த சுண்டக்கஞ்சி
    வார்த்தைதான் இடிக்கிறது....

    பதிலளிநீக்கு
  16. இங்குட்டு போயிபாருங்க

    http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html

    பதிலளிநீக்கு
  17. சொந்த வீட்டையும் சோறு போடும் நிலத்தையும் விட்டு, இப்படி காசுக்காகவும் ஊர் வாய மூடவும் ஊர் ஊரா அலையறத நினச்சா மனசில இரத்தம் வடிகிறது.

    மண் வெட்டிய தூக்கிக்கிட்டு இப்பவும் காட்டுல போயி வேலை செய்யணுமுன்னு ஆசையாத்தான் இருக்கு. ம்ம்ம்...!

    பதிலளிநீக்கு
  18. /மனகண்ண தொறந்துப்புட்ட-
    மனசக்கூட உசுப்பிவிட்ட
    மடப்பய மண்டையில-
    மதியைக்கூட தூண்டிவிட்ட.

    காலக்கொச்சங் காட்டு -
    நாதண்ட கொலுசுபோட.
    காத்திருக்கேன் வாடி -
    நாமசோடிசேந்து போவ//

    வார்த்தைகள் அம்மாடி சூப்பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    எப்படிபா இப்படியெல்லாம் நடத்துநடத்து ஜெய்லானி சொன்னது ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
    அடடா...எங்கையோஓஓஓஓ போய்டிங்க ( இத கவுண்டமணி மாதிரி படிங்க )//

    அந்த மகாதான் நான்

    பதிலளிநீக்கு
  19. நல்ல கருத்துள்ள வரிகள்.பாராட்டுக்கள்.நாட்டுபுறப்பாடல்கள் என்று ஒரு தொகுப்பு வைத்துக்கொள்ளலாம்.படங்கள் இணைத்தது பாடலுக்கு இனிமை.கண்ணிற்கும் விருந்து.

    பதிலளிநீக்கு
  20. நல்ல தலைப்பு மலிக்கா! பாட்டும் நல்லா இருக்கு. இப்ப அந்த சோறு போடும் நிலங்களெல்லாம் கூறு போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்று மாறும்?

    பதிலளிநீக்கு
  21. அக்கா நாட்டுப்புற பாட்டுலயும் கலக்குரீங்க.ரொம்ப நல்லா இருந்தது அந்த மெட்டில் படித்த போது.மிகவும் அழகான படங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்த இடைவெளிக்கு காரணம் கொஞ்சம் வேலை பிசி தான். நான் வரலைன்னா என்ன அதான் இவ்வளவு வரவேற்பு இருக்குல்ல. அதுமட்டுமின்றி கொஞ்ச நாட்களாக ஒரு அரை லூசுக் கவிஞனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறேன். இந்த லிங்கை பாருங்க.
    http://kavimathy.blogspot.com/2010/03/blog-post.html

    நீங்களும் உங்க பங்குக்கு நாலு காட்டு காட்டுங்க. உங்க தோழிகளுக்கும் சொல்லி ரெண்டு போடச்சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் நாட்டுப்புறப்பாடல் அருமை...
    படங்கள் கிராமத்து வாசனையை அப்படியே எடுத்து இயம்புகின்றன.

    நல்லாயிருக்கு... அப்புறம் என்ன தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  24. அக்கா...மச்சான் கருத்த மச்சான் மட்டும் இல்ல நல்ல கருத்து மச்சானும் கூட...கிராமத்துக்கு போய் வரப்புல கால் பதிச்சு காத்து வாங்கிய அனுபவம்...இன்னும் அசத்துங்க...வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  25. நாட்டுப்புற மெட்டில் மிக அழகாக வந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

    உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  26. //காலக்கொச்சங் காட்டு -
    நாதண்ட கொலுசுபோட//

    'காலக் கொ'ஞ்'சங்காட்டு'

    இரசிக்கும்படியான மெட்டில்
    கருத்துடன் இருந்தது பாடல்.

    பதிலளிநீக்கு
  27. தொடர்பதிவில் வந்து கலந்து
    கொள்ளுங்கள்.

    http://nizampakkam.blogspot.com/2010/04/kathaikkaalam.html

    பதிலளிநீக்கு
  28. நல்லாருக்கு மலிக்காக்கா.... ஊருல நெசமாவே மச்சான் கூட வெவசாயம் பண்ணிட்டு இருக்கீகளோ..... அப்புடியே பீல் பண்ணி எழுதுனாப்புல தெரியுது.... :-)...

    சில எழுத்துப்பிழைகள் இருக்குனு நினைக்குறேன்... சரி செய்யவும்....

    பதிலளிநீக்கு
  29. S Maharajan கூறியது...
    //செக்கச் செவந்தமேனி யானாலும்
    செல்லச்சீமாட்டியா பொறந்தாலும்
    செத்துப்புட்ட மண்ணுக்குதான்//

    மண்தான் கடைசியில் ஜெய்கிறது

    கிராமத்து வாசனையோடு படிக்கும்(பாடும்) போது இன்னும் அழகாக இருக்கிறது..

    மிகுந்த சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.. S Maharajan

    பதிலளிநீக்கு
  30. மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
    சுவையான நாட்டுப்புற பாடல்
    அருமை....அந்த சுண்டக்கஞ்சி
    வார்த்தைதான் இடிக்கிறது....

    வருகைக்கு மிக்க நன்றி மணி.
    இப்ப சுட்டுவிட்டோமுல்ல..


    /mythees கூறியது...
    இங்குட்டு போயிபாருங்க

    http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html

    ஆமால்ல /mythees
    ஜெய்லாஆஆஆஆஆஆஆஆணி

    பதிலளிநீக்கு
  31. பாலமுருகன் கூறியது...
    சொந்த வீட்டையும் சோறு போடும் நிலத்தையும் விட்டு, இப்படி காசுக்காகவும் ஊர் வாய மூடவும் ஊர் ஊரா அலையறத நினச்சா மனசில இரத்தம் வடிகிறது.

    மண் வெட்டிய தூக்கிக்கிட்டு இப்பவும் காட்டுல போயி வேலை செய்யணுமுன்னு ஆசையாத்தான் இருக்கு. ம்ம்ம்...!//

    ஆனா முடிய இல்ல பாலா. என்ன செய்ரதுன்னு மனம் சொல்லுது.
    பசுமையும் பசியும் போட்டாபோட்டிபோடுது. தன்னைப்பார் தன்னைப்பார்ன்னு..

    மிக்க நன்றி பாலா..




    சந்தோஷிமகா கூறியது...
    /மனகண்ண தொறந்துப்புட்ட-
    மனசக்கூட உசுப்பிவிட்ட
    மடப்பய மண்டையில-
    மதியைக்கூட தூண்டிவிட்ட.

    காலக்கொச்சங் காட்டு -
    நாதண்ட கொலுசுபோட.
    காத்திருக்கேன் வாடி -
    நாமசோடிசேந்து போவ//

    வார்த்தைகள் அம்மாடி சூப்பரப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    எப்படிபா இப்படியெல்லாம் நடத்துநடத்து ஜெய்லானி சொன்னது ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
    அடடா...எங்கையோஓஓஓஓ போய்டிங்க ( இத கவுண்டமணி மாதிரி படிங்க )//

    அந்த மகாதான் நான்//

    அச்சோஓஓஓஒ அடுத்த ஜெய்லானியா!!!!

    அங்கேயே உங்க குசும்பு தாங்காதே மகா இங்கேயுமா நடக்கட்டும் நடக்கட்டும்.

    ரிப்பீஈஈஈட்டு.. நன்றி சந்தோஷி..

    பதிலளிநீக்கு
  32. asiya omar கூறியது...
    நல்ல கருத்துள்ள வரிகள்.பாராட்டுக்கள்.நாட்டுபுறப்பாடல்கள் என்று ஒரு தொகுப்பு வைத்துக்கொள்ளலாம்.படங்கள் இணைத்தது பாடலுக்கு இனிமை.கண்ணிற்கும் விருந்து.//

    மிக்க நன்றி ஆசியாக்கா அன்பான கருத்துக்கும் அழகான வருகைக்கும்.
    இனி அப்படியே செய்வோமுக்கா.




    /Mrs.Menagasathia கூறியது...
    நல்லாயிருக்கு மலிக்கா//

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மேனகா...

    பதிலளிநீக்கு
  33. 'கவியரசி' மலிக்காவுக்கு
    சோறு போடும் சேறு... தலைப்பிலான இக்கவிதை... sorry ..! நாட்டுப்புறப்பாடல்.... மிகவும் அருமை...

    இப்பாடலை நானும் ராகத்துடன் பாடிப் பார்த்தேன்... simply said superb...!

    சிந்தித்து பார்கிறேன்... How is it possible..?
    எப்படி தாங்கள், சகல கலை வித்தகராக.... அதாவது 'சகலகலாவித்தகர்' ராக விளங்குகிறீர்கள்..

    வெறும் பொழுதுபோக்கிற்கு பாடும் பாடலாக இல்லாமல்... அதில் ஆழமாய், அழுத்தத்திருத்தமாய் ஓர் நல்ல கருத்தை - ஓர் பாடத்தை அறிவுறுத்தியுள்ளீர்கள்....

    வெளிநாட்டு மோகத்தையும் - நம் நாட்டிற்கு விவசாயமே உயிர்நாடி என்பதை தெளிவாகவும், ராகம் மாறாமல், கிராம மொழியை அப்படியே...
    எப்படி... இப்படி...

    என்னமப் போங்க...!

    "விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும்" என நம் ஊரில் சொல்வதை உணர்த்தும் சிறந்த கவிதை..!... sorry ..! நாட்டுப்புறப்பாடல்....

    மொத்தத்தில்....

    நீரோடையில் கவிதை, உரைநடை, கதை ...
    கலைசாரலில் சமையல்குறிப்பு, வீட்டு உபயோக டிப்ஸ், கடி ஜோக்ஸ்..... இனிய பாதையில் ஆன்மீகம், ஒழுக்க நெறிமுறைகள்...
    இப்போது நாட்டுப்புறப்பாடல்...

    இப்படி பன்முகப் பரிமாணங்களை ஒருமித்த 'கவியரசி' மலிக்காவை 'சகலகலாவித்தகர்' என்றழைப்போம்...

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  34. இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    நல்ல தலைப்பு மலிக்கா! பாட்டும் நல்லா இருக்கு. இப்ப அந்த சோறு போடும் நிலங்களெல்லாம் கூறு போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்று மாறும்?//

    மாறும் மாறும் என்று நினைப்போம்.

    நன்றி நிஜாம்..

    8 ஏப்ரல், 2010 5:11 pm

    கொயினி கூறியது...
    அக்கா நாட்டுப்புற பாட்டுலயும் கலக்குரீங்க.ரொம்ப நல்லா இருந்தது அந்த மெட்டில் படித்த போது.மிகவும் அழகான படங்கள்.நன்றி
    //

    மிக்க நன்றி கொயினி வருகைகும் கருத்துக்கும்..

    பதிலளிநீக்கு
  35. இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    இந்த இடைவெளிக்கு காரணம் கொஞ்சம் வேலை பிசி தான். நான் வரலைன்னா என்ன அதான் இவ்வளவு வரவேற்பு இருக்குல்ல. அதுமட்டுமின்றி கொஞ்ச நாட்களாக ஒரு அரை லூசுக் கவிஞனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறேன். இந்த லிங்கை பாருங்க.
    http://kavimathy.blogspot.com/2010/03/blog-post.html

    நீங்களும் உங்க பங்குக்கு நாலு காட்டு காட்டுங்க. உங்க தோழிகளுக்கும் சொல்லி ரெண்டு போடச்சொல்லுங்க.

    அங்கேபோய் பார்த்தேன் நிஜாம்,ஆனால் அங்கு பதிவில்லை எடுத்துட்டாங்க கருத்துரைகள்மட்டும் இருந்தது..

    8 ஏப்ரல், 2010 5:14 pm

    சே.குமார் கூறியது...
    உங்கள் நாட்டுப்புறப்பாடல் அருமை...
    படங்கள் கிராமத்து வாசனையை அப்படியே எடுத்து இயம்புகின்றன.

    நல்லாயிருக்கு... அப்புறம் என்ன தொடருங்கள்...

    மிகுந்த மகிழ்ச்சி குமார். மிக்க நன்றி..

    8 ஏப்ரல், 2010 8:50 pm

    பதிலளிநீக்கு
  36. seemangani கூறியது...
    அக்கா...மச்சான் கருத்த மச்சான் மட்டும் இல்ல நல்ல கருத்து மச்சானும் கூட...கிராமத்துக்கு போய் வரப்புல கால் பதிச்சு காத்து வாங்கிய அனுபவம்...இன்னும் அசத்துங்க...வாழ்த்துகள்....//

    கிராமத்து நினைவுக்கே போய் காத்துவாங்கியதுக்கு மகிழ்ச்சி கனி மிக்க நன்றி..



    //அக்பர் கூறியது...
    நாட்டுப்புற மெட்டில் மிக அழகாக வந்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

    உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    மிக்க நன்றி அக்பர் பதிவும் போட்டுட்டேன். கருதுப்போடதன் லேட்டாயிடுத்து.


    //பாத்திமா ஜொஹ்ரா கூறியது...
    நல்லாயிருக்கு.
    அருமை.//

    நன்றி பாத்திமா.

    பதிலளிநீக்கு
  37. NIZAMUDEEN கூறியது...
    //காலக்கொச்சங் காட்டு -
    நாதண்ட கொலுசுபோட//

    'காலக் கொ'ஞ்'சங்காட்டு'

    இரசிக்கும்படியான மெட்டில்
    கருத்துடன் இருந்தது பாடல்./

    மிக்கநன்றி நிஜாமுதியண்ணா.

    9 ஏப்ரல், 2010 9:11 pm

    //NIZAMUDEEN கூறியது...
    தொடர்பதிவில் வந்து கலந்து
    கொள்ளுங்கள்.

    http://nizampakkam.blogspot.com/2010/04/kathaikkaalam.html//

    மிக்க நன்றிண்ணா போடுட்டுட்டேன்..

    9 ஏப்ரல், 2010 9:12 pm

    /அன்புத்தோழன் கூறியது...
    நல்லாருக்கு மலிக்காக்கா.... ஊருல நெசமாவே மச்சான் கூட வெவசாயம் பண்ணிட்டு இருக்கீகளோ..... அப்புடியே பீல் பண்ணி எழுதுனாப்புல தெரியுது.... :-)...

    //

    இல்லை அன்புத்தோழன்
    அதான் இந்த ஆசை வயலில் இறங்கி பார்க்கனும் ஒருதடவையாவது..வேலைசெய்ய.


    சில எழுத்துப்பிழைகள் இருக்குனு நினைக்குறேன்... சரி செய்யவும்....//

    மிக்க நன்றி திருத்திவிட்டேன்..

    10 ஏப்ரல், 2010 3:35 pm

    பதிலளிநீக்கு
  38. Kanchi Murali கூறியது...
    'கவியரசி' மலிக்காவுக்கு
    சோறு போடும் சேறு... தலைப்பிலான இக்கவிதை... sorry ..! நாட்டுப்புறப்பாடல்.... மிகவும் அருமை...//

    முதலில் சாரி லேட்டான பதிலுக்கு..மிக்க நன்றி

    //இப்பாடலை நானும் ராகத்துடன் பாடிப் பார்த்தேன்... simply said superb...!

    சிந்தித்து பார்கிறேன்... How is it possible..?
    எப்படி தாங்கள், சகல கலை வித்தகராக.... அதாவது 'சகலகலாவித்தகர்' ராக விளங்குகிறீர்கள்..//

    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை முரளி. மனதின் ஆழத்தில் சில விசயங்கள் புதைந்துகிடக்கும் நடந்தான்தது நடக்காதது என அதெல்லாம் இப்போது கவிதை வரிகளாய் வந்து விடுகிறது அது

    //வெறும் பொழுதுபோக்கிற்கு பாடும் பாடலாக இல்லாமல்... அதில் ஆழமாய், அழுத்தத்திருத்தமாய் ஓர் நல்ல கருத்தை - ஓர் பாடத்தை அறிவுறுத்தியுள்ளீர்கள்....

    வெளிநாட்டு மோகத்தையும் - நம் நாட்டிற்கு விவசாயமே உயிர்நாடி என்பதை தெளிவாகவும், ராகம் மாறாமல், கிராம மொழியை அப்படியே...
    எப்படி... இப்படி...//

    எனக்கு கிராம வாசமும் கிரமிய பேச்சியும் ரொம்ப பிடிக்கும் அதை அப்படியே மனதில் நிறுத்தி எழுதிப்பார்த்தேன் நான் எழுதும்போது இல்லாத பிரம்பிப்பு இந்தனுிபூட்டங்கலீன் மூலம் அனைவரும் சொல்லியபோது ஆனந்தம் அலைப்பாயிகிறது எனக்குள்.

    //என்னமப் போங்க...!

    "விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும்" என நம் ஊரில் சொல்வதை உணர்த்தும் சிறந்த கவிதை..!... sorry ..! நாட்டுப்புறப்பாடல்....

    மொத்தத்தில்....

    நீரோடையில் கவிதை, உரைநடை, கதை ...
    கலைசாரலில் சமையல்குறிப்பு, வீட்டு உபயோக டிப்ஸ், கடி ஜோக்ஸ்..... இனிய பாதையில் ஆன்மீகம், ஒழுக்க நெறிமுறைகள்...
    இப்போது நாட்டுப்புறப்பாடல்...

    இப்படி பன்முகப் பரிமாணங்களை ஒருமித்த 'கவியரசி' மலிக்காவை 'சகலகலாவித்தகர்' என்றழைப்போம்...

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்...
    காஞ்சி முரளி....
    //

    வாழ்த்துக்களூக்கும் எனக்கு பட்டமெல்லாம் தந்து என்னை
    ஊகத்திற்க்கு மேல் ஊக்கம்கொடுத்து.

    இன்னும் எனக்குள் எழும் உணர்வுகளை எழுத்துக்களாக்க உற்சாகத்தை அள்ளித்தரும் வார்தைகளாய் கருத்துக்கள்மூலம் ஊக்கப்படுத்தும் நட்ப்புக்கு எனம் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது