நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஜாக்பாட் அடித்த கவிதை

 

அன்பின் நெஞ்சங்களுக்கு. 
எனது கவிதை ஒன்று ஜாக்பாட்டில் படிக்கப்பட்டு படிக்கப்பட்டுக்கவிதையின் படிவத்தில் நடிகை சிம்ரனின் ஆட்டோகிராப்பும் வாங்கியதாம்.. சந்தோஷம்..


 இதனை ஜாக்பாட்டில் வாசித்த திருமதி சித்ரா தினாகரன் இன்றுகாலை போன் செய்து சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

எனது கவிதையான “முதியோர் இல்லம்” 9-2-2009 அன்று தமிழ்குடும்பம் டாட்காம்மில் வெளிவந்திருந்தது. அதை திருமதி சித்ரா தினகரன் போனமாதம் படித்துவிட்டு. அதனை தான் கலந்துகொண்ட ஜெயா டிவி யில் ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சியில் வாசித்துள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது என சிம்ரன் உள்பட அங்கிருந்தவர்களும் பாராட்டினார்களாம்

கடந்த ஞாயிறு அன்று ஒளிப்பரபானதில் [நாந்தான் பார்க்கமுடியவில்லை கடை திறப்பு அன்றுதானே] அவர்களின் அப்பார்மெண்டில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்டியதாக சித்ரா சொல்லி சந்தோஷப்பட்டார்கள். அதனோடு தான் கொண்டு சென்றிருந்த கவிதை பேப்பரில் ஆட்டோகிராப் வாங்கி லாமினேஷ்ன் செய்து வைத்துள்ளதாகவும் கூறினார்கள்..


//மல்லிகா மேடம்  முதியோர் இல்லம் கவிதை   பேப்பர் மேலே சிம்ரன்  ஆடோக்ஹ்ரப் வாங்கி அதை லாமினட்சியன் செய்துவிட்தின்  பயனாக என்றும் யாபகம் இருக்கும் .நீங்கள் அவசியம் ஜாக்பாட் 513 எபிசொட் பாருங்கள்

//மேடம் நான் உங்கள் கவிதை ஒன்றை ஜெயா T V  ஜாக்பாட் ப்ரோக்ராமில் படித்தின் சிம்ரன் சொன்னார் மிகவும் நன்றாக இருக்கு என்றர். நான் தமிழ்குடும்பம்.காம் இல் இருந்து எடுத்தது என்று கூறினேன் .NEENGAL  ஜாக்பாட் ஜெயா T V 9.9.12 TIME  8.9P.M.PARUNGAL  ///இது சித்ராவின் மகள் ஐஸ்வரியா வரைந்த டிராயிங்


எனது கவிதை அவருக்கும் பிடித்து அதனை பலருக்கும் பிடிக்கும்படி செய்த சித்ரா தினகரன் அவர்களுக்கும் எனது கவிதையின் தாயிடமான தமிழ்குடும்பத்திற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.  .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது