நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆண்பிள்ளைங்களே! உசாரு! உசாரூ!
1-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும்டும் டும். நிறுத்துங்கடா, சத்தம் வந்த திசையை நோக்கினால்!!!!!!!! எதிரே நம்ம ஹீரோ.உடனே நம்ம ஹீரோயினி மாலையை கழட்டி வீசிட்டு ஸ்லோமோசனில் பறந்து வருவா.
வெளியில் பைக்கோ காரோ நிற்கும் ஏறி பறந்து போயிடுவாங்க

பாவம்! அந்த நிமிசம்வர தன்னோட மனைவியாகப்போகிறவ அவதானென்ற கனவோடு அங்கே காத்திருந்த, உப்புக்கு சப்பானியான மாப்பிள்ளை.
[ என்னங்கடா இது, கொஞ்சங்கூட பேசல, லேசாக்கூட தொடல, பழககூட விடல, இப்படி ஓட்டிட்டாளே என்ன செய்யிறதுன்னு. சாலமன் பாப்பையா போல மனசுக்குளேயே பேசிக்கிட்டு] பேஏஏஏஏஏஏ என்று முழித்துக்கொண்டிருப்பான்.

பேக்ரவுண்ட் பாடல்

”போறாளே பொட்டபுள்ள
என்னக்கூட பார்க்கவில்ல
மாலய கலட்டி இங்க வீசிவிட்டு
கண்ணீரும் கம்பலையுமா
என்னவிட்டு
நானிங்கே நிக்கிறேனே
வெக்கங்கெட்டு”

2-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். நிறுத்துங்கப்பா.
சத்தம் வந்த திசையை நோக்கினால் எதிரே நம்ம ஹீரோவின் நண்பனோ, நண்பியோ நிற்பாங்க. அப்படியே அண்ணாந்து பாப்பாங்க ஃபிளாஷ்பேக் ஓடும்.
நம்ம ஹீரோயினி மாலையைக்கூட கிளட்டாமல் கதறி ஓடிவருவாள்.
அங்கே வந்தவங்ககூட அழுதுகொண்டே கிளம்பிடுவாள் திரும்பிக்கூட பாக்காம.

பாவம்! அதே இடத்தில் சமஞ்சபொண்ணுபோல திரு திரு முழிச்சிக்கிட்டு [தலையில் கைவைத்தபடி என்ன கொடுமைங்க ஐய்யரே! இப்படி நாவொருத்தன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன் என்ன கண்டுக்காம அவபாட்டுக்கு போறாளே என சந்தரமுகி பிரவுபோல், ஐய்யரிடம்கேட்பதுபோல் நினைத்து.] பேக்கோவாட்டம் பேஏஏஏஏஏஏஎ என அமர்ந்திருப்பான் மாப்பிள்ளை.

பேக்ரவுண்ட் பாடல்

”போடிப் போடி புண்ணாக்கு
நீ
போயிட்டா தள்ளிரும்
என்நாக்கு
கிருக்கு எனக்கு புடிக்கும்
நீ இல்லாடித்
தல வெடிக்கும்

போடிப் போடி புண்ணாக்கு
நீ போனாக்க தொடருவேன்
வழக்கு”...

3-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். இப்போது சத்தமே இல்லாமல் ஹீரோ வருவார் அவரைக்கண்டதும் பெண்ணின் தந்தை கைகட்டி வாய்பொத்தி ஒதுங்கிடுவார். ஊர்காரங்களே எழுந்து மரியாதை தருவாங்க.

ஹீரோ மணமேடைக்கு எதிரே நின்றதும் ஐயர் தாலியெடுத்து உதவாக்கரை மாப்பிள்ளையிடம் தராமல் எதிரே நிற்கும் ஹீரோவிடம் கொடுப்பார். அம்மணியும் இறங்கி வந்து அழகாய் தாலியை கழுத்தில்வாங்கிட இப்போது மீண்டும் கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும்.

அங்கேயும் அப்பாவி மாப்பிள்ளை அய்யனாருக்கு நேந்துவிட்ட அப்புரானி ஆடுபோல்.[ஸ்சொய்யின் இந்த ரையிங் அயம் ஸ்சொய்யிங் இந்த ரையின் என வடிவேலு பாணியில் மனசுக்குள் சொல்லிக்கொண்டு ]நிற்பான்

பேக்ரவுண்ட் பாடல்

”போகுதே போகுதே
என் பச்சகிளி பறந்துதான்
நானும் இங்கே இருப்பதே
அதுக்குதெரியலையே
என்னப் பாக்கவில்லையே

மறந்துபோகுதே
என்னைய
உதறிப்போகுதே

இன்னும் நெறய சீன் இருக்குதுங்கோ அதெல்லாம் உங்களுக்கே தெரியும் சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு சொல்லிருக்கேன் புரிஞ்சதன்னோ?

இதிலிருந்து என்ன தெரியுது, கல்யாணம் ஆனாலும், ஆகலைன்னாலும்,
ஆகமொத்தத்தில் ஆண்பிள்ளைகளா, லட்சணமா, பெயருக்கு மட்டும் மண்டய மண்டய ஆட்டிக்கிட்டு [உப்புக்கு சப்பானியா. அப்புரானியா. அப்பாவியா. பேக்கோவா.இருங்கோன்னு] இருக்காங்கன்னு தெரியுது.

எத்தன படத்தில பாத்திருப்போம் இப்படியெல்லாம் நடக்குறத்த,
மணமேடை வருகிற வரைக்கும் எதுவும் சொல்லமாட்டாக. அதேபோல கல்யாண காலைல வரைக்கும் காதல சொல்லமாட்டாக. மணமேடையிலத்தேன் சொல்லுவாக, இல்லையின்னா நடுசாமத்துல ஓடிடுவாக.[இதயே இப்போ ஃஃபாலோ பண்ணுறாங்களாம் ஃபாலோவர்ஸ்கன்னு கேள்வி] [அச்சோ நீரோடை ஃபாலோவர்ஸ்கள் அல்லங்கோஅவங்களெல்லாம் ரொம்ப நல்லவங்கோ]

இதுல பாவம் இதபோல அப்பாவி மாப்பிள்ளைகளும், பெத்தவங்களும். இதமாதரி எங்கதான் இருப்பாங்களோ. தலையில துண்டமட்டுந்தேன் போடல, சிலதுகளில் அதுவும் போட்டதா நினைவு.

படமாலூஊஊஉம். நிஜமானாலூஊஊஊம். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளைதானே? இதல்லாம் ஆருங்க கேட்குறது,,,,,,,,
என்ன நான் சொல்லுரது புரியுதா!!!!!!!!!!!!!!!!!!!!! .

ஏதோ நம்மாளா முடிஞ்சது [பத்தவெச்சிட்டோம்] என்னயிருந்தாலும் மனசு கேக்கல அதேன் இப்படி. சொல்லுரத சொல்லியாச்சி. திருவிழாவுல காணாப்போன புள்ளைகளாட்டம். தர்க்கு புர்க்குன்னு முழிச்சிக்கிட்டு நிக்காமா சட்டுபுட்டுன்னு யோசிங்க.

//இளிச்சவாய்களாக இருந்தா எலிகூட எட்டி ஒதைக்குமாம்...

”எலே அங்கவை”
“என்னங்கம்மணி.
எல்லாத்தையும் அங்கவச்சிட்டியா”
தோ முடிஞ்சிட்டேங்கம்மணி”
”நீங்க”
நான் இங்க பொங்கவச்சிட்டேன் தோ வாரேன்ன்ன்..

[டிஸ்கி.. கவித கதயின்னு போய்கிட்டேயிருக்குதேன்னு நெனச்சி, அதேன் இப்புடி தமாஸ்ல இறங்கிட்டோம். ”அட இது தமாஸா? என்ன கர்மம்டா கடவுளேன்னு! கூட்டத்துல சல சலக்குது..


நம்புங்கோ தமாஸுக்குத்தேன்.
தமாஸா சொன்னாவாச்சிம்??????????????.]
 [ஹா ஹா வில்லங்கத்த சொல்லிபுட்ட வெவரமான ஆளுபுள்ள]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது