நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆவதும் அழிவதும் உன்னாலே!


காரி உமிழ்ந்தேனே
கண் கண்ட
காட்சியின்  முன்னிலையில்
கடுங்சொற்கள் கிடைத்தும்
கட்டுக்குள்ளானது என்னிலையில்

பெண்ணே
உன்னாலும்தான்-பல
பழி பாவங்கள் தொடர்கிறது
கொலைகளும்
கற்பழிப்புகள் நிகழ்கிறது

பெண்ணென்பவளே
பெரும் பொக்கிஷம்
அதை பாதுகாக்க தவறினாலோ
அதுவே அவளுக்கு
ஆழகாலவிசம் என்பது
உலகறிந்த விசயம்
ஆனாலது உனக்கு
விளங்க மறுப்பதுதான்
எனக்கு ஆதங்க ஆவேசம்

பூவையரே உன் மேனி
புற்பூண்டோ! தெருச்செடியோ
போவதும் வருவதும்
பொழுது போக்கிற்காக
மேய்ந்துவிட்டு போக!

பெண்களுக்கென
மறைவிடங்கள்
கொடுக்கப்படிருந்தும்
தனியிடங்கள்
தடுக்கப்படிருந்தும்

பொதுயிடத்தில் நீ குளித்து
பெண்ணே நீ நடந்து வருகையிலே
எதிர்வரும் கண்களுகெல்லாம்
ஏகபோக விருந்தாகிறாயே
எல்லோருர் முன்னிலையில் உடைமாற்றி
எதிராளியின் மனதின்
ஏக்கத்திற்கு எண்ணையுற்றுகிறாயே!


ஆணை ஏன் குற்றம் சொல்ல
பெண்ணே உன் நடத்தை
சரியில்லையெனும்போது
சந்தர்ப்பம் சருக்கிவிட்டால்
சகதியென்ன சந்தனமென்ன
சத்தியவானும் சாத்தன்தான்

நீரில் நனைந்த தேகம்
நிர்கதியாய் திறந்து கிடக்க
அதை
நேரில் காணும் கண்களுக்கோ
நெசவு செய்வதுபோல் கிடந்தடிக்க
ஆசைக்கு தூபம்போடும்
அடியே உனது செயல்
அடுத்தோரையும் - பாவத்திற்க்கு
அழைக்குதே உனது நிலை

வாழைக் குமரிக்கும்
வனப்பு கோதைக்கும்
துளியும் வெட்கமில்லை
வளர்த்த வளர்ப்புகளும்
வளர்க்கும் வளர்ப்புகளும்
வர வர சரியேயில்லை - இதில்
ஆணைக் குற்றம் சொல்வதில்
நியாயமேயில்லை

நாய்களுக்குதான்
ஆறறிவில்லை
நடுரோட்டிலது
பிறந்தமேனியாக திரிந்தாலும்
தவறில்லை

"ஆனால்"

பெண்ணே
உனக்கு அறிவுண்டு
இருந்தும் பயனில்லை
திருமேனி திறந்துகிடந்தால்
உனக்குத்தானே
தீராத தொல்லை
தெருவில் வருவோர் போவோர்
தீண்டினால் கேட்பார் யாருமில்லை

ஈக்கள் எங்கு மொய்க்கும்?
இனிப்பிருக்கும் இடத்தினிலே
இல்லை
கழிவிருக்கும் தளத்தினிலே

நீ
கழிவாக வேண்டியயிடத்தில்
இனிப்பாகி
இனிப்பாக வேண்டிய இடத்தில்
கழிவாக ஆவதினால்
தீயவைகள் ஆகிறது
நல்லவைகள் அழிகிறது

நீ குளித்துவந்த கோலம்கண்டு
நீ உடை மாற்றும் நிலைகண்டு
கண்கொத்திப் பாம்பாய்
உன்னை ஆண்களின் கண்கொத்தி
நின்றது கண்டு

கண்கூசி  நின்றேன்
உன் செயல்கண்டு
காரி உமிழ்ந்தேன்
பெண்ணே உன்னை
நானும் ஒரு
பெண்ணாகயிருந்தும் அங்கு.


//நீண்ட நாளைக்கு பின் டிஸ்கி எழுகிறேன்..//

பொதுயிடத்தில் பெண்கள் உடைமாற்றக்கூடாது 
கொட்டையிடத்தில் தகவல் பலகை 
இருந்தும் என்ன பயன்?
எண்ணை சோப்புதேய்த்துக்குளிக்கூடாது
பட்டைதீட்டி பலகையில் தகவல்
இருந்தும் என்ன பயன்?
சுத்தமாக வைத்திருக்கவேண்டும்
சுத்த தமிழில் சொல்லில் வடித்து
இருந்தும் என்ன பயன்
அசுத்தத்தை தவிர அங்கு வேறுயில்லை

எல்லா சொல்லும் இருக்கு தமிழ[வழக்]கத்தில்
ஆனால்
யாருமதை செயவதில்லையே புழக்கத்தில்

ஆதங்கம்தான்
நம்ம நாடு
நம்ம இனம்
நம்ம மக்கள் 
என்ற ஆதங்கம்தான்
வேறு என்னசொல்ல..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது