நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாலையில் கசியும் மெளனம்!குடும்பம் பசியார
குருதி வேர்வையானது!
இளமை வெறுமையாகி
முதுமையை உடல் சுமந்தது!
பாசங்கள் தூரமாகி
வேசங்கள் நெருக்கமானது!
எல்லையில்லா அன்புகூட
ஏக்கமாகி நெஞ்சில் அடைந்தது!
இல்லம் சோலையாக
இல்லறம் பாலையானது!
இயற்கை இன்பங்கள் செயற்யாக
செயற்கை இன்பங்கள் துன்பமானது!
உறவுகள் ஒட்டிவர
உழைப்பும் கைகொடுத்தது!
உள்ளபடி சொன்னாக்கா
உடலோடு உள்ளமும் புண்ணாகிறது!
விடுமுறை ஒன்றே விடுதலை தருகிறது!
விடுதலை பெரும்வேளை
வியாதிகளும் தொடர்கிறது!
வியாதிகளோடு வயோதிகமும் சேர்கிறது!
வதையும் கூடுகிறது வாழ்க்கையும் கழிகிறது!
இதுதான்  வெளிநாட்டு வாழ்க்கை 
இதற்குதான் எத்தனை விதமான சேட்டை!..

நன்றி தமிழ்குறிஞ்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது