நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உச்சதிலிருக்கும் ஒய்யாரி.


ஓடி ஓடி விளையாடி
ஒய்யாரத்திலேறும் விலைவாசி
உன்னால் பலருக்கு ஒப்பாரி
உனக்கோ  தினம் கச்சேரி
உன்னைச்சொல்லி குற்றமில்லை-ஆனாலும்
உன்னால்தானே பெரியத்தொல்லை!

உன்னாட்டத்தை தடுக்க யாருமில்லை
உன்முன்னேற்றத்தாலே பல
உயிர்கள் கொலை தற்கொலை
இதெல்லாம் எதனால் யாரால் வந்த பிழை
இப்படியேப் போனால் என்னாகும்
இம்மானிடரின்  நிலை

நாளுக்குநாள் அதிகரிப்பு
விலைவாசியின்  நச்சரிப்பு
ஏழையெளிய மக்களுக்கு
என்றுமே பஞ்சத்தின் கிலிபிடிப்பு
நடுத்தர வர்கத்திற்கு
ரெண்டு கெண்டான் பரிதவிப்பு

சுரண்டலுக்கு கட்டவிழ்த்து
சுருட்டலுக்கு சொகுசமைத்து
சுலபமாய் சொத்துசேத்து அனுபவிக்க
கட்டுகட்டாய் கிடப்பில் கிடக்கு
கள்ளநோட்டுக்கள் பதுக்கிவைத்து
சிலர்கள் வாழ பலர்கள் வதைத்து
சிம்மாசனத்திற்கலையும் கூட்டமைப்பு

பூனைக் கண்ணை மூடிக்கொண்டு
உலகமே இருட்டென்ற கதைகதைப்பு
கேப்பையில் நெய் வடித்து
கேட்பாருக் கூற்றும் வித்தைகற்று
விதவிதமாய் விளக்கஞ்சொல்லி
வாயடைக்கும் வசதிவாய்ப்பு

மலிவு விலையில் மயக்கம் கொண்டு
இலவசத்திற்கு இணக்கம் தந்து
மந்தையாட்டுக் கூட்டம்போல
மழுங்கிபோன மனிதரால
எகிறிபோகும் விலைவாசியேனென
எதிர்த்து பேசவும் வெடவெடப்பு

உயர்வாசி வலைவீசி
ஊடறுக்கும் விலைபேசி
குடிசைவாசி நடுவர்கவாசி
நட்டாத்தில் நிற்கும் நிலையோசி
தலைக்கேறிய விலைவாசி
தரிகெட்டு ஓட நீயோசி

உச்சதிலிருக்கும்  விலைவாசி
உருண்டுவிழ மாற்றியோசி
சுருண்டு கிடக்கும் நீ எழுந்து
சுறுசுறுப்போடு உழைப்பைநேசி......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது