நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கோடையும் வாடையும்..

கோடை குழந்தைகளுக்கு
கொண்டாட்டம்-அதன்
வெயிலோ தருமே
திண்டாட்டம்

கோடை விரும்புவது
குறைந்த உடை
வாடை தேடுவது
நிறைந்த போர்வை

வாடை உடம்புக்கு
கொண்டாட்டம்-அதன்
குளிரோ நரம்புக்கு
திண்டாட்டம்

கோடைவெயில் தேடும்
குளுகுளுப்பு
வாடைகாற்று நாடும்
கதகதப்பு

கோடையின் மனைவி வாடை
வாடையின் கணவன் கோடை

”ஆகமொத்தத்தில்”

இருவரும் ஒரே கூட்டனி-அவர்கள்
இருவரும் தனித்தனியே வந்தால்
நமக்கு எதிரணி.
 
டிஸ்கி// இக்கவிதை தமிழ்தேரில் கோடையும் வாடையும் தலைப்பில் வெளியான என்கவிதைதான்.
ரொம்ப நாளாச்சி வெளியாகி.
 
 
 
 
 
 
 
 
 
இப்படத்திற்க்கு கவிதைஎழுதவேண்டும் என சொல்லி இப்பதிவை பப்ளிஸ்பண்ணிய மிக கொஞ்ச நேரத்தில்  இப்படியொரு அழகிய கவிதையை நமக்குதந்த  சகோதரர் காஞ்சி முரளியவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..
 
காதலியே...
ஓர் நிலாக்காலத்தில்....

இந்த
இயற்கையின் நிலவொளியில்
இணை மரங்களுக்கிடையில்...
இணையாய் நீயும் நானும்.... அது
நினைவுகளின் தேக்கமாய்... இன்றும்
நிழலாய் என் நெஞ்சில்...

இந்த
நிலாக்கரையில்...
இடம்மாறிய - நம்
இதயங்களின் சங்கமம்...
இன்னும் - என்
இதயத்தில் நினைவலைகளாய்...
இன்றும் என் நெஞ்சில்...

அன்று..
என் இதயத்திற்கு பதிலாக
உன் நினைவுகளை
தந்துவிட்டு பறந்துவிட்டாய்...
என்னை வதைப்பதாய் நினைத்து -
உன்னையே
நீ வதைத்துக் கொள்கிறாய்...

என்
நினைவுகளின்
நிஷ்டையிலிருந்து கலைத்துவிட்டு...
நீ
நிம்மதியை தேடுவது...
நிரம்பாத குடத்தின் நீர் போலத்தான்...

இன்றும்
இவ்விடம் எனக்கோர்
தாஜ்மகால்தான்...

ஆனால்... உனக்கு...!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது