நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீராத தீவிரவாதம்!


அச்சங்களோடு அனுதினமும் போராடி
அவதிகளின் பிடியில் கண்ணீர் நீராடி
ஆயிரமாயிரம் உயிர்கள் அடியோடு
அழிந்து போகுதே மண்ணோடு!

உள்ளுக்குள்ளே புகைந்து
உலகெங்கும் வெடிக்குதே!
உள்ளுணர்வ கொதிக்கவச்சு
உயிர்களெல்லாம் சிதையுதே!

அச்சமச்சம் கொண்டு
நித்தம் நித்தம் வேகுதே!
அஞ்சாநெஞ்சு கூட்டமெல்லாம்
ஆணவத்தில் அலையுதே!

வாதங்களை பேசியே
வஞ்சனைகள் செய்யுதே!
தீவிர வாதங்களை தூண்டியே
தீவிரவாதிகளா மாத்துதே!

சாதிபேரச் சொல்லி
சாகடிக்குதுங்க ஒரு கூட்டம்!
மதம்பேரச் சொல்லி
மாழுதுங்க மறுகூட்டம்!

தீவிரமா யோசிச்சி
தீர்க்குதுங்க ஒரு கூட்டம்!
திண்டாடி திணறியே
தீயாக்குதுங்க மறுகூட்டம்!

ஆத்தாடி மனிதமெல்லாம்
அடியோட அழியுதே!
பாத்தாலே மனசெல்லாம்
பதறித்தான் துடிக்குதே!

தீராதோ தீராதோ
தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்
தீரவேண்டும் தீரவெண்டுமென
தினம் நடக்குதே 
இறையிடம் மன்றாட்டம்...


”ஈகரை”க்காக எழுதியது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது