நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தந்தையர் [தியாகிகள்] தின வாழ்த்துக்கள்.

அனைத்து தந்தையர்களுக்கும் [இனிதந்தையாகப் போகிறவர்களுக்கும்] என் நெஞ்சார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்..

தந்தையின் தவிப்பு!

நன்றி கூகிள்

எனது
அன்பு மகனே
அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்!

ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத் தந்தைக்கும்
பங்குண்டல்லவா!

சிலஇடங்களிலும்
சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் -உன்
சிந்தையிலும் தவறாகவே
சித்தரிக்கபடுகிறது!

சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா?

அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்!

அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப் போலவே
பார்ப்பதைதான் என்னால்
பொறுக்க முடிவதில்லை

விரோதியல்லடா உன் தந்தை

உன்னை
இவ்வுலகத்திற்கு
வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக் கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு

தன்
உடலை உருக்கி
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்

மகனே!
நீ உயிர்வாழ
உன் அன்னை
தன் உதிரத்தைப்
பாலாக்கித் தந்தாள்

நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா?

இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?

டிஸ்கி// இது நான் முன்பே எழுதியகவிதை. மீண்டும் பதிவுசெய்கிறேன் ஏனெனில் தந்தையர் தினத்திலாவது சில தவப்புதல்வர்கள் தந்தையை அறிந்துகொள்ளட்டும் என்ற நப்பாசைதான்.
எல்லாதினமும் அன்னைதந்தை தினம்தான் ஆனால் அதையும் மறந்தவர்களுக்கு  நினைவுபடுத்தவே இதுபோல் கொண்டாடுகிறார்களோ ? ஏனெனில் சிலர்தான் தாய்தந்தையரின் தியாகங்களை மறந்து பாரமாக நினைத்து, அச்சோ இல்லையில்லை பேஷனாக நினைத்து அதாவது வயதாகிவிட்டால் மூலையில் தள்ளப்படுவதுதானே வாடிக்கை ஆனால் இதுகொஞ்சம் டீசண்ட் முதியோர் இல்லங்களில் இதேபோன்ற மற்றவர்களுடன் தனிமைப்படுத்திவிடுவது.
இது முதியவர்களுக்குதான் பாதுகாப்பாம்.
இன்று அவர்கள் நாளை??????????

இப்படத்திற்கு கவிதை எழுதிய ராசராசசோழன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


பட்டம் அறுந்து
போனாலும்
அது காதல் பட்டம்
பால் நில ஒளியில்
அது
சுமந்து செல்கிறது...
உன்னோடு நான் இருந்த
கடைசி சில
நிமிடங்களை ..

கண்ணே!

இங்கே பார்...
நிலவுக்கு ஆதரவாய்
செஞ்சுடர்...

தலை சாய்த்து
கொஞ்சி நிற்கும்
மர நிழல்கள்...
அதற்கு ஆதரவாய்
மலை முகடு...

என்
நினைவலைகள்
வானில்
மேக மூட்டமாய்...

நீ
மட்டும்
இங்கு இல்லை
உன்
சுவடுகள்
எங்கும் எதிலும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது