நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விவாகம் ரத்துபெற்றோர்களே பெற்றோர்களே
நீங்கள் பெற்றபிள்ளைகளின்
மனக்குமுறலைக்கேளுங்கள்

உங்களின் வீண்பிடிவாதத்தாலும்
வரட்டு கவுரவத்தாலும் பாதிக்கப்படுவது
நீங்களில்லை நாங்கள்

உங்களுக்குள் நீங்கள் விட்டுக் கொடுத்து
வாழத்தவறுவதால் எங்களின் வாழ்க்கை
அனைத்தும் பட்டுபோகிறது

வாக்குவாதங்கள் எல்லை மீறிவிடுதால்
குடும்பம் கோர்ட்டுக்குபோகிறது
வீண்விவாதங்கள் ரத்தாகாததால்
விவாகம் ரத்தாகிறது

கும்மியடித்த குதுகலத்திற்கு நடுவே
கோடு ஒன்று கிழிக்கப்பட்டு
இப்புறம் பத்துநாள் அப்புறம் பத்துநாள் -என
நாங்கள் பந்ததாடப்படுகிறோம்

உங்களின் வாழ்வைகண்டு கண்டு
எங்களுக்கு வாழ்க்கையின்மேலேயே
பயம்கலந்த வெருப்புவருகிறது

உதாரணமாய் இருக்கவேண்டிய நீங்களே
இப்படி உருப்படியில்லாமல் நடந்தால்
எங்களின் நிலைமை என்னவாகும்

விட்டுகொடுப்பதால் யாரும் கெட்டுப்போவதில்லை
யாசித்துக்கேட்க்கிறோம் யோசித்துப்பாருங்கள்
ஒற்றுமையாய் இருந்து உணர்ந்துபாருங்கள்
எங்களையும் இணைத்து மகிழ்ச்சியாய் வாழுங்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

எல்லாம் நன்மைக்கே


என்னை தினம்தினம்
உருமாற்றி படைக்கிறார்கள்
வண்ண வர்ண கலர் கொடுக்கிறார்கள்
என் வனப்பின் அழகில் மயங்கிய வானம்
நான் அழிந்துவிடுவது தெரியாமல்
சிலநேரம்
வான்மழையை பொழிந்துவிடுகிறது,

வருகிறவர்களை
வரவேற்க வாசலில்
விதவிதமாய் நிற்கிறேன்
வருகிறவர்களில் பலர்
என்னை மதிக்கிறார்கள்
அதில் சிலர்
என்னை மிதிக்கிறார்கள்மிதிபடுப்போதெல்லாம்
மண் என்னை
அமைதிபடுத்தி ஆறுதல்சொல்லும்
இப்போது
மிதிப்பவர்கலெல்லாம்
ஒருநாள் உன்னை
மதித்து நிற்கும் நாள்வரும்

அந்த மனித வாழ்க்கை
ஒருமுறை பிறப்பதும்
ஒருமுறை இறப்பதும்தான்

ஆனால்

நீ,,,,,, இறந்து இறந்து பலமுறை
பலபலவிதங்களில் பிறக்கிறாய்
அதற்காக ஆனந்தப்படு
வாழ்க்கை என்பது
வேதனைகளும்
சோதனைகளும் நிறைந்தவையே

அதை ஏற்றுக்கொண்டு
நீனும் ஆனந்தம் அடைந்து
மற்றவர்களையும்
ஆனந்தப்படுத்துவதுதான்
நிறைவான வாழ்க்கையை தருமென்று.......அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

காதலே!

Free Myspace Glitters @ GlitterUniverse.com

மனதுக்குள் எப்பொழுதும் படபடப்பு
நினைவுகளுக்குள் நித்தம் நித்தம் தவிதவிப்பு

கண்களுக்குள் கனநேரமும் கதகப்பு
காத்திருந்து பார்த்திருப்பதால் மரிதெழும்உயிர்துடிப்பு

உயிருள் உயிர் உருகும் ஓசை
இது மனிதருக்கே புரியாதபாசை

மனதுக்கு இதம்தேடும் காதலிசை -இது
தனக்கு தானே தேடிக்கொள்ளும் இம்சை

காதல் தொடங்கும்போது மனம்
எழுந்துபாடும் கவிராகம்

அது பிரிந்துவிடும்போதோ மனம்
விழுந்துபாடும் முகாரிராகம்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ஆண்மகனே!


வாழ்வென்னும் வசந்தத்தை நீ
வசப்படுத்திக்கொள்ள வாழ்விடமே
வர"தட்சணை" கேட்ப்பது வேதனையாய் இருக்கிறது

சுகமாய் வாழவருபவள்
உன்சோகங்களையும் உன்சுமைகளையும்
உன்வம்சத்தின் வலிகளையும் சுமப்பதற்கு
கன்னியாய் வருபவள் கைகூலி தரவேண்டுமா?

கெளரவத்திற்காக திருமணமா?
கொடுக்கல் வாங்களில்தான்
இருமனங்கள் இணையனுமா?

அற்புதமான வாழ்க்கைக்கு வரதட்சணைவேண்டுமா?
ஆனந்தமகிழ்ச்சிக்கு ஆண்மகனைஅடகுவைக்கவேண்டுமா?
இதயங்களை இணைப்பதற்கு
இலவச இணைப்புகள் தரவேண்டுமா?

ஆண்மகன் என்பவன் அன்பிலும்அனைத்திலும்
பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கப்பிறந்தவன்
அடுத்தவரிடம் கையேந்தி வாங்கப்பிறந்தவனல்ல!

   ஆணினமே நீ!!

நீ கொடுத்து மணந்தால் அது மனவாழ்க்கை
அதுவே நீ பெற்று மணந்தால் வெரும் மணசேர்க்கை
அன்போடு கொடுத்து மங்கையை மனைவியாக்கு
மனநிறைவோடு வாழ்க்கையை சிறப்பாக்கு......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

காணாமல்போனது


கார்மேகங்கள் என கருப்பாய் கறுங்கூந்தல்
முட்டுக்கால்களை தொட்டது அன்று
கழுத்துக்கீழ் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது
நாகரீகத்தின்  கத்தரிக்கோலுக்கு இரையாகி இன்று

இவர்கள் காசுகொடுத்து கத்தறிக்கிறார்கள் மாடலுக்கு
அதுகூடை கூடையாய் விலைபோகிறது வெளிநாட்டிற்கு

பளபளக்கும் பட்டும் தளைய
தளையப்பின்னலும்தான் தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப்கட்டும் பேண்ட்சர்ட்டும் வெளிநாட்டவரின் மறுஉருவம்

ஆண்கள் அனைத்திலும் முழுமை என்று -
தற்போதுமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்-ஆனால்
பெண்களின் ஆடை குறைவதுபோலவே
குறைந்துகொண்டே போகிறது அழகிய கூந்தலும்


நாகரீகம்  மேலோங்கி கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும் பல நிறங்களாகி விட்டது
அடிபெண்ணே அந்திவானம் சிவக்கலாம்
ஆனால் உன்கூந்தல் கறுத்தால்தான் அழகு

உன் அழகிய கூந்தல் அலை அலையாய்
தவழ்ந்து மிதப்பதில்தான் அழகு
அழகுமேனிக்கு  சிகைஅலங்காரம்
செய்வதுதவறில்லை அழகே -அதற்காக
சிகையையே அலங்கோலம் செய்துவிடாதே பெண்ணே..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ஆத்திரமும் கோபமும்ஆத்திரம் அழகல்ல
கோபம் நல்ல குணமல்ல

ஆத்திரத்திரத்தினால் ஏற்படும்
அத்தனை செயல்களின் பாதிப்பும்

தன்னைமட்டும் சார்ந்ததல்ல
தன்னைச்சார்ந்தவர்களையும் பாதிக்கும்

ஆத்திரத்தால் எதை சாதிக்கிறாய்
நீ ஆத்திரப்படுகிறாய் என்பதற்காக வேண்டுமென்றால்

அன்றைய காரியங்கள் நிறைவேறும்  -ஆனால்
நாட்கள் நகர நகர அதுவே உனக்கு நரகமாகும்

கோபம் கொள்ளும்போது உன்னை நீ உற்றுப்பார்
உனக்குள் ஒரு மிருகம் இருப்பதை உணர்வாய்

ஆத்திரத்தால் கோபத்தால் அழிவுகளும் வருத்தங்களும்
மிஞ்சுமே தவிர வேறென்ன கிடைக்கும்

இளமையில் ஆத்தித்தையும் கோபத்தையும்
வித்திட்ட மனிதன்

முதுமையில் தனிமையையும் விரோதத்தையும்
அறுவடை செய்கிறான்

ஆத்திரம் அறிவை அகற்றிடும் ஆயுதம்
கோபம் கூடவே இருந்து குழிப்பறிக்கும் கொடுங்குணம்

அன்பினால் சதிக்க முடிந்ததை ஒன்றை
ஆத்திரத்தால் ஒருபோதும் சாதிக்கமுடியாது

குணத்தால் கோடானகோடி பெறுவது சுலபம்
கோபத்தால் சிறு கடுகுகூட கிடைப்பது கஷ்டம்

ஆத்திரமும் கோபமும் மிக மிக மிக
அத்தியாவசியமானால் மட்டுமே கையாளவேண்டும்
அதனைவிட ஆயிரமடங்கு சிறப்பு
அன்பை கையாண்டு வெற்றிகொள்வது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பிள்ளைநிலாஒன்பதுமாதம் முக்குளித்து
வயிற்றுக்குள் உலவிய வெள்ளிநிலா
இடுப்புவலியை உண்டாக்கி
வெளியில் வந்தது பிள்ளைநிலா
வினோத சப்தங்கள் கேட்டிடவே
வீல்லென்று அழுதிட முகம் சிவந்திடுமே


மூடிய மலர்விழி முனுமுனுக்க
மெதுவாய் திறந்தது இமை இரண்டை
கருவறை இருள்கண்ட கறுவிழிகள்
உலகொளி பட்டதும் மூடியதே


கையும் காலையும் கட்டிக்கொண்டு
கர்ப்பபையிற்குள் இருந்த பிள்ளை
பிஞ்சிக்கால்கையை பிரித்துக்கொண்டு
விறித்து உதைத்து துள்ளியதே


கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு
நமட்டுச்சிரிப்பு சிரித்திடவே
நரியை விரட்டிச்சிரிக்கிறதாம் என்றுச்சொல்லி
நம்மையும் சிரிக்கவைத்திடுமே


நெற்றியை நுகர்ந்து பார்க்கையிலே
நாசியில் வாசம் ஏறிக்கொள்ளும்
மீண்டும் மீண்டும் அவ்வாசம்
நுகர்ந்து நுகர்ந்து பார்க்கத்தூண்டிடுமே


பசித்து குழந்தை அழுகையிலே
அள்ளியனைத்து அன்னை பால்தருவாள்
இதற்குமுன் தொப்புள் வழியே உண்டதற்கு
அதுஅறியாமல் முட்டிமோதிடுமே


பாலை அருந்திய மயக்கத்திலே
பச்சிளம் பிள்ளை உறங்கிடுமே
உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்று மாறும்!!!!!ஒரு [பஸ் ஸ்டாப்] பேருந்து நிலையத்தில்  இருஅம்மாக்கள் தங்களின் குழந்தைகளுடன் பஸ்ஸிற்காக நின்றுகொண்டிருக்கும்போது

எதிர்சுவற்றில் ஒட்டியிருந்த மோசமானபோஸ்டர்
ஒன்றைபார்த்த அந்தசிறுமி தன் அம்மாவிடம்
அம்மா அம்மா பாவம்மா அந்தஅக்கா ரொம்ப ஏழவீட்டு அக்காமாதரி இருக்குமா அதானாலதான் அவுக தங்கச்சியோட பாவாடையை
போட்டு இருக்காக ரொம்ப ரொம்ப சின்னதா இருக்குமா
அதப்போயி படம்வேற புடிச்சிக்கீறாங்கம்மா என்று தன் பிஞ்சிமுகத்தில் பாவனையைகாட்டி அனுதாபத்தை வெளியிட.

எங்கடிம்மா என்று நிமிர்ந்து தன் குழந்தை நீட்டிய திசையில் பார்த்த அந்த அம்மாவின் முகம்போனபோக்கில் சீ கர்மம் கர்மம் ஏந்தான் இவளுகல கடவுள் படைத்தாரோ இப்படி அரகொறையா திறியவா என்று முனுமுனுத்துக்கொண்டே, சும்மயிருடி அத்த இத்த பார்த்து கைய்யகிய்யக்காட்டமா, என்று சட்டென தன் மகளையும் இழுத்துக்கொண்டு முகத்தை வேறுபுறம்திரும்ப.

பக்கத்தில் நின்ற மற்றொரு சிறுவன் தன் அம்மாவைபார்த்து
எப்பப்பாத்தாலும் நம்ம அப்பா உன்னய சீலையா எடுத்து காச கரியாக்குறா காச கரியாக்குறான்னே கத்திகிட்டே இருக்காருள்ளம்மா அத நீதாம்மா கேக்கமாட்டெங்கிற எப்பப்பாத்தாலும் புடவ புடவையா வாங்கி அப்பாட காசயெல்லம் வீணாக்குறத்துக்கு

இதுபோல் சின்னபாவாடை வாங்கினால் காசமிச்சப்படுத்தலாமுள்ள என்று சொல்லிமுடிக்கும்முன் விழுந்தது ஓர் அடி முதுகில், விர்ரென்று வலிக்க
அழுதுகொண்டே பார்த்தான் அம்மாவை

சனியனே இந்த எழவுக்குத்தான் உன்ன என்கிட்டும் கூட்டிகிட்டுபோவவே
சடவா வருது, எல்லாம் இந்த பாழாப்போன பட்டணத்துக்காரங்களும் சினிமாக்காரங்களும் செய்யிற வேளயால
இந்த பச்சபுள்ளயெல்லாம் கெட்டு குட்டியச் சுவராபோவுது,
எந்த எடத்துக்கும் கூடிக்கிட்டு போவமுடியல அங்கினக்கங்கின ஒரே ஒட்டுதுணியபோட்டுகிட்டு நிக்கிதுக ஆடுதுக அத்தவேற போட்டாபுடிச்சி இவுகபோடுறாக, பொண்ணா பொறந்த மானவெக்கம் வேணும் இவுகளுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லையோடி கண்ணாத்தா, இவுக கெட்டுபோறதோட மத்தவுகளையும் கெடுத்து நாசம்பன்னுதாகளே  இவுக தாயிதகப்பன், சாதிசனம் யாரும் இத்த தப்புன்னு சொல்லமாட்டாகளோ,
என்ன காலமுண்டியிது அந்த கடவுள்தான் காப்பாத்தோனும்

அவுகளையல்லடி நம்மளத்தான் வா ன்னு சொல்லியபடி
மகனின் கையை தர தர வென இழுத்துச்சென்றாள் பொன்னம்மா.

என்னத்த சொல்லி என்னபண்ணக்கா என்னக்கித்தான் மாறுமோ இத்தப்போல உருப்படாத பொலப்பெல்லாம் நாமசொல்லியா எதுவும் மாறப்போவுது
இதெமாதரி மனுசங்கயெல்லாம் பிஞ்சிலேயே பழுத்துட்டாங்க இனி வெம்பித்தான் கீழேவிழுவாங்க, கேட்டா வயித்து பொழப்புக்குன்னுவாங்க
என்னமோ இவுகளுக்குமட்டுந்தேன் வயிறு பொழப்பு எல்லாம்,
நாமல்லாம் இல்லை கஞ்சியானாலும் குடிச்சிக்கிட்டு கிழிஞ்சதானாலும் மானத்தை மறச்சிக்கிட்டு,


காலம்போக போக இன்னும் இந்த உலகம் எப்படி இருக்கப்போவுதோ!
இந்த கண்ட்றாவி கலியுகத்தில்
நாமா நம்ம பசங்கள சாக்கிறதைய பாத்துவளக்கோனுமக்கா அப்புறம் கடவுள்விட்டவழி- ன்னு கண்ணாத்தாவும் தன் அருமைமகளின் கைகளை சற்று நடுக்கத்துடன் பிடித்தபடியே பொன்னம்மாவின் பின்னே போய் பஸ்ஸிலேறி அமர்ந்தார்கள், பஸ்ஸின் சன்னல்வழியே மீண்டும் போஸ்டர் எதிரே அரைகுறையாட எதிர்காலம் நினைவில் ஓட
காலத்தின் கோலத்தை நினைத்தபடி, கவலையில்
இருவரும் இருக்கையில் சாய்ந்தார்கள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

மானே தேனே மயிலே


மானே,,,,,,, மலைத்தேனே-- உனைக்கண்டு மலைத்தேனே
எனைநானும் மறந்தேனே

மலைத்தேன் சொட்டச் சொட்ட
மலர்கள் கொட்டக் கொட்ட
மூச்சுக்காற்று முட்ட முட்ட
மனசுக்குள் வந்ததென்ன

கண்ணாம்பூச்சி ஆட்டத்தில
கண்ணிரெண்டும் கட்டிவிட்டு
கண்ணெதிரே நின்றுகொண்டு
கண்ணிமைக்காமல் ரசித்தென்ன

பஞ்சியில் நெருப்பாகி
பற்றிக்கொண்டு எறிந்ததென்னெ
நெருப்புக்குள் நீராகி
நெஞ்சிக்குள் நின்றதென்ன

தேனே,,,,,,,, திகைத்தேனே- தினம் தினம் தொடர்ந்தேனே
உனைநானும் நினைத்தேனே

உள்ளத்துக்குள் நீயும் துள்ள -உன்
மெளனம் என்னைக்கொல்ல
எனையே நான் மறந்து
மரம்போல் நின்றதென்ன

மெல்லிய காற்றாகி
மேனியில் படர்ந்ததென்ன
வண்டுக்குள் பூவாகி
என்னை நீ வதைத்ததென்ன

ஆழ்மனம் ஆர்பரித்து அதில்
ஆசைகள் கூத்தடிக்க
அடிநெஞ்சை தொட்டு தொட்டு
அடி அத்தனையும் கோர்த்ததென்ன


மயிலே,,,,, மறுக்காதே-- எனை நீயும் மறக்காதே
உனை நீயே மறைக்காதே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகில் உள்ள அனைத்து தமிழ்நெஞ்சங்களுக்கு அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்,


அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்


கலைக்காகவா!


அடி ஓவியப்பெண்ணே
உன்னையும் விட்டுவைக்கவில்லை
இந்த நவநாகரீக உலகம்

ஓவியத்தில்கூட
ஒளிவு மறைவு வேண்டாமென்கிறது
ஒட்டுத்துணி
கலைக்காகத்தானே என்று
கலைந்து எறிப்படுகிறது
கன்னியமான ஆடை

உலகமே
அசந்துபோய் பார்க்கிறது
ஆதாம் ஏவாளின்
அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால உருவ
அழகியை

இறைவன் கொடுத்த
அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக பலவிதத்தில்
காவுகொடுக்கப்படுகிறது
கற்பு என்ற மானமே
காற்றில் பறக்கவிடப்படுகிறது..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

ஈழத்தின் குரல் ஈனமாய்


இறந்தோம்

இறக்கிறோம்
இறந்துகொண்டே இருக்கிறோம்
இறந்தவர்களுக்கும் எண்ணிக்கையில்லை
இனிஇறப்பது எத்தனையென்பதும் தெரியவில்லை
இறப்பிற்க்குகூட எங்கள்மேல் இரக்கமில்லை
இறுதிநாளுக்குள் இந்தஇறப்புக்கள் நின்றிடுமா?
இல்லை” இந்த இறப்பே எங்கள் ஈழத்ததை தின்றிடுமா?
ஈழத்திலிருந்து பலகுரல் ஈனமாய் ஒலிக்கிறது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பெண்ணாக பிறந்தால் பாவமா?


அரலிவிதை அழுதுபுலம்பிக்கொண்டே வந்ததைப்பார்த்த
கல்லிச்செடியும், எருக்கம்பூவும் ஏன்னென்று கேட்க

இந்த அருகம்புல்லுக்கு வந்த வாழ்வைப்பார்த்தாயா!
இனிப்பை உடலில்வைத்து உயிரைக்கசக்கவைக்கும்
வியாதிக்கு இதுவும் ஒருவகையில் உதவும் மருந்தாம்.

"ஆனால்"நான்

மனங்கள் கசந்தபோது உயிரை
கொன்றுவிடும் கொடும்மருந்தாம்,
அடுத்தவரை கருக்கிவிட்டு நான்மட்டும்
பசுமையில் வாழ்வதா

வேண்டாமடி இந்தவாழ்க்கை வேறொரு
வாழ்வைதாவென்று இறைவனிடம்
வரம்கேட்க்கப்போகிறேன்
என்றுசொல்லிக்கொண்டே மீண்டும் அழுதது

உடனே
கல்லியும் எருக்கனும் சொன்னது
அதேகதிதான் எங்களுக்கும்

பெண்பிள்ளைகள் வேண்டாமென்று
பெற்றவர்களேமுடிவெடுத்து பிறந்தமணம்மாறாத
பெண்பிள்ளைகளுக்கு தாய்ப்பால்
கொடுத்தால் உயிர்வாழ்ந்திடும் என்று

எங்களின் பாலைக்கொடுத்து உயிரை எடுக்கிறார்கள்
பத்தரைமாத்துத் தங்கமான பச்சிளம்சிசுக்களை
கொலைசெய்ய எங்கள் மனம் பதறுவதால்
பரிதவித்துபோய்தான் நாங்களும் வருகிறோம்

இந்த பாழாய்போன சிலமனித
ஜென்மங்கள்தான் மனசாட்சியை
புதைத்துவிட்டு புனிதர்கள்போல் வாழ்கிறது
அதுபோல் அல்லாத வாழ்வை தரச்சொல்லி
வரம்கேட்க

வாருங்கள் ஒன்றாக சேர்ந்து இறைவனிடம்
மன்றாடுவோம் எங்களுக்கு மற்றவர்களை
வதைக்காத வாழ்க்கையைக்கொடு என்றும்
மனசாட்சியுள்ள நல்ல மனங்களாய் வாழ்வதற்கு
நல்வழிசெய் என்றும்..அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

எதிர்மறைமாடிவீடு சொகுசுகாரு! பளபளக்கும் டிரஸு!
பட்டுபோன்ற சூவு!
பந்தாவான பேக்கு! 
பசித்தால் சாக்கிலேட்டு கேக்கு!
போதாததற்கு பொசுபொசுன்னுசோறு!
வாசலுக்கு வந்தவுடன் 
அழுது அடம்பிடித்தது குழந்தை
ஸ்கூலுக்கு போகமாட்டேன்
ஸ்கூலுக்கு போகமாட்டேனென்று!

குடிசைவீடு! ஆங்காங்கே 
கரையான்கூடு
ஒட்டுபோட்ட பாவடை! 
சுறுங்கிபோனச் சட்டை!
பசியெடுத்தால் பழையகஞ்சிசோறு! 
அதுவும் இல்லையின்னா 
ஊசிப்போன பன்னு!
கையில் மஞ்சபையி! 
காதறுந்த செருப்பு!
வாசலில்வந்து நின்னு 
வம்புபண்ணிஅழுதது குழந்தை
பள்ளிக்கூடம் போறேம்மா!
பள்ளிக்கூடம்போறேமான்னு..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

மின்னல் மீது


வழக்குத்

தொடரப்போகிறேன்
வானத்தின் கோர்ட்டில்
உத்தரவு இல்லாமல்
முன் அனுமதி பெறாமல்


வான்மழையில்

தன்உடல் முழுவதையும்
நனைத்துக்கொண்டிருந்த

பூமிப்பெண்ணை
பளிச்சென்று 

படம்  பிடித்ததற்க்காக

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

பணமா -பாசமா


பணம் பணம் பணம் -இதுவே
தினமும் மனிதன் ஓதும் மாயமந்திரம்
பணம் இல்லையேல் அவன் பிணம் -இது
பழமொழிக்காக சொல்லித்திறியும்
சாத்தான் வேதம்

ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும்
ஓயாதஓட்டம்
பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க
வரிந்துகட்டிகொண்டு ஓட்டம்
பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும்
சில பச்சோந்திகளின் கூட்டம்

பாசங்கள் கூட பணத்தின்முன்னே
பணிந்துபோகும் அவலம்
பணத்திற்காக பாசத்தைக்கூட
தவிர்த்துக்கொள்ளும் இன்றைய காலம்

பணம்வரும் முன்னே மனம் நிறைந்தஅமைதி
பணம்வந்த பின்னே தொலையும் மனநிம்மதி
பணத்தின் முன்னே பாசம் சரணாகதி
பணம் வந்தபின்னே பாசம் கசந்துபோவதோ விதி

இறைவன் பணத்தை படைத்திருந்தால்
இதயம் வைத்திருப்பான்- அதில்
இரக்கத்தையும் இணைத்திருப்பான்
இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான்
இதயத்தை இணைக்க தவறிவிட்டான் -அதில்
இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான்.

காகிதபணத்திற்கு

ஏழைகளில் கதறல் கேட்குமா?
மனிதர்களின் பாசம்தான் புரியுமா?

மனிதர்களுக்கு பணம் அவசியம்
அதைவிட பாசம் முக்கியம்
பணம் நம்மைவிட்டுப்போனால்
திரும்பவந்துவிடும் -ஆனால்
பாசம் விட்டுப்போனால்! அதிலுள்ள
மனமல்லவா நம்மைவிட்டுப்போகும்

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே என்ற
பழமொழியை மாற்றி
பாசம் மனதின் மத்தியிலே

பணம் அதற்கு பக்கத்திலே
என்ற புதுமொழியை உருவாக்கு

பணத்தையும் பாசத்தையும் இணைத்து
பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார்
தன்னை உணர்வதோடு

பிறறையும் உணரும்போது
பிறந்ததிற்கான பலனை

இப்புவியிலேயே
அடைவதை தெளிவாய் உணர்வாய்...


[தமிழ்தேர் இதழுக்காக எழுதி இம்மாதம் வெளியான கவிதை .
அம்மாடியோ இன்றுஒருவழியா மைக்கைப்பிடித்து தத்துபித்துன்னு கவிதையையும் படிச்சாச்சி]

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்


மின்மினியே


மின்மினிபூச்சிகளே

மின்னட்டாம் பூச்சிகளே
என் வீடுதேடி வாருங்கள்

உங்களின்மேல் மிளிரும்

ஒளிவிளக்கைக்கொண்டு
நான் மின்சாரத்தை

உபயோகிக்கவேண்டும்
முடிந்தால் சேமிக்க வேண்டும்

என்வீட்டில் உங்களுக்காக
கூடுகட்டிவைத்துள்ளேன்
கூட்டம் கூட்டமாக வாருங்கள்
கூடி வெளிச்சம் தாருங்கள்

[பின் குறிப்பு]
இப்போதல்ல நான் நம்மநாட்டுக்கு வரும்போது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்னெவென்று சொல்வதம்மாவிழிப்பார்வைகள்
மோதிக்கொண்டதில்லை
மொழிச்சொற்கள்
விருந்துவைத்ததில்லை
கால்கள் பின்னியபடி
நிழலைத்தொடர்ந்து நடந்ததில்லை
கைவிரல்கள்
காதல் ஸ்பரிசம் அடைந்ததில்லை

ஆனபோதும்

விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
விழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன

விரல்மொழிகள்
பகிர்ந்தபோது மெளனமும்
எழுத்துமொழிகள்
மெளனமானபோது பகிரவும்
உள்ளம் கற்றுக்கொண்டன

உதட்டு இதழ்கள்
மூடியிருந்தபோது
உயிர்தேனை உறிஞ்சியதெப்படி
உள்ளது உள்ளபடி
உள்ளம் உருகுதடி

உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை

ஆனபோதும்

மனமெல்லாம்
மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம்
நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக
புறப்படும் என்புன்னகைகள்

ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னவென்று
எனக்குசொல்லத் தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம்
நீ
எழுதும் எழுத்துக்களைகண்டு
 என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணினித்தோழியே
உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது எ
ன்னஏதுவென்று -உன்
கணினியின் கண்கள்வழியே
கவிதை ஒன்றுசொல்லடி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

காதல் கோட்டை


அடி வான தேவதையே
என் ஆசைக்காதலியே

உனக்குள் நான்வந்து புகுந்ததை அறிவாயா
உன்மேகமூட்டத்துக்குள் என்மூச்சுக்காற்றை உணர்ந்தாயா

ஆணுக்குள் பெண்வந்தால் அவன்அந்தரத்தில் பறப்பானாம்
அடிஉனக்குள் நான்வந்ததும் ஆகாசத்தில் மிதக்கிறேனடி

உன்வட்டநிலாக் கண்ணத்தை தொட்டுவிடத்துடிக்கிறேன் -அது
முடியாமல் போகவே தினம் தினம் தவிக்கின்றேன்

விமானமானநான் வானமான உன்னுள்வரும்போது
என்னுள் இருப்பவர்களுக்கு நமக்குள் நடக்கும்

காதல் நாடகம் எதுவுமே தெரியாது
நம்மிருவருள்ளும் துடிக்கும்துடிப்பு எவருக்கும்புரியாது


கீழிலிருந்து நம்மை பார்ப்பவர்களெல்லாம் -ஏதோ
நான்உன்னை உரசிச்செல்வதாய் உரக்கப்பேசுகிறார்கள்

அவர்களுக்கு தெரியாதடி நமக்குள் இருக்கும்இடைவெளி
இருந்தபோதும் நமக்குள் என்றும்உண்டு அன்பொளி

பல பல காதல்களை பூலோகம்கண்டிருக்கும் -ஆனால்
இதுபோன்றொரு காதலை இந்தவிண்ணுலகம் கண்டதுண்டா

உலகம் அழியும்வரை உன்னுடன்மட்டும்தான்

என்காதல் வாழ்க்கை
என் வாழ்க்கை உள்ளவரை இந்தவானம்தான்

என்காதல் கோட்டை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

சந்தேகத் தீ
ஒருவரது வாழ்வில்
சந்தேகம் உள்நுழையப் பார்க்கும்போதே
ஒரு நொடியும் தாமதிக்காமல்

சந்தோஷம் வெளியேறிவிடுகிறது

சந்தோஷமாய்

தன் இறகுகளை
விறித்து பறக்கும் பறவையை
வேடனின்

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
அதன் சிறகுகளை

பதம்பார்த்துவிடும்போது :அந்த:
பறவையின் நிலை என்னாகுமோ

அதே நிலைதான்-

நிம்மதியாய்

வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வை
சந்தேகம் புகுந்தபோது

நிலைகுழையச்செய்துவிடுகிறது.
சந்தோஷங்கள்
சருகாய்
சட சடத்துக்கொண்டிருக்கும்வேளையில்
சந்தேக”தீ” சருகை

சாம்பலாய் பொசுக்கிவிடுகிறது.


நட்புடன் உண்டான சந்தேகம்
நல்லநட்பை இழக்கச்செய்கிறது

காதலிலன்போது எழும் சந்தேகம்
காதலையே கத்தரித்துவிடுகிறது

குடும்பத்தில் ஏற்படும் சந்தேகம்
சொந்தங்களை தூரமாக்கிவிடுகிறது

தாம்பத்தியத்தில் ஏற்படுபம் சந்தேகம்
தன் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறது


சந்தேகத்தின் குறிக்கோளே

மனித /தேகம்/தான்
என்ன

புரியவில்லையா மானிடா!

மனிதமனம் எங்குள்ளது

தேகத்திற்குள்தானே
தேகத்தை வேகவைப்பதே

இந்த சந்தேகத்தின் வேலை


சந்தேகமென்னும்

சாக்கடையில் விழுந்துவிடாதே
உன் சங்கதிகளை
நாரடித்துவிடாதே

சந்தேகமென்னும்

மெழுகுவர்த்தியை கொளுத்தி
அதில் உன்னையும் உருக்கி

அத்தீயைக்கொண்டே
உன்னைச் சார்ந்தவர்களையும்

சாகடித்துவிடாதே

மனித வாழ்க்கையே

நம்பிக்கையில்தான்
மனநம்பிக்கையற்றுப் போனால்
மனிதவாழ்வு என்னாகும்

சிந்தித்துப்பார்

மனிதனாய் வாழமுயன்றுப்பார்
சந்தேகத்தைவிட்டு விட்டு

சந்தோஷமாய் வாழ்ந்துபார்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

வாலிபவயது


உன்வயதை வீணானவைகளைக்கொண்டு
பாழாக்கிவிடாதே!

உன் பருவம் போனால் திரும்பாது-அது
போகும்முன் புடம்போட்டு வைத்துக்கொள்.

நீ வாலிபத்தில் செய்யும் ஒவ்வொன்றும்
உன் வயோதிகத்தில் உனக்கே திருப்பிவரும்
திரும்பவரும்

வாலிபத்தை வேண்டாத சகவாசத்தினாலும்
வசதியான வாழ்வின் திமிரினாலும்
வீணடித்துவிடாதே!

வாலிபம் உனக்கு கொடுக்கப்பட்டதே
உன்னை சோதித்துப்பார்க்கத்தான்

அதில் நீ எடுத்துவைக்கும் ஒவ்வொருஅடியும்
உன் ஈரூலக வாழ்வையும்
தீர்மானிக்கப்படக்கூடியவைகள்

”ஆதலால் வாலிபமே”

வாலிபவயதின் வாழ்வை
முறையாக்கிக்கொள் அதுவே உன்னை
நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

மீண்டும் ஒரு விருது


பாசமுள்ள தோழி மேனகாசத்தியா அவர்கள் வழங்கியவிருது.

மனம் மகிழ்ச்சியில்திழைக்கிறது தோழமைகளின் ஊக்கங்கள் நம்மை
மேலும் மேலும் வலுவடைச்செய்யும், அவ்விதத்தில்
நான் மிகவும்கொடுத்துவைத்தவள்.

மென்மேலும் இந்த ஊக்கத்தை உங்கள் கருத்துக்களின் மூலம் இந்த
தோழமைக்குத்தாருங்கள் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு வந்துசெல்லும் அனைத்து தோழமைக்களுக்கும்
இவ்விருதினை வழங்குகிறேன்.....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

அச்சச்சோஎன்ஆடைகளை கலைந்து
என்னை அலங்கோலம்செய்ததால்
ஆத்திரம் அடைந்த நான்!

என் காரத்தையெல்லாம் அகங்காரத்தோடு
கண்ணுக்குள் நுழைத்து தாரை தாரையாய்
கண்ணீரை வரவழைத்து விடுகிறேன்

ஆத்திரமும் கோபமும்
உங்களுக்கு மட்டுமில்லை
எங்களுக்கும் உண்டு என்று
வேதனைபட்டுக்கொண்டே
வெந்தது வெங்காயம் குழம்பில்......அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது