நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விரல்கள் விதைக்கும் விதைகள் [தொடரோ தொடர்]



மின்மினி அன்போடு அழைத்த தொடர் இடுகை..  நீண்ட நாட்களுக்கப்புறம் ஊருக்கு சென்றுவிட்டதால்]இத்தொடரை எழுதுகிறேன்.எழுத அழைத்த மின்மினிக்கு  என் நன்றிகள்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.

அன்புடன் மலிக்கா

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

நிச்சியமாக அதுதான் என் உண்மையான பெயர்.முதலில் இனிய குடும்பம் என்று வைத்திருந்த பெயரை எடுத்துவிட்டு. என் சொந்தப்பெயரையே வைத்துவிட்டேன்.ஏனெனில் என்றும் எல்லோர் மீதும் அன்புடன் இருக்க விரும்புவதால், அன்புடன் மலிக்கா என்று வைத்துள்ளேன்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

காலடி எடுத்துவைக்கவில்லை விரலடிதான் எடுத்துவைத்தேன். [ஐய்யோடா]கவிதைகளின்மீது அதீத காதல் இருந்ததால் அதனுடன் நான் என்றும் தொடர்போடு இருக்க விரும்பியதால். என் எண்ணங்களை எழுத்துவடிவில் காணவிரும்பியதால். என் விருப்பத்தை பிறரும் விரும்புகிறார்களா என அறிய நினைத்தால்.

விழிகளின் வழியே இந்த வலையில் விழுந்தேன். விரல்கள் வழியே விதைகளை விதைக்கிறேன்.[ஒரு விதையாவாவது மரமாகுமுன்னுதான்].

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

வலை திறந்து முதல் 3. 4. மாதம் எப்படி இதை பிறருக்கு தெரியப்படுதுவதென தெரியாது. பின்புதான் தமிழ்மணம். தமிழிஸ். தற்போது [இன்ட்லியில்] உலவு. தமிழ்வெளி திரட்டிகளிலும்.

தினமணியிலும் இணைத்துள்ளேன். திரட்டிகளுக்கும். தினமணிக்கும் என் நன்றிகள்.பேஷ்புக்கிலும் என் தளத்தினை இணைத்துள்ளேன்.

இதெல்லாம்விட முக்கியமாக பிற தளங்களுக்குச்சென்று அவரவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதாலும் அவர்களின் ஆக்கங்களுக்கு கருத்திடுவதாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சி.அதைகாணும் எனக்கும் திருப்தி.அதுவும் என் தளம் பிரபலமடையச்செய்ய ஒரு வழி.[எல்லா ரகசியமும் சொல்லியாச்சி இனி என்ன ஆகுமோ ஹி ஹி ஹி]

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நம் சொந்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளும்போது மன‌துக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துக்கம் துண்டிக்கப்படுகிறது.

இதன் மூலம் எத்தனை மனங்களுக்கு சந்தோஷம் உண்டாகிறது [அட அதாரு அங்கே சொல்லுறது. சிலருக்கு சிலரின் மகிழ்ச்சி சோகத்தை உருவாகுமுன்னு. சிலரின் சோகம் சிலருக்கு மகிழ்ச்சியை தருமுன்னு] ஆக மொத்தத்தில் பகிர்தலால் பலன் உண்டு. அது யாருக்காக இருந்தாலும் மகிழ்ச்சிதான் இல்லையா.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

சம்பாத்தியம் அடைத்திருக்கிறேன் பெருமளவில் மிகப்பெருமளவில்.உங்கள் அனைவரின் அன்பை இதைவிட ஒரு சம்பாத்தியம் வேண்டுமா?பணம் சம்பாத்தித்திருந்தால் அது சிலகாலத்திற்குதான். ஆனால் பிறரின் பாசத்தை சம்பாரித்துவிட்டால் அது கடைசிவரையில் நிலைத்திருக்கும் [நிலைத்து வைத்திருக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்] அந்த வகையில் நான் மிகவும் அதிஷ்டசாலி.

எத்தனை நல்லுள்ளங்களின் அன்பும். பாசமும்.சகோதரத்துவமும் கிடைத்திருக்கிறது.அதுமட்டுமல்லாது இந்த பதிவுகளின் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி அதிகரிக்கிறது.எனக்கான என் என்ணங்களை வெளிப்படுத்தும் தளமாகவுமிருக்கிறது.

நாளை நான் சாதிக்கிறேனோ இல்லையோ! ஆனால் இன்றுவரை சந்தோஷத்தில் திழைக்கிறேன்.  என் கிறுக்களென்னும் கவிதையின் வாயிலாக உங்கள்  ஆதரவென்னும் அன்பைப்பெற்று அதுபோதாதா?இன்றைய சந்தோஷம் நாளைய சாதனை..[சாதனையாக்கிடுவோமுல்ல அப்படின்னு கோரசா சொல்வதுபோல் கேட்குது. என்னா ஒரு ஆசையப்பாரு இந்த மல்லிக்கு]

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

மூன்று வலைகளுக்கு சொந்தக்காரி.மூன்றுமே தமிழ்தான் தமிழைத் தவிர வேறெதுவுமில்லை..[ஆமா இவுகளுக்கு வேறு மொழி தெரிஞ்சிட்டாலும் முணு முணுப்பது கேட்குதுங்கோ]

என் எண்ணங்களை கவிதையாக்கும் இந்த நீரோடை. என் எண்ணங்களை கலைகளாக்கும் கலைச்சாரல். அதையெல்லாம்தாண்டி இவ்வுலகத்திலிருக்கும் இருளை அகற்றி சிறு ஒளியைத்தேடும் என் ஆன்மாவிற்காக என் பயணமாக. இனிய பாதையில்.

இதை தவிர வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன். அதுவும் கவிதை நடையில்தான். அந்த மொழியை டிரான்ஸ்லேஷன் செய்யத்தெரிந்தவர்கள் எந்தமொழியிலும் வேணுமுன்னாலும் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம்.நோ அப்ஜக்‌ஷன். பர்மிஷன் கிராண்டட்..[ஓடு மல்லி அந்த மொழியின் ரகசியம் கேட்டு படைதிரண்டு வாராக]

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

சில வலைப்பதிவர்கள் மீது வருத்தமுண்டு. ஏனெனில் மற்றவர்களின் மனதை ரணமாக்கி அவர்கள் சுகங்காணும்போது.

மற்றபடி யார்மீதும் பொறாமை கிடையாது அவரவரின் திறமைகளில் அவரவர் திறமைசாலிகளே! ஆனால் அனைவரின்மீதும் போட்டி உண்டு. போட்டி ஏனெனில் இக்கால வலைபதிவர்களுக்கு மத்தியில் போட்டி வேண்டும். அதுவும் ஆரோக்கியமான போட்டி அப்போதுதான் தன்னாலும் தன் திறமைகளை வெளிப்படுத்தி நிலைத்து நிற்க வேண்டுமல்லவா சகலகலா திறமைசாலியாக! [ஹி ஹி ஹி இது கொஞ்சம் ஓவர்தான்.ஹூம் ஓவரோ ஓவர்தான்]

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இந்த வலைதிறக்க ஊக்கப்படுத்தி உதவிய என் அண்ணன் ஆரீஃப்.மற்றும் என் அன்பு மச்சான்.அதற்கு துணையாக என் அன்பு மகள். இவர்களின் ஊக்கத்தோடு தொடங்கியதுதான் இந்த வலை

நான் வலைதிறந்து முதன்முதலில் பதிவிட்டு திரும்பி வருவதற்குள் முதல் பின்தொடர்பவராக ஒரு Greece நாட்டைச்சேர்ந்தவர்தான்//kulturosupa// Gender: Male Location: θσσαλονικη : Greece Wishlist என்பவர்தான்.[வாழ்க அந்த மனிதர்]

அதன் மறுநாள் கோலங்கள் சாரூக்காதான். எனக்கு முதல் கருத்திட்டவர்கள். அதன்பின்,முதல் விருதும் தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்

நீராடியவங்க சொன்னது.:
sarusriraj சொன்னது…
மலிக்கா நீங்க பிளாக் ஆரம்பிச்சதில் மிகவும் சந்தோசம், மென்மேலும் வளர வாழ்துக்கள்
25 ஆகஸ்ட், 2009 11:44 am

அப்புறம் ஆசான். அன்புடன் புகாரி அவர்கள்
அன்புடன் புகாரி சொன்னது…
வாழ்த்துக்கள்மலிக்கா
அழகியவடிவமைப்பு!

///கோடையின்மனைவிவாடை
வாடையின்கணவன்கோடை
இருவரும் தனித்தனியே வந்தால்
நமக்குஎதிரணி///
நன்றாக இருக்கிறது
அன்புடன் புகாரி

மற்றும் ஃபாயிஜா. என் பாலோவர் காணாதுபோக அதை கண்டுபிடித்து ஊக்கமும் தந்தவர் சுமஜ்லாக்கா.அவர்களுக்கு நன்றி சொல்வதோடு,  இங்கு வந்து செல்லும் தாங்கள் அனைவரின் பாராட்டையும்.ஊக்கத்தையும். நினைத்து பெருமையடைகிறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

என்னைப்பற்றி என்னசொல்ல. இறைவனை நேசிப்பவளாக.அன்பான இனிமையான குடும்பம் அமைந்தவளாக. அயல்நாட்டில் வசித்தபோதும் தாய்நாட்டின்மீதும் தமிழின்மீதும் பற்று கொண்டவளாக. என்எழுத்துக்களின் மூலம் பலபல நல்லுள்ளங்களின் அன்பைப்பெற்றவளாக இருக்கும் நான்.

என் எழுத்துக்களால். பல பெரியவர்களின். அன்பையும். பாராட்டுக்களையும். வாழ்த்துக்களையும். பரிசுகளையும். விருதையும். பெற்றுள்ளேன் என நினைக்கும்போது, நானா? என எனக்குள்ளே கேள்விகள் கேட்டுக்கொள்வேன்.இதெல்லாம் எனக்கு இறைவன் வழங்கியது புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது.

பல மாபெரும்கவி ஜாம்பவான்கள் உலாவரும் இவ்வலையுலகில் என் கிறுக்கள்களை கவிதைகளென்று சொல்லிக்கொண்டு கிறுக்குகிறேன் அவ்வளவுதான். ஆனால் உங்கள் அனைவருக்கும் மத்தியில்
இன்னும் கத்துக்குட்டியாகவேயிருக்கும் நான். சாதிக்கவேண்டும்.
என் எழுத்துக்கள் மூலம் சிறுதுளியாவது சாதிக்கவேண்டும்.

என் எழுத்துக்கள் எப்போது முழு வடிவம் பெற்று ஏட்டில் வருகிறதோ! அப்போது நான் மீண்டும் என் தாய்வயிற்றிலிருந்து பிறக்கும் உணர்வு கிடைக்கும் அந்த உணர்வுக்காக காத்திருக்கிறேன். அதற்கு இறைவனின் உதவியும்.தாங்கள் அனைவரின் அன்பும். ஆதரவென்னும் ஊக்கமும் நிச்சயம் வேண்டும். அதை கிடைக்குமென்ற நம்பிக்கையில். எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்திவளாய். உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் அன்புடன் மலிக்கா..

டிஸ்கி//அதுசரி இத்தொடர் யாரும் எழுதாமல் இருக்கீகளா. அப்படியிருந்தா உடனே தொடருங்க. அட உங்களைபற்றியும் நாங்களும் தெரிஞ்சிக்கோனுமில்லையா..

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது