நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இசையும் பாடலும்


அணைத்துக் கொள்ளும் ஓசை
அந்தப் புறத்தின் பாஷை
அன்பான இசை

அன்னைத் திட்டும் திட்டு
அப் பப்ப விழும் குட்டு
அன்பான் பாடல்

மழைத்துளியின் சத்தம்
மன்னவனின் முத்தம்
மயக்கும் இசை

மழழையின் சிரிப்பு
மரிக்கொழுந்தின் பூரிப்பு
மயக்கும் பாடல்

குழந்தையின் அழும்பல்
குமரியின் சிணுங்கல்
கொஞ்சும் இசை

குற்றால குளியல்
குலைநடுங்கும் குளிரல்
கொஞ்சும் பாடல்

உயிர்நாடி துடிக்கும் ஓசை
உள்ளம் சொல்லும் ஆசை
உணர்வின் இசை

உலை கொதிக்கும் சத்தம்
உள் குடல் பசித்து கத்தும்
உணர்வின் பாடல்

கண்கள் பேசும் மொழி
காதல் தீர்ந்தால் வலி
கனமான இசை

அறிவை தின்ற காதல்
அழிவில் முடியும் சாதல்
கனமான  பாடல்

சுற்றி இயங்கும் உலகம்
சுழல மறுத்தால் சுருங்கும்
இயற்கையின் இசை

நம்மைச்சுற்றி நடக்கும்
நாளும் பொழுதும் கடக்கும்
இயற்க்கையின் பாடல்

மொத்த பூமி மொத்தம்   -2
இசையோடு பாடலாய் சுத்தும்..[இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக எழுதினேன். இதை வாசிக்க சென்றபோது எனக்கு கிடைத்ததுதான்  காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் கைகளால் கிடைத்த விருது.

மறக்க முடியா கவிதை மறக்கமுடியா நாள்.
அழுதது, ஆனந்தம் அடைந்தது, என எல்லாமாக்கி
பலரின் பெருந்தன்மைகளையும். நிறைய மனங்களிலுள்ளவைகளையும் புரிந்துகொள்ளவைத்த கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்...
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது