நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நதியலையில் ஆடும் நிலவு


நன்றி கூகிள்
வான்நதியில் உலாவரும்
வெண்ணிலாவே-நீ
வலம்வரும் வேளையில்

பெண்ணிலவோடு உனக்கென்னடி
போட்டி

நீ உலாவரும் வானில்
நான் விழாக்காண வந்ததால்
நான் நீராடும் நதியில்
நீ் குளித்தாட வந்தாயோ!

எட்ட நின்றே
எட்டிப்பார்பதெதற்கு!

பூவுலகைச் சுற்றிவருவதால்
வந்த களைப்பா! -இல்லை
பாவை எனைப்பார்த்தும்
ஏற்பட்ட வியப்பா!

உன் ஒளிக்கதிரில்
எனை நீராட்டவா-இல்லை
என் முக அழகை -நீ
ஒட்டிக்கொள்ளவா!

ஆணினமென்றால் அப்படியே
அனுப்பியிருப்பேன் -நீ
என்னினமென்பதால்தான்
அனுமதிக்கிறேன்

வா வா வான்நிலவே
வந்து என்னோடு நீராடு
இருமுகமும்
இணைத்து சேர்ந்தாடு்

பகலில்கூட பளபளக்கும்
பட்டு நிலவே-என்
பட்டுக்கண்ணம் தொட்டுமீட்டு-இந்த

பாவையுள்ளம் பளபளக்கட்டும்

வெண்ணிலவும் பெண்ணிலவும்
ஒன்றிணைந்து
வெள்ளை நதிக்கு
விளையாட்டுக் காட்டட்டும்

நாளை முகநூலில் முகப்பில்
நம்மிருவரைப்பற்றியே
நளினத்தோடு பேச்சிருக்கும்
நதியலையில் ஆடும் நிலாக்களென்று..

//டிஸ்கி//இந்த தலைப்பில் முகநூலில் கவிதையெழுத சொன்னாங்க.
அதேன் இஸ்டத்து அள்ளி விட்டாச்சி சும்மா சும்மா.[எப்புடிக்கீது]
நம்மவூட்டுல நெட்பிராப்ளம் இருந்தாலும் அடிச்சி புடிச்சி அடுத்தாதிலிருந்து ஒரு கவுஜைய கிறிக்கிட்டோமுல்ல!
முன்புள்ள பதிவுக்கெல்லாம் பதில்போடலையின்னு கோவிச்சிக்காதீங்க
நம்மவூட்டுலயிருந்து போடலாமேன்னுதான்.ஓகே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது